விவாகரத்து செய்த பாஸ்டர் ஒருவர் சபை ஆராதனை நடத்துவதோ, பாட்டு ஆராதனை நடத்துவதோ, சபையினரை ஜெபத்தில் நடத்துவதோ கூடாது. இவர் மேய்ப்பனின் தகுதியை இழந்துவிட்டார். நானே NGO காலனி சென்று AOG சபை பாஸ்டரை நேரில் சந்தித்து மகனை பாஸ்டர் ஊழியம் செய்வதிலிருந்து நிறுத்துங்கள் என்று ஆலோசனை கூறி வந்தேன். ஆனால் இதை எழுதும்போது ஆராதனையில் மகன் தொடர்ந்து ஜெபம் நடத்துகிறார் என்ற செய்தி வந்துகொண்டேயிருந்தது. கடிதம் மூலம் வசனத்தை சுட்டிக்காட்டி அறிவித்தேன்.

ஆனால் பாஸ்டர்.செல்வின் அவர்களும் மகன் பாஸ்டர்.நோவா அவர்களும் வேதவசனத்துக்கு கீழ்படிய மனமில்லை. வசனத்துக்கு பயம் இல்லை.

ஆராதனையில் மகன் பாட்டு ஜெப ஆராதனை நடத்துகிறார். மொபைலில் அதை எனக்கு சபை மக்களே காட்டுகிறார்கள். பாஸ்டர்கள் இருவரும் ஆவியில் நிறைந்து அந்நியபாஷை பேசுகிறார்கள். ஜனங்கள் ஆவியில் நிறைந்து அந்நியபாஷை பேசுகிறார்கள். இதைத்தான் போலி அல்லது மாய்மாலம் என்பது. அந்த ஆராதனையில் பாஸ்டர்கள் ஆவியில் நிறைந்தது பொய், சபைமக்கள் ஆவியில் நிறைந்ததும் பொய். பேசிய பாஷைகள் எல்லாம் பொய். நான் என் நண்பரைப்பற்றி இப்படி எழுதியதில் தவறேதும் உண்டா?

பெந்தேகோஸ்தே சபையின் பரிசுத்த ஆவி எப்படிப்பட்டது? என்று இப்போது விளங்குகிறதா? மிஷனரி வில்லியம் கேரி மனநோய் பிடித்த மனைவியை சொந்த நாட்டுக்கு அனுப்பியருந்தால் அவர் மிஷனரி ஊழியம் செய்யவும் தகுதியற்றவர் ஆகியிருப்பார். அவரே அந்த மனைவியின் தொல்லையை சிலுவையாக சுமந்துகொண்டு அவளுக்கு சாப்பாடு ஊட்டி அவளை குளிப்பாட்டி கடைசிவரை அவளோடுதான் வாழ்க்கை நடத்தினார். ஒரு அந்நிய பாஷையாவது கேரி அவர்கள் பேசினாரா? ஆவியானவர் அவருக்குள் இருந்ததால்தான் மனநோயுள்ள மனைவியை அவரால் நேசிக்க முடிந்தது. மனைவி சுகமாக இருந்து AOG பாஸ்டர் மனநோய் கொண்டிருந்தால் இதே மனைவி அவரைவிட்டு போயிருப்பாரா அல்லது தலைமை பாஸ்டர் மனைவி மனநோய்யுள்ள தன் மகனை வீட்டைவிட்டு துரத்தியிருப்பாரா? மனசாட்சியுள்ளவர் தெய்வபயம் உள்ளவர் சிந்தியுங்கள். இனியாவது இப்படிப்பட்ட சாட்சியில்லாதவர்கள் அந்நியபாஷை பேசுவதை நிறுத்துங்கள்.

கர்த்தர் வீட்டை கட்டாராகில் கட்டுகிறவர்கள் பிரயாசம் விருதா. சங் 127:1.

பாளையங்கோட்டை NGO காலனி AOG சபை தலைமை பாஸ்டராக இருக்கும் அவர்களின் மகன் பாஸ்டர்.நோவா தன் மனைவியை வீட்டைவிட்டு துரத்தி விவாகரத்து செய்ததும் அவர் மனைவி பாஸ்டர் வீட்டில் தர்ணா செய்ததும் இதே ஜாமக்காரனில் வாசித்திருப்பீர்கள். அந்த பாஸ்டரின் 2014 ஆகஸ்ட் பத்திரிக்கையில் பக்கம் 8 பக்கம் கண்ட முக்கிய செய்தி கீழே காணலாம். இவர் குறிப்பிட்ட சட்டம் செயல்பட்டால் AOG சபை பாஸ்டர் மேல்தான் சட்டம் பாயும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM