தாழ்ந்துபோனால் வாழ்வு உண்டு:

தாழ்மை உள்ளவனுக்கே கர்த்தர் கிருபையளிக்கிறார். தன்னைத்தான் தாழ்த்துகிறவன் எவனோ அவன் உயர்த்தப்படுவான் என்று வேதம் கூறுகிறது.

இப்போது யார் தாழ்ந்துபோவது, என் மனைவியின் டெம்பர்மென்ட் சுபாவம் இவ்வளவு மோசமாயிருக்கிறது அல்லது கணவன் இப்படி மோசமானவனாக இருக்கிறான். கணவன் அல்லது மனைவி தன் தாயின் ஆலோசனையின்படிதான் நடக்கிறார். இப்படி பலவிதமான பிரச்சனை உங்கள் குடும்பத்தில் இருக்கலாம். தவறு யாரிடம் என்று ஆராய்வது முக்கியமல்ல. நீங்கள் மனந்திரும்பினவராக இருந்தால் தவறு யாருடையது என்பதில் கவனம் செலுத்தாமல் நீங்கள் முதலாவது தாழ்ந்துப்போக முந்திக்கொள்வீர்கள். கர்த்தரை சந்தோஷப்படுத்தும் தீர்மானத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். ஆகவே இதில் மனைவி தாழ்ந்துபோக வேண்டுமா? கணவன் தாழ்ந்துபோக வேண்டுமா? என்ற கேள்விக்கு இடம் இல்லாது! யார் கர்த்தரை திருப்பதிப்படுத்த முந்திக்கொள்கிறார்கள் என்பதைத்தான் கர்த்தர் கவனிப்பார்.

ஆகவே உங்களை நியாயப்படுத்தாமல் கர்த்தரை திருப்திப்படுத்துங்கள். அப்போதுதான் நான் முதலாவது தாழ்ந்து போகட்டும் என்று உங்களை தாழ்த்த முன்வருவீர்கள் யாரிடம் தாழ்ந்து போகிறீர்கள்? உங்கள் சொந்த மனைவியிடம் அல்லது உங்கள் சொந்த கணவனிடம்தானே! இதில் ஈகோ பார்க்காமல், கௌரவம் பார்க்காமல் தாழ்ந்துப்போக முயன்றால் நீங்கள் குடும்ப வாழ்க்கையை கடைசிவரை சமாதானத்துடன் நடத்தலாம். பிள்ளைகள் அனாதை ஆகமாட்டார்கள். இதில் உங்கள் சாட்சிதான் மிக முக்கியம். அந்த சாட்சி கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் வீட்டில், வெளியில், சபையில் நீங்கள் சாட்சி உள்ளவர் என்பதை காண்பிக்கமுடியும். அன்பானவர்களே! நாம் வாழும் நாட்கள் மிகவும் குறுகியது. இந்த குறுகிய காலத்தில் கணவன்-மனைவியாக பிள்ளைகளோடு சந்தோஷமாக வாழுங்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் தோற்றுப் போனதாக நினைக்காதீர்கள். யாரிடம் தோற்றீர்கள்? உங்கள் கணவனிடம்தானே தோற்றீர்கள்!. அல்லது மனைவியிடம்தானே தோற்றீர்கள்!. இருக்கட்டுமே?. அவர்கள் உங்கள் சரீரத்தின் ஒரு பகுதிதானே! தோற்றால் என்ன? வாழ்க்கை உடைந்துபோகாதே! வாழ்க்கை வாழுவதற்கே!. இப்படி ஒருவர் எழுதியதை நான் வாசித்தேன்.


குடிகார புருஷன்! - புருஷன்மேல் சந்தேகம் - மனைவியின் நடத்தையில் சந்தேகம்! இப்படிப்பட்டவர்களோடு குடும்பம் நடத்துவது?

நான் முன்பே கூறினேன். என் ஆலோசனை முழுவதும் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டவர்களுக்குத்தான் பொருந்தும். ஆகவே கர்த்தரை யார் திருப்திப்படுத்த விரும்புகிறார்களோ அவர்களுக்குத்தான் என் ஆலோசனை பொருந்தும். இப்படி கொடுமைப்படுத்தும் புருஷனிடம் அல்லது மாமியாரிடம் அகப்பட்ட மனைவிமார்கள் நிறைய பேர் உண்டு. சில வீடுகளில் மனைவி பத்ரகாளிபோல இருப்பார். வீட்டை அவள் கட்டுப்பாட்டில் வைக்கவே அவள் விரும்புவாள். கர்த்தர் விரும்பும் இப்படிப்பட்டவர்களின் குடும்பம் விசுவாசிகளின் குடும்பம் அல்ல என்பதை சந்தேகமின்றி கூறலாம். இப்படிப்பட்ட குடும்பத்தில் இரட்சிக்கப்பட்டவர்கள் சூழ்நிலை காரணமாக அகப்பட்டுபோனார்கள் அல்லது அப்படிப்பட்டவர்களோடு திருமணம் முடிக்கவேண்டியதாய் போனது என்றால் இப்படிப்பட்ட குடும்பத்தில் இரட்சிக்கப்பட்டவர் என்று தனியாக நீங்கள் மட்டும் மாட்டிக்கொண்டீர்களேயானால், கர்த்தரை நேசிக்கிற உங்களுக்குமட்டும் கீழ்காணும் ஆலோசனை கொடுக்கிறேன்.

குடிகார புருஷனிடமிருந்தோ அல்லது Hysterical (Hysteria in women) மனநோயாளிபோல் உங்களை ஆட்டிப்படைக்கிற அல்லது கொடுமை செய்கிற நபராக உங்கள் மனைவி அமைந்தால் நிச்சயம் அவள் மனந்திரும்பாத மனைவியாகத்தான் இருப்பாள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM