ஆசாரியன் ஏலியும் தாய்பாஷையில் பதில் கொடுக்கத்தான் சாமுவேலுக்கு ஆலோசனை கொடுத்தான். பரலோக தேவனும் பையனை குழப்ப பரலோக பாஷையிலோ, தூதர்கள் பாஷையிலோ பேசவில்லை!. என்பதை கவனியுங்கள். நம் தேவன் முட்டாள் அல்ல. அவரவர்களுக்கு என்ன பாஷை தெரியுமோ, அந்தந்த பாஷையில்தான் அந்த ஆரம்பகாலத்திலிருந்து இன்றுவரை பேசுகிறார்.

அதேபோல அவரவர்களின் பாஷையில் ஜெபிப்பதைத்தான் கர்த்தர் விரும்புகிறார். சோர்வு ஏற்பட்டால் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு பேசலாமே! உங்கள் பிரச்சனையை கர்த்தரிடம் கூற ஆவியானவர் உங்கள் வாயை ஏன் உபயோகிக்கவேண்டும்?

பால்தினகரன் கூறுவதைப்போல் தூதர்கள் பேசுவதை கேட்க நமக்கு தெய்வீக பாஷையை கர்த்தர் நமக்கு தரமாட்டார். நமக்கு தெரிந்த பாஷையிலேயேதான் பேசுவார். இது தனக்கு பரலோக பாஷை தெரியும், தூதர் பாஷையும் தெரியும், தெய்வீக பாஷையும் தெரியும் என்று பால்தினகரன் பொது மக்களுக்குமுன் தன்னை பெருமைப்படுத்திக்கொள்ள செய்யும் தந்திரம் ஆகும்.

நான் பிரசங்கிக்கும் சபைகளில் ஆலோசனை நேரத்தில் என்னிடம் பேசவும், ஜெபிக்கவும் ஏராளமானவர்கள் வருவார்கள். அவர்களுக்கு ஆலோசனைக்கூற பைபிள் எடுத்து வாசியுங்கள் என்பேன். சிலர் வேத புத்தகம் கொண்டுவரவில்லை என்பார்கள். சரி என்னிடத்தில் உள்ள பைபிளை கொடுக்கிறேன். உங்களுக்கு எந்த பாஷையில் வேத வசனத்தை சரளமாக எளிதாக வாசிக்க முடியும் என்று கேட்பேன். மலையாளம், ஆங்கிலம், ஹிந்தியா, தமிழா? என்று கேட்பேன் பிறந்து வளர்ந்தது திருநெல்வேலிதான். ஆனால் படித்தது வடஇந்தியாவில் ஆகவே ஹிந்தி பைபிள் வாசிப்பேன். ஆங்கிலம் வாசிப்பேன். ஆங்கிலத்தைவிட ஹிந்தி எனக்கு நன்றாக வாசிக்க இயலும் என்பார்கள். உடனே ஹிந்தி பைபிளை எடுத்து கொடுத்து நான் கூறும் வசனத்தை எடுத்து வாசியுங்கள் என்றுகூறி வசனத்தின்மூலம் அவர்களுக்கு ஆலோசனை கொடுப்பேன்.

சாதாரண மனிதர்களாகிய நாமே நமக்கு எது வாசிக்க வசதியோ! அந்த பாஷையில் வேதத்தை வாசிக்கிறோம்!. ஜெபிக்கிறோம்!.

ஞானத்தை தருகிற தேவாதிதேவன் நமக்கு விளங்காத வேற்று பாஷையை கொண்டு நம்மிடம் பேசுவாரா? அல்லது நம்மை வேற்று பாஷையில் பேச வைப்பாரா?. மறுபடியும் சொல்கிறேன். நம் கர்த்தர் முட்டாள் அல்ல!. அதிஞானசொரூபி!.

நான் மேலே குறிப்பிட்ட 5ம் வகுப்புவரை படித்த அந்த பாஸ்டர் கூறுகிறார். நான் ஜெபிக்கும்போது திடீர் என்று READ என்று ஒரு சத்தம் கேட்டேன். அதாவது வாசி என்பதற்கு பதிலாக ஆங்கிலத்தில் READ என்று ஆண்டவர் கூறுவாராம். உடனே வேதத்தை எடுத்து வாசிப்பேன் என்கிறார். அதுபோலவே அடிக்கடி கர்த்தர் வசனத்தின்மூலம் என்னோடு பேசி இதை சபை மக்களுக்கு சொல் என்பார்! இப்படி அந்த பாஸ்டர் தன் பிரசங்கத்தில் கூறுவார். நம் தேவன் தமிழ் தெரியாத வெள்ளைக்காரரா? இந்த பாஸ்டருக்கு ஆங்கிலம் தெரியாது என்று ஆண்டவருக்கு தெரியாதா? எதற்கு Read என்று கூறவேண்டும்?. என்ன ஏமாற்றுதனம்!. இது!.

நிறைய மேடை தீர்க்கதரிசிகள் ஜெபிக்கும்போது மேடையிலேயே Yes Jesus, Yes Jesus என்று உச்சரிப்பதை கேட்கலாம். இது சகோ.DGS.தினகரன் தன் ஊழியத்தில் நடப்பித்த அன்றைய நாடகமாகும். மக்களை நம்பவைக்க அன்று அவர் கையாண்ட தந்திர முறையாகும். மேடையில் ஜெபித்துக்கொண்டிருக்கும்போதே ஆண்டவர் என்னமோ இவரிடம் இரகசியமாக சொல்லுவதை போலவும், அதற்கு இவர் தலையாட்டி Yes Jesus, Yes Jesus என்று பதில் கூறுவதைப்போலவும் இவர் காண்பிக்கும் அந்த செய்கை மேடை நாடகம் ஆகும்.

அதை இப்போதுள்ள டூப்பளிக்கேட் குட்டி தினகரன்மார்களில் பலர் சகோ.ஜஸ்டின் ஆபிரகாம் போல, சகோ.மோகன் சி.லாசரஸ் போல, சகோ.ஆலன்பால் போல இன்னும் பெரும்பாலான தினகரன்கள் நாட்டில் பெருகிப்போனார்கள். இவர்களும் அதே மேடை நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். கிறிஸ்தவ ஜனங்களும் அதை உண்மை என்று நம்பிவிடுகின்றனர். என்ன ஏமாற்றுதனம். ஜாக்கிரதை!.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM