வீட்டு வேலை செய்யும் மனந்திரும்பின அனுபவம் உள்ள ஒரு வாலிப பெண்ணுக்கு அந்த வீட்டு எஜமாட்டி தன் வீட்டில் உள்ள வேதபுத்தகத்தை இலவசமாக கொடுத்தபோது அவள் அதை வாங்கவில்லை. அம்மா, நீங்கள் எனக்கு இதுநாள்வரை கொடுத்த கூலி பணத்தை கொஞ்சகொஞ்சமாக சேர்த்து வைத்துள்ளேன். நான் சம்பாதித்த பணத்தில்தான் எனக்கு வேதபுத்தகம் வாங்கவேண்டும் என்பது என் ஆசை என்றாள்.

வேதத்தின் அருமை அறிந்தவர்களுக்குதான் வேதத்தின் மதிப்பும் விளங்கும் மற்றவர்களுக்கு அது விளங்காது. வேதபுத்தகமே விலை பெற்ற செல்வம் நீயே... என்று நம் கீர்த்தனையில் புலவர் வேதத்தைக்குறித்து புகழ்ந்து பாடியுள்ளார்.

இந்த குறிப்பிட்ட சொல்லோவியம் என்ற தமிழ் வேத புத்தகம் கீழ்காணும் விலாசத்தில் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளலாம்.

Tamil Bible Society
Green View. Karode.po
Kanyakumari.Dt Tamil Nadu
S. India - 629 151
Phone: 91 4651274473
Mobile: 91 9442364089, 91 9159869208
Email: [email protected]
Web: www.tamilbiblesociety.com

கண்டதும் - கேட்டதும்:

சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்களின் VCDஐ தங்கள் விலாசம் எழுதாமல் யாரோ எனக்கு அனுப்பினார்கள். அதை அநேக மாதம் கழித்துத்தான் பார்க்க நேரம் கிடைத்தது. பிரசங்கம் ஆறுதல் தரும் பிரசங்கம். ஆனால் ஜெப வேளையில்தான் இப்படிப்பட்டவர்களிடமிருந்து நிறைய பொய்கள் வெளிவரும். அந்த VCDயிலும் அதைத்தான் கண்டேன்.

துணிகர பொய்:

ஜெபநேரம் HIV வியாதி இயேசு சுகமாக்குவதை காண்கிறேன். சர்க்கரை வியாதிகளை இயேசு சுகமாக்குவதை காண்கிறேன் என்பது போன்ற துணிகர பொய்களை இந்த பிரசங்க VCDயிலும் அள்ளிவிடுகிறார். அதில் குறிப்பிடும்படியான வித்தியாசமான ஒரு பொய் வெளிப்பாடு என்னவென்றால்:

1). ஒரு சகோதரியை காண்கிறேன் திருமணமாகி கருவுற்று பலமுறை கலைந்து விடுவதாக கதறுவதை காண்கிறேன். சகோதரி உன் கர்ப்பப்பையில் குழந்தையின் கருவை ஒரு வலுசர்ப்பம் கடித்து உறிஞ்சிகொள்கிறது. அதனால்தான் ஒவ்வொரு முறையும் நீ கர்ப்பமுற்றாலும் அது கலைந்துவிடுகிறது. இன்று உனக்கு விடுதலை என்று கர்த்தர் உரைக்கிறார். பொல்லாத சர்ப்பமே இனி அந்த சகோதரியை தொடாதே இப்போதே அவளைவிட்டு ஓடிப்போ என்று உனக்கு கட்டளையிடுகிறேன்.

2). இந்த கூட்டத்தில் இன்றாவது எனக்கு இந்த வியாதியிலிருந்து சுகம் கிடைக்காதா என்று பல பெண்கள் கதறுவதை காண்கிறேன். இயேசுவே இன்றைக்கு இவர்கள் யாவரையும் நீர் சுகமாக்கியே தீரவேண்டும். நீர் இவர்களை சுகமாக்காமல் யாரையும் இங்கிருந்து அனுப்பக்கூடாது.

குறிப்பு: மேலே வாசித்த இரண்டு கட்டளைகளை ஜெபத்தில் மோகன் சி.லாசரஸ் அவர்கள் கூறுவதை நான் அறியவேண்டித்தான் இந்த VCD எனக்கு அனுப்பினார்களோ? தெரியவில்லை.

மோகன் சி.லாசரஸ் பிசாசுக்கும் கட்டளை கொடுக்கிறார். இயேசுவுக்கும் கட்டளையிடுகிறார். முதலாளி தன் வேலைக்காரனுக்கு கட்டளையிடுவதைப்போல் வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவாதிதேவனுக்கு திறப்பின் வாசலில் ஜெபிக்க வந்தவர்களை சுகமாக்காமல் அனுப்பக்கூடாது என்று கடவுளுக்கே கட்டளையிடும் துணிகரம் இவரின் பல கூட்டங்களின் VCDயில் காணலாமே? இது புதிதல்ல என்றாலும் கடவுளுக்கு கட்டளையிடும் துணிகரம் மிக பயங்கரம். மேலும் பாம்பு சர்ப்பத்தை உறிஞ்சி குடிக்கும் சங்கதி எனக்கும் புதிய செய்தியாகும். இதை நம்ப பல பிஷப்மார்கள் உண்டு. பெரிய படிப்பாளிகள், கிறிஸ்தவ சபைகளும் உண்டு.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM