நன்றாக ஜெபிக்கும் தாயாக உங்களை என் மனதில் உயர்வாக நினைத்திருந்த எனக்கு அந்த முதல்நாள் நீங்கள் பேசிய வார்த்தை, நீங்கள் போலியான விசுவாசி, உங்கள் ஜெபம் போலி, உங்கள் வேத வாசிப்பு போலி, இப்படியாக என் உள்ளத்தில் உங்கள்மேல் மோசமான அபிப்ராயம் உண்டானது. அதிலிருந்து நீங்கள் எங்கள் குடும்பத்துக்கு எங்கள் பிள்ளைக்கு எத்தனை நன்மைகள் செய்தாலும் அது போலியாகவே எனக்கு தோன்றியது. அது மாயமாலம் என்றே என் உள்ளம்கூறி கொண்டேயிருந்தது. அதனால்தான் முதல்நாளிலிருந்தே உங்களை வெறுக்க தொடங்கினேன்.

ஆனால் இப்போது நீங்கள் எங்களைவிட்டே ஒதுங்கிவிட்டீர்கள். இந்த வீட்டுக்குள் இருந்துக் கொண்டே நீங்கள் ஒதுங்கி வாழ்வதும், எதிலும் தலையிடாததும் எங்கள் உள்ளத்தில் வேதனையை உண்டாக்கிவிட்டது. எல்லாவற்றிக்கும் நான்தான் காரணம். என்னை மன்னித்துவிடுங்கள் அத்தை என்று அழுதாள். அவள் அழ என் மகனும் அழுதான். எனக்கும் அழுகை வந்தது.

உடனே மருமகளை நோக்கி இதை ஏன் முதல்நாளே என்னிடத்தில் சொல்லவில்லை. பொருள்கள் வாங்கிய விலைபட்டியல் பில் எல்லாவற்றையும் உன் அப்பாவிடமிருந்து நீ வாங்கியதை, 9 வருடத்துக்குபின் இப்போது காண்பிக்கிறாயே! உன் தகப்பனார் என்னை என்னைப்பற்றி என்ன நினைத்திருப்பார்?. எங்கள் ஜெபஐக்கியத்தில் உன் அப்பாவும் ஒருவராக இருக்கிறார். இதை ஆரம்பித்திலேயே என்னிடம் கூறியிருந்தால் இத்தனை கசப்பு நமக்குள் வளர்ந்திருக்காதே!, நான் அன்று முதல்நாள் இரவு உன்னிடம் எத்தனை மடத்தனமாக நான் பேசியிருக்கிறேன். அதுவும் திருமணநாளின் முதல் இரவு அன்றே இப்படி அற்பத்தனமாக கல்யாண சீதனத்தை குறித்து நான் பேசியிருக்கிறேனே!, என்னால் நம்பமுடியவில்லையே?. மற்ற பெண்களுக்கு நான் உபதேசம் செய்கிறேன். நானே என் மருமகளிடம் இப்படி நடந்துகொண்டேனே!. என்னை மன்னித்து விடும்மா? நான் அப்படி பேசியிருக்கக்கூடாது! என்று அழுதேன்.

என் மருமகளும் என்னிடம் கூறினாள் அத்தை நானும் இத்தனை வருடம் இந்த கசப்பை மனதில் வைத்து உங்களை வெறுத்து இருக்ககூடாது என்னை மன்னியுங்கள் என்றாள். மகனும் மன்னிப்பு கேட்டு அழுதான். மூவரும் முழங்கால் படியிட்டு ஒப்புரவாகி ஜெபித்தோம். அன்றிலிருந்து இன்றுவரை எங்கள் குடும்பம் நல்ல சாட்சியுடன் வாழ்கிறது. மாமியார்-மருமகளைபோல் அல்லாமல் தாயும்-மகளையும்போல் நாங்கள் ஒருவருக்கொருவர் பழகி சந்தோஷமாக வாழ்கிறோம் என்றார்.

நான் ஆலோசனை கொடுத்த ஒன்றரை மாதத்திலேயே இந்தமாற்றம் நடந்திருக்கிறது!.

இதேபோல் நெல்லையில் வேறு ஒரு இடத்தில் நடந்த கன்வென்ஷனில் ஆலோசனை நேரத்தில் இந்த மாற்றங்களை சாட்சியாக அந்த சகோதரி நேரில் வந்து அறிவித்தாள். தன் மருமகளையும் என்னிடம் அழைத்து வந்து அறிமுகப்படுத்தி நன்றி கூறி ஜெபித்து சென்றனர்.

ஆகவே பிரச்சனைகளுக்காக ஜெபியுங்கள் என்று பலருக்கு நீங்கள் கடிதம் எழுதினாலும், பிரச்சனையின் காரணத்தை கண்டுபிடிக்காமல் அதை சரி செய்யமுடியாது. அதற்காகத்தான் ஆலோசனையோடுகூடிய ஜெபம் அவசியம் என்கிறேன்.


ஆலோசனை - 2:
அமெரிக்கா - ஆஸ்ட்ரேலியா மற்றும் ஐரேப்பா கலாச்சாரம்:

வெள்ளைக்கார நாட்டு கலாச்சாரத்தில் வாழும் உள்ள நம் தமிழ்நாட்டு கிறிஸ்தவ தம்பதியினர் ஆலோசனைக்காக வந்தனர்.

அமெரிக்காவிலேயே வாழும் இந்தியர்களுக்கு பிறந்தவர்கள் இவர்கள். திருமணம் முடித்து தனிக்குடித்தனம் நடத்தும் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவேளை உணவுக்கு இவர்கள் வீட்டுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அவர்கள் குடும்பத்தில் சந்தோஷமாக வாழ்வதைப்போல்தான் காணப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை முறைகளை கேட்டேன். நாங்கள் ஒரு வாரத்திற்கான அட்டவணை எழுதி குளிர்சாதன பெட்டியில் (Refrigerator) ஒட்டி வைத்துவிடுவோம்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM