மரண அறிவிப்பு:

பிரபல கன்வென்ஷன் பிரசங்கியும், பாடகருமான சகோ.பிரகாஷ் ஏசுவடியான் அவர்கள் 2014 ஜூலை 22ம் தேதி தனது 70வது வயதில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

இவர் எனக்காய் ஜீவன் விட்டவரே..... ஏசு போதுமே! போன்ற சில பாடல்களை இயற்றியவராவார்.

இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது மனந்திரும்பின அனுபவத்தை பெற்றவர். 1965ல் வருடத்தில் முதலாவதாக Youth for Christ ஸ்தாபனம் மூலம் வாலிபர்கள் மத்தியில் மகத்தான ஊழியம் நிறைவேற்றினார்.

ஒவ்வொரு ஊழியருக்கும் ஒவ்வொரு விதமான பலவீனம் உண்டு. இவருடைய Temperament திடீர் என்று ஏற்படுகிற கோபமாகும். YFCயிலிருந்து, AFC (அம்பாஸ்டர் பார் கிரைஸ்ட்) ஸ்தாபனத்தில் பயன்படுத்தப்பட்டார். அங்கிருந்து BAF ஸ்தாபனம் அதன்பின் பெங்களுர் ACTS என்ற ஸ்தாபனம், அதன்பின் FMPBயின் நிரந்தர மிஷனரி கன்வென்ஷன் செய்தியாளராக ஊழியம் செய்ய Rev.Dr.சாம்கமலேசன் அவர்கள் இவரை கேட்டுக் கொண்டார். அப்படியே செயல்பட்டார். ஆனால் அதில் தொடர பிரியமில்லாமல் உலக பிரசித்திப்பெற்ற மெத்த படித்தவர்கள் மத்தியில் செய்யப்படும் ஊழியமான RZIM Dr.ரவிசகரியா அவர்களில் ஸ்தாபனத்தில்தான் மரணம் வரை தொடர்ந்து ஊழியம் நிறைவேற்றினார்.

இலங்கை சத்தியவசன ஸ்தாபனமும் இவரை அடிக்கடி பயன்படுத்திக்கொண்டது. நல்ல வேதவிளக்கம் கொடுக்கும் சிறப்பு தாலந்து பெற்றவர்.

தான் ஒரு நாடார் ஜாதி கிறிஸ்தவராக இருந்தாலும் திருநெல்வேலி - கன்னியாகுமரி இரண்டு மாவட்ட நாடார் கிறிஸ்வதர்கள் தங்களுக்குள்ளே ஒருவருக்கொருவர் வெறுப்பதை பொது கூட்டங்களில் வெளிப்படையாக சாடும் ஒரே ஊழியர் இவர் மட்டுமே

கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் தோப்பூர் என்ற ஊரை சேர்ந்தவர். மனைவி இரண்டு பிள்ளைகள் இவருக்கு உண்டு. கர்த்தர்தாமே இவர் குடும்பத்துக்கு ஆறுதலை அளிப்பாராக.


முக்கிய அறிவிப்பு:

என்னோடு தொலைபேசியில் தொடர்புக்கொள்ள முடியாதவர்கள், கடிதங்கள் மூலம் ஜெபகுறிப்புகளையும், குடும்ப பிரச்சனைகளையும் அனுப்பலாம்.

இ-மெயில் மூலம் நீங்கள் எனக்கு எழுதினாலும் உங்கள் விலாசத்தையும், தொலைபேசி எண்ணையும் தயவுசெய்து குறிப்பிட்டால், கடிதம் மூலமாக பதில் எழுத இயலும். வாரம் இரண்டு நாட்கள்மட்டும் வீட்டில் நான் இருப்பதால் நீங்கள் அனுப்பும் இ-மெயில்க்கு கடிதம் மூலம் என் பிராயணத்தில் உடனே பதில் எழுதமுடியும். அதனால் இ-மெயில் அனுப்புபவர்கள் உங்கள் விலாசத்தையும், தொலைபேசி எண்ணையும் அனுப்புங்கள்.

காணிக்கை

சில வாசகர்கள் ஜாமக்காரன் பத்திரிக்கைக்காக காணிக்கை அனுப்பினேன் நீங்கள் பத்திரிக்கை அனுப்பவில்லை என்று எழுதுகிறார்கள். மணியார்டரில் நீங்கள் காணிக்கை அனுப்பும்போது எதற்காக அந்த பணம் அனுப்பினீர்கள் என்பது நீங்கள் எழுதமுடியாது. எனக்கு காரணமும் தெரியாது. ஆகவே பணம் அனுப்பிய உடன் ஒரு கடிதத்தில் உங்கள் முழு விலாசத்தையும் தொலைபேசி எண்ணையும் எழுதி எனக்கு பத்திரிக்கை அனுப்பவும் என்று அறிவிக்கவும். புதிய வாசகர்களாக இருந்தால் நான் புதிய வாசகர் என்று எழுதவும். நன்றி.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM