உங்கள் மருமகள் உங்களை வெறுக்க காரணம் என்ன?.
தெரியவில்லை!.
நீங்கள் மறைக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அல்லது மருமகள் உங்களை வெறுக்கும் காரணத்தை கூற உங்களுக்கு பிரியமில்லை என்று நினைக்கிறேன் என்றேன்.
அவள்
ஏன் என்னை வெறுக்கிறாள்? என்பது உண்மையாகவே எனக்கு விளங்கவில்லை டாக்டர் என்றார்.
சரி. இனி நான் கூறும் ஆலோசனையை கேளுங்கள்.
உங்கள் மருமகளுக்கு எது பிடிக்கவில்லையோ அதை செய்யாதீர்கள் என்றேன்.
அந்த வீடு என் சொந்த வீடு. அப்படியானால் அந்த வீட்டில் என் மகனின் பிள்ளைகளை கண்டிக்க அல்லது திருத்த ஒரு பாட்டியாகிய எனக்கு உரிமையில்லையா?.
சகோதரி இது
உரிமை பிரச்சனையில்லை. குடும்ப சமாதானம், குடும்பம் உடையக்கூடாது. பெற்ற தாயை சொந்த மகன் வீட்டைவிட்டு துரத்திவிட்டான் என்ற கெட்டபெயர் உங்கள் மகனுக்கு வரக்கூடாது அதற்காக! இந்த ஆலோசனையை கூறுகிறேன். உங்களுக்கு உங்கள் வீட்டில் சமாதானம் வேண்டுமா? வேண்டாமா?.
வேண்டும்!. அதற்காக அந்த வீட்டில் நான் ஒரு அனாதைபோல் அல்லது அடிமைப்போல இருக்கவேண்டுமா?. சரி நீங்கள் கூறும் ஆலோசனையின்படி செய்கிறேன். சொல்லுங்கள் என்றார்.
முதலில் நான் கூறியதை மறுபடியும் கூறுகிறேன்.
மருமகளுக்கு பிடிக்காததை இனி நீங்கள் செய்யவேண்டாம். பிள்ளைகளைப்பற்றி பெற்ற தாய்க்கு இல்லாத அக்கறை உங்களுக்கு எதற்கு? நீங்கள் பிள்ளைகளை திட்டுவது, திருத்துவது
மருமகளுக்கு பிடிக்கவில்லை. ஆகவே இனி பிள்ளைகள் விஷயத்தில் நீங்கள் தலையிடாதீர்கள்.
நான் கூறுவதைப்போல் 6 மாதம் செயல்படுத்தி பார்த்து பிறகு எனக்கு எழுதுங்கள் என்றேன். ஒன்றை நீங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.
மருமகளை மாற்றவோ, அவளை உங்கள் வழிக்கு கொண்டுவரவோ முயலாதீர்கள்!.
உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்!. அது உங்களால் முடியும். ஆனால் மருமகளை நீங்கள் மாற்ற முடியாது. உங்களை நீங்கள் மாற்றிக்கொள்ளமுடியும். நான் இப்படி உங்களிடம் கூறுவதற்கு ஒரே காரணம்,
குடும்பம் உடையக்கூடாது. நீங்கள் நேசிக்கும் உங்கள் ஒரே மகனின் மனம் உங்கள் இருவர் பிரச்சனையால் வேதனைப்படக்கூடாது. மகனின் நிலை என்னவென்றால் ஒரு பக்கம் தன்னை பெற்று வளர்த்த
தாய் - மறுபக்கம் தான் நேசிக்கும் மனைவி. ஆகவே உங்கள் மகன் இரண்டு பக்கத்தில் உள்ளவர்களையும் ஒன்றுபோல் திருப்திபடுத்தமுடியாது!. ஆகவே வயதில் முதிர்ந்த உங்கள் காலம் முடியப்போகிறது. வாழவேண்டிய மகன் குடும்பமாவது சந்தோஷமாக வாழ உதவுங்கள்!.
|