திங்கள்கிழமை கணவர் பாத்திரங்கள் கழுவி, வீட்டை துடைத்து சுத்தம் செய்யவேண்டும். செவ்வாய்கிழமை மனைவி பாத்திரங்களை கழுவி, வீட்டை துடைத்து சுத்தம் செய்யவேண்டும். பிள்ளைகள் Baby Sittingக்காக அழைத்துசெல்லவேண்டும். இப்படி அட்டவணை போட்டு வீட்டுவேலையை, பிள்ளை பராமரிப்பு வேலை ஆகியவைகளை பிரச்சனையில்லாமல் தங்களுக்குள்ளேயே திட்டமிட்டுக்கொண்டு சமாதானத்துடன் வாழ்கிறார்கள்.

அதேசமயம் 35 ஆண்டு காலம் அமெரிக்காவில் வாழும் மற்றொரு இந்தியர் வீட்டில் கணவன்-மனைவி இருவரும் எல்லோரையும்போல வேலைக்கு போகிறார்கள். பிள்ளைகளை பராமரிக்கிறார்கள். ஆனால் பாத்திரம் கழுவும் வேலை - வீட்டை துடைக்கும் வேலையை அந்த குடும்பத்தில் மனைவியானவள் புருஷனை செய்யவிடுவதில்லை. தான் வேலைக்கு சென்று வீட்டுக்கு எத்தனை மணிக்கு திரும்பினாலும் பாத்திரம், வீடு சுத்தம் செய்வது யாவும் தானே செய்யவேண்டும் என்று விரும்புகிறாள். தன் புருஷனை அந்த வேலைகளை செய்யவிடுகிறதில்லை. அந்த வீட்டுக்குள் புருஷன் பாத்திரம் கழுவுவதை வீட்டை துடைப்பதை சமையல் செய்வதை வெளியாட்கள் யாரும் காண வழியில்லை. ஆனாலும் தன் கணவன் அப்படிப்பட்ட வேலைகளை செய்வதை அந்த வீட்டு மனைவி அவமானமாக கருதுகிறாள். கணவனுக்கு பணிவிடை செய்வதை அவள் பெருமையாக கருதுகிறாள். அதை அவமானமாக கருதவில்லை. தான் செய்வது ஆணுக்கு அடிமைப்பட்டவள்போல் அவள் எண்ணவுமில்லை. ஆணுக்கு-பெண் சமம் என்ற உலக கொள்கையுடன் அந்த பெண் இணைந்துபோக பிரியப்படவில்லை. அமெரிக்கா நாட்டில் வாழும் அந்த குடும்பத்தில் நான் கண்ட சமாதானம் ஆவிக்குரிய சந்தோஷம் வேறு யாரிடத்திலும் காணவில்லை. நான் குறிப்பிட்ட அந்த வீட்டு மருமகளும் அவர்களைப்போலவே தன் கணவனுக்கு சேவை செய்கிறாள். மாமனாரின் உடைகளை மிஷனில் போட்டு உலர்த்தி அயர்ன் செய்து உதவுகிறாள். அமெரிக்கா கலாச்சாரத்தில் பல வருடங்கள் பழகிப்போன குடும்பம்தான் அது. ஆனால் அந்த குடும்பத்தில் அவர்கள் வாழும் வாழ்க்கை இந்தியர்களின் பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றில் அனுபவமாகும். கூட்டு குடும்ப இன்பத்தை ருசிக்க துடிக்கும் குடும்பம். அமெரிக்கா நாட்டிலேயே இரண்டு வித்தியாசமான இந்திய குடும்பத்தை உங்களுக்கு மாதிரியாக எழுதினேன்.

டாக்டர்.புஷ்பராஜ்யாகிய நான் என் வீட்டில் என் அறையில் தரையில் தூசி, குப்பைகளை கண்டால் துடைப்பத்தை எடுத்து வெறுமனே குப்பைகளை ஒதுக்கி ஒரு மூலையில் தள்ளிவைப்பேன். என்றாவது என் மனைவி அதை கண்டால் ஓடிவந்து உங்களை யார் இதையெல்லாம் செய்ய சொன்னது. யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்?. துடைப்பத்தை என்னிடமிருந்து பிடுங்கி அறையை சுத்தமாக்குவார்கள்.

ஆனால் தற்கால குடும்பங்களில் மனைவி அல்லது கணவன் அவிழ்த்துப்போட்ட துணியை எடுத்துவைக்க யாரும் முன்வருவதில்லை. முடிவாக கணவன்தான் எடுத்து வைக்கவேண்டும். கட்டிலில் உள்ள பெட்ஷீட்டை கணவன்தான் காலையில் மடக்கிவைக்கவேண்டும். பிள்ளைகளை குளிப்பாட்டி விடுவது முதல் பிள்ளைகள் பள்ளிக்கூடம் அனுப்புவது போன்ற சகல வேலையையும் கணவன்தான் செய்கிறார் என்ன கிறிஸ்தவ குடும்பமிது?.

மனைவி அல்லது கணவன் அப்படிப்பட்ட வேலைகளை செய்வதை அவமானமாக கருதக்கூடாது. இப்படிப்பட்ட செயல்கள் காணப்படும் குடும்பத்தை பெண் ஆதிக்கம் நிறைந்த குடும்பம் என்று இந்தியாவில் கூறுவார்கள். பல குடும்பங்களில் இப்படிப்பட்ட குற்றேவல்களை செய்யும் கணவன் இந்த வேலைகளை அவன் குடும்ப கடமையாக செய்வதில்லை. மனைவியின் ஆண் ஆதிக்க போக்கால், மனைவியின் அகம்பாவத்தால் குடும்பம் உடைந்துபோகக்கூடாதே! பிள்ளைகள் அனாதையாகிவிடக் கூடாதே! என்ற ஒரே காரணத்தினால்தான் அப்படி செய்கிறார்கள். இப்படிப்பட்ட வீட்டில் குடும்ப தாம்பத்தியம் இன்பமாக இருக்குமா? ஒரு மிஷின்போன்றுதான் (ரோபோட்) அவர்கள் சந்தோஷம் அமையும்.

இந்த லட்சனத்தில் இப்படிப்பட்ட சில குடும்பத்தில் பெண் TPM (சிலோன் பெந்தேகோஸ்தே) சபைக்கு போவாள் - கணவன் CSI சபை ஆராதனைக்கு போவார்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM