என் திருமணம்:

CSIயில் ஆயராக பணிபுரிந்த Rev.Noel என்பவரின் மகளும், சேலம் அரசாங்க ஆஸ்பத்திரியில் வேலை செய்துகொண்டிருந்தவருமான N.மங்களவதனி என்பவரை 1970ம் ஆண்டு நான் மணமுடித்தேன். எனக்கு இரண்டு பிள்ளைகள் பிறந்தது.

அதில் மூத்த மகன் இப்போது சேலம் ஏற்காடு மலையில் டாக்டராக பணிபுரிகிறார். மருமகள் நான் வேலை செய்த அதே டேனிஷ்பேட்டையில் பெத்தேல் பெல்லோஷிப் மிஷன் ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிகிறார். அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் மகள் இப்போது (2014) 6ம் வகுப்பிலும், மகன் 5ம் வகுப்பிலும் படித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இரண்டாவது மகள். அவரும் திருமணம் முடித்து மருமகன் அமெரிக்கா ஆஸ்பரி தியாலஜி கல்லூரியில் M.Th, Ph.D படிப்பை முடித்து பெங்களுர் SAIACS வேதாகம கல்லூரி விரிவுரையாளராகவும், HODயாகவும் பணியாற்றுகிறார். அதோடு அவர் அமெரிக்காவில் Wilmore-ல் உள்ள John Wesly-யால் ஆரம்பிக்கப்பட்ட ஆஸ்பரி வேதாகம கல்லூரியில் Bபோர்ட் மெம்பராகவும், உலக பிரசித்திபெற்ற கன்வென்ஷன் செய்தியாளராகவும், வேதாகம ஆசிரியராகவும் உலகத்தின் பல்வேறு நாடுகளுக்கு அடிக்கடி சென்று ஊழியம் செய்துகொண்டிருக்கிறார். அவருக்கு ஒரு மகள் முதல் வகுப்பு படிக்கிறாள். கர்த்தர் எங்களுக்கு எந்த குறையும் வைக்காமல் மனநிறைவோடு வாழவும், சமாதானத்துடனும், ஆரோக்கியத்துடனும் குடும்பம் நடத்தவும், கடன் இல்லாத ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கையை எனக்கும், என் பிள்ளைகளின் குடும்பத்துக்கும் கிருபையாக அளித்து வழி நடத்துக்கிறார். கர்த்தருக்கே மகிமை.

"நானும், கர்த்தர் எனக்கு கொடுத்த பிள்ளைகளும்..... சேனைகளின் கர்த்தராலே... அடையாளங்களாகவும், அற்புதங்களாகவும் இருக்கிறோம்" .ஏசா 8:18.


மறுபடியும் முழுநேர ஊழியம்:

1964 முதல் FMPB மாநில முகாமில் மிஷனரி செய்திகளையும், மிஷனரி ஊழியத்தின் அவசரத்தையும், அவசியத்தையும் அங்கு நடத்திய பிரசங்கத்தில் கேட்டு நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். அன்று நான் என் வீட்டின் சூழ்நிலையை மனதில் கொள்ளாமல், உணர்ச்சிவசப்பட்டு எடுத்த அவசர தீர்மானத்தினால் உந்தப்பட்டு முழுநேர மிஷனரி பணியில் இறங்கினேன். பெரியமலைக்கு சென்றேன். ஆனால் என் வீட்டின் பரிதாப நிலை - என் குடும்பம் வறுமையின் உச்சக்கட்டத்துக்கு போன விவரத்தை என் நண்பன் எனக்கு எழுதிய கடிதம் அன்று நான் பெரியமலையில் மிஷனரி பணி செய்துகொண்டிருந்தபோது கையில் கிடைத்து. அதை வாசித்தபின்தான் நான் மிகவும் உணர்த்தப்பட்டேன். உள்ளத்தில் மிகுந்த வேதனையடைந்தேன்.

மிஷனரி பணியில் முழுநேர ஊழியனாக செல்ல கர்த்தர் என் உள்ளத்தில் உணர்த்தியதும், நான் முழுநேர பணிக்காக என்னை ஒப்புக்கொடுத்ததெல்லாம் பிழையான தீர்மானமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்து மிகவும் வாட்டி வதைத்து. பெரியமலை மிஷனரி பணிதளத்தை விட்டு ஊருக்கு திரும்பிவிட்டால், விசுவாசிகள், கிறிஸ்தவ உலகம் என்னைப்பற்றி என்ன நினைக்கும்?. கலப்பையின்மேல் கைவைத்து திரும்பிவிட்டவன் என்று கூறுவார்களே!


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM