இஸ்மவேல்:

இஸ்மவேல் சந்ததியை ஆசீர்வதித்த தெய்வம் அவர்களை செழிக்க வைத்தார். தன் தகப்பன் ஆபிரகாம் காலத்திலேயே தகப்பனின் நாட்டைவிட்டு வெளியேறி பாலஸ்தீனத்தில் குடியேறி அங்கிருந்து விரட்டப்பட்டு, அரேபிய நாடுகளில் அகதிகளாக வாழ்ந்தார்கள். இவர்களிலிருந்து அரேபியாவில் உருவானதுதான் இஸ்லாம் மார்க்கம்.


பாலஸ்தீனா நாட்டின் உதயம்:

யூதர்கள் தங்கள் நாடு என்று அறிவித்த இஸ்ரவேல் நாடு எங்களுக்கும் சொந்தம்தான். எங்கள் தகப்பனும் ஆபிரகாம் முதல் மகன் எங்கள் முற்பிதாதான் முதல் மக்கள்தான் நாட்டை ஆளும் உரிமை உண்டு. இரண்டாவது மகனாக பிறந்த ஈசாக்கின் சந்ததியான இஸ்ரவேலருக்கு ஆளும் உரிமை கிடையாது. அதில் வாழும் உரிமை எங்களுக்கும் வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடினார்கள். எல்லா அரபு நாடுகளும் குறிப்பாக எகிப்தும் அந்த போராட்டத்துக்கு உதவினார்கள். யாசர் அரபாத் என்பவர் தலைமையில் ஒரு வழியாக அனைத்து நாடுகளும் பாலஸ்தினர்களுக்கு நாடுவேண்டும் என்று (இஸ்ரவேல்) யூதர்கள் அமைத்து கொண்ட இஸ்ரவேல் நாட்டுக்கு அருகே பாலஸ்தீனம் என்ற நாடு உருவானதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரச்சனை என்னவென்றால் யுத்தத்தில் அழிந்துப்போன சாலமோன் கட்டிய ஆலயம் பாலஸ்தீனா பகுதியில்தான் இருப்பதாக யூதர்கள் எண்ணிக்கொண்டிருந்தனர். இஸ்ரவேல் (யூதர்களின்) எல்லைப்பகுதியில் இஸ்மவேல் சந்ததியான பாலஸ்தீனர்கள், இஸ்லாமியர்கள் தொழும் பெரிய மசூதி ஒன்றை மிகப்பெரிய செலவில் கட்டிக்கொண்டனர். அதை அல்-அக்ஸா என்று பெயர் வைத்துள்ளனர். இதற்காக அனைத்து நாட்டு இஸ்லாமியரும் பணம் செலவழித்து தங்கத்தால் வேய்ந்த அந்த கோபுரங்களை அமைத்து முகமதுநபியின் புண்ணிய ஸ்தலமாக ஆக்கி வழிபட்டனர்.

பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள் அடிக்கடி இஸ்ரவேல் நாட்டில் உள்ளவர்களை சீண்டி கோபப்படுத்திக்கொண்டிருந்தனர். அவர்களை அழிப்பதற்காக இஸ்ரவேலர்கள் அடிக்கடி பாலஸ்தீனர்களுக்கு எதிராக யுத்தம் செய்யவேண்டி வந்தது. அதில் பல பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டனர். யாசர் அரபாத் இந்த தீவிரவாதிகளை கட்டுப்படுத்த முடியவில்லை அவரும் வியாதிப்பட்டு இறந்தும் போனார்.

ஆனால் முன்பைவிட அதிகமாக மறுபடியும் யூதர்களுக்கு எதிராக பாலஸ்தீனத்திலிருந்து ராக்கெட்டுகளும், குண்டுகளும் வீசப்பட்டது. இத்தனை திரளான யுத்த போர் கருவிகள் பாலஸ்தீனர்களுக்கு எந்த வழியில் கிடைக்கிறது என்பதை யூதர்கள் ஆராய்ந்தார்கள். ஒரு வழியாக யுத்த தளவாடங்கள் வரும் வழியை கண்டுபிடித்தனர். ஏற்கனவே 1981ம் ஆண்டு முஸ்லீம் மசூதியான அல்-அக்ஸாவில் ஒரு சுரங்க பாதை உண்டு என்பதை யூதர்கள் கண்டுபிடித்துவிட்டனர். அதன்பின் இஸ்ரவேல் ராணுவம் காஸா என்ற பகுதியில் சோதனை நடத்தியபோது எகிப்து நாட்டிலிருந்து காஸா எல்லைக்குள் வர நூறு சுரங்க பாதைகள் அமைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனர். அதன் வழியாகத்தான் ராணுவ தளவாடங்கள் போர் கருவிகள் பல அரபு தேசங்களிலிருந்தும் தீவிரவாதிகளுக்கு கிடைக்கிறது என்பதை அறிந்ததும் அத்தனை சுரங்க பாதையும் இஸ்ரவேல் ராணுவத்தால் முற்றுமாய் அழிக்கப்பட்டது.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM