அந்நியபாஷையோடு புத்தகத்ததையும் திறந்து காண்பித்து காப்பியடிக்க புத்தகத்தை பரீட்சை அறைக்கு கொண்டுவந்த இவர்களின் ஆவியானவருக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? என்ன தண்டனை கொடுப்பார்கள். அந்நியபாஷையின் மகிமையை பார்த்தீர்களா?.

இவர்களில் சிலர் நல்ல வேத அறிவு பெற்றவர்களாக இருந்தாலும் இவர்கள் சார்ந்த பெந்தேகோஸ்தே சபையின் உபதேசத்தில் அந்நியபாஷை பேசி பழகிப்போனதால் இப்போது மிஷனரி ஊழியம் செய்தாலும் விட்டகுறை - தொட்டகுறை என்பார்களே அதுபோல அந்த பழைய பழக்கமும் அதில் முன்பு அனுபவித்த போலி இன்பமும் இன்னும் இவர்களைவிட்டு போகவில்லை. இந்த பலவீனம் இவர்களோடு நாலு சுவர்களுக்குள் அடங்கிபோவது நல்லது. அதை உபதேசமாக்கி எழுத்திலோ, பிரசங்கத்திலோ இவர்கள் அறிவித்தால், தெளிவுபெற்ற நாம் இவர்களின் பெயரை குறிப்பிட்டு இவர்கள் பேசிய பாஷை போலி என்பதை கூற நமக்கும் கர்த்தர் அதிகாரம் கொடுத்திருக்கிறார்!. பயப்படவேண்டாம்!.

எப்படியோ ஒரு சிறு கூட்டமாகிலும் இந்த கட்டுரையால் தெளிவுபெற்றால் ஆவியானவர் மிகவும் சந்தோஷப்படுவார். இனியாவது இப்படிப்பட்ட ஊழிய பெருமகனார்கள், தாங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பாதபடி, சபை மக்களை பையத்தியக்காரர்களாக்காதபடி உதவி செய்வார்களாக என்று கேட்டுக்கொள்கிறேன்.

நான் பார்த்தது:
என் வாழ்க்கையில் ஒரு மணி 15 நிமிடங்கள் தொடர்ந்து
ஒரே இடத்தில் அமர்ந்து கவனித்த டிவி நிகழ்ச்சி.

2013 ஜுன் மாதம் 22ம் தேதி ஞாயிறு மதியம் 12:15 முதல் - மதியம் 1.30 மணி நிமிடம் வரை டிவியில் சால்வேஷன் சேனலில் சகோ.ஆர்.ஸ்டான்லி BYM ஸ்தாபகர் (வேலுர்) அவர்கள் 2008ல் நாகர்கோவிலில் சிஎஸ்ஐ ஹோம் சர்ச்சில் மிஷனரி கன்வென்ஷன் கூட்டங்களில் அளித்த அற்புதமான செய்தியை கண்டேன். சகோ.ஜட்சன் ஆபிரகாம் போன்றவர்களின் ஆத்துமாவுக்கு பிரயோஜனமில்லாத பிரசங்க நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்த அதே சிஎஸ்ஐ ஹோம் சர்ச் சபையினர் சகோ.ஆர்.ஸ்டான்லி போன்ற பைபிள் டீச்சர்களின் பிரசங்க ஏற்பாடுகளையும் செய்ததை ஹோம்சர்ச் சிஎஸ்ஐ ஆயர்கள் கமிட்டியை பொறுப்பாளர்களையும் சபை விசுவாசிகளையும் பாராட்டுகிறேன்.

அந்த செய்திகளை வீடியோ மூலம் பதிவு செய்து பல்லாயிரக்கணக்கான மக்களும் பிரயோஜனம் அடைய செய்த ஆர்.ஸ்டான்லி குழுவினரையும் பாராட்டுகிறேன்.

குறிப்பிட்ட அந்த செய்தி இன்றைய எல்லா சபையினருக்கும் மிகவும் பிரயோஜனமுள்ளதாக இருக்கும் என்பதற்காக அந்த குறிப்பிட்ட செய்தியையும் அவருடைய மற்ற பைபிள் வேதபாட செய்திகளின் DVDகளையும் பார்த்து, கேட்டு பயன் பெற ஜாமக்காரன் வாசர்களை கேட்டுக்கொள்கிறேன்.

சகோ.ஆர்.ஸ்டான்லி (BYM ஸ்தாபகர்) அவர்களின் செய்திகளை பெற கீழ்காணும் விலாசத்தில் தொடர்புக்கொள்ளலாம்.

(DVD - தமிழ் - ஆங்கிலம் பாஷைகளில் கிடைக்குமிடம்).

Bro. R.Stanley
13,Church Colony
Vellore - 632 006.
E-mail: [email protected]
www.stanleyonbible.com

Blessing Literature Centre
21/11, West Coovam Road
Chintharipet. Chennai - 600 002.
Ph.0091-44-28450411.
[email protected]


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM