சில பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடத்தில் தன்னைவிட வேறு யாராவது அதிக மார்க் வாங்கிவிட்டால், தன்னைவிட மற்றவர்கள் புகழப்பட்டால் இவர்களின் மனநோய் கோபமாக பிரதிபலிக்கும். அந்த பிரதிபலிப்பு பல விதத்தில் வெளிப்படும் அல்லது காணப்படும். இந்தியாவின் மாநிலங்களில் இரண்டு மாநில முதல்வர்களைபற்றி பலர் கூறகேட்டிருக்கிறேன். இவர்கள் முதல்வர்களாக வருவதற்குமுன் வெறும் அரசியல்வாதியாக இருந்தபோதும், சாதாரண மந்திரியாக பதவி வகித்தபோதும் மற்றவர்களுக்குமுன் தான் எந்த வகையிலாவது அவமானப்படுத்தப்பட்டால் அன்று அவர் வீடு திரும்பியவுடன் வீட்டில் தன் அறையை அடைத்து சத்தமாக தொண்டை கீழிய கத்துவார்களாம். சுமார் 10 நிமிடம் கத்திகத்தி மூச்சுவாங்க அதன்பின் கோபம் அடங்கி அப்படியே படுத்துவிடுவார்களாம். வீட்டில் இவர் கத்தி சத்தம்போடுவதை கேட்டு யாரும் பயப்படமாட்டார்களாம். உதவியாளர்களுக்கு குடும்பத்தினருக்கு இவர் அப்படி பைத்தியம்போன்று சத்தமிடுவது பழகிவிட்டது. வெளியில் நடந்த அவமானத்தை அல்லது கோபத்தை அடக்கிவைத்து வீட்டில் வந்து இப்படி சத்தம்போட்டு கத்தி தன் கோபத்தை அடக்கிகொள்வார் என்று வீட்டில் உள்ள யாவரும் அறிவார்கள். இது ஒருவகை மனநோய்.

ஒரு மனோத்துவ ஆராய்ச்சியாளர் கூறுகிறார். இப்படிப்பட்ட முன்கோப மனநோய் பிடித்த பைத்தியங்கள் எல்லாருடைய வீட்டிலும் வீட்டிற்கு 2 அல்லது 3 பேர் இருப்பார்கள் என்கிறார். சில மனநோய் வெளிப்படையாக காணப்படும். சிலது பார்வைக்கு தெரியாது. இப்படிப்பட்டவர்களை கல்யாணம் செய்தவர்கள். கணவனும்-மனைவியும் மனநல ஆலோசகரிடம் சென்று தன் பலவீனத்தை கூறி கோபம் மிக அதிகம் நீண்டுபோனால் என்ன செய்கிறோம் - என்ன பேசுகிறோம் என்று அறியாமல் போவதால் எங்கள் குடும்பம் உடைந்துவிடுமோ, எங்களை கண்டுகொண்டு இருக்கும் எங்கள் பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப்படுமோ என்று பயப்படுகிறோம். இதிலிருந்து விடுதலைபெற நான் என்ன செய்வது, இப்படிப்பட்ட புருஷனிடம்-மனைவியிடம் அந்த கோப சூழ்நிலையில் நாங்கள் எப்படி நடந்துக்கொள்வது என்று மனநல ஆலோசகரிடம் சென்று ஆலோசனை பெறுவது மிக அவசியம்.

இரட்சிக்கப்பட்ட விசுவாசியானால் மனநல ஆலோசகரிடம் ஆலோசனைக்கு செல்லாமல் கர்த்தரின் பாதத்தில் விழுந்துவிடுங்கள். கர்த்தரிடம் இப்படிபட்ட பலவீனம் கொண்ட மனைவியிடம் நான் எப்படி நடந்துக்கொள்வது என்றும் எனக்கு ஞானம் தாருங்கள் என்றும் கேளுங்கள். நம் ஆண்டவர் மனநல ஆலோசகரைவிட அற்புதமான ஆலோசனையை அருளுவார். தாங்கவும் சகிக்கவும் நான் மனநோயாளியான மனைவியிடம் நான் அன்புகூரவும் எனக்கு பெலம் தாரும் என்று கேளுங்கள்.

முதலாவது உங்கள் சுபாவத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உங்கள் கருத்தை மனைவி மீதோ, புருஷன் மீதோ, மாமியார் மீதோ திணிக்க முயலாதீர்கள். உங்களை நீங்கள் மாற்றிக்கொண்டாலே போதும். குடும்பம் உடையாது, விவாகரத்து வரை உங்கள் பிரச்சனை போகாது கர்த்தர் காத்துக்கொள்வார்.

இந்தியாவின் முதல் மிஷனரியான வில்லியம் கேரி அவர்கள் தான் நேசித்து திருமணம் செய்த மனைவியுடன் இந்தியாவில் மிஷனரி ஊழியம் செய்ய ஆரம்பித்தவுடன் மனைவி மனநோயாளியாக மாறிவிட்டார் மிகவும் கட்டுப்படுத்த முடியாத முரட்டுதனமான (Violent) மனநோயாளியாக இருந்தார். கேரியை மிஷனரி ஊழியத்துக்கு அனுப்பிய சபை, அவரை ஊழியத்தை நிறுத்தி நாடு திரும்பும்படி கேட்டுக்கொண்டார்கள். ஆனால் வில்லயம் கேரி மனநோயாளியான மனைவியுடன் வாழ்ந்து மிஷனரி ஊழியத்தை வெற்றிகரமாக முடித்தார். ஜீவ கீரிடம் அவருக்காக இப்போது பரலோகத்தில் காத்திருக்கிறது.

ஆகவே நீங்கள் சரியான விசுவாசிகளாக இருந்தால் வியாதியுள்ள மனைவியாக இருந்தாலும் மனநோயாளி என்ற வியாதியுள்ளவளாக இருந்தாலும் அதை கர்த்தர் கொடுத்த சிலுவையாக ஏற்றுக்கொண்டு முறுமுறுக்காமல் சுமந்து கர்த்தரின் பெலத்தால் வெற்றிகரமாக குடும்பம் நடத்துவீர்கள்.

திருநெல்வேலி, பாளையங்கோட்டை NGO காலனியில் அசம்பளீஸ் ஆப் காட் பாஸ்டர் என் பழைய நண்பர். இப்போதும் நண்பர்தான். இவர் மகன் சபையில் உதவி பாஸ்டர் ஆனால் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். மனைவி தன் கணவருடன் சேர்த்துவைக்கும்படி பாஸ்டர் வீட்டு வாசல் படியில் உண்ணாவிரதம் இருந்ததை எல்லா தமிழ் தினசரி பத்திரிக்கையிலும் புகைப்படத்துடன் செய்தி வந்தது.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM