இப்போது உலகமே உற்றுபார்க்கும் ஒரே நாடு
இஸ்ரவேல். இப்போது மிக பயங்கரமான யுத்தம் அங்கு நடந்துக் கொண்டிருக்கிறது.
உலக நாடுகள் யாருக்கு ஆதரவு தரவேண்டும்
இஸ்ரவேலுக்கா? - இஸ்மவேல் (பாலஸ்தீனியருக்கா?) என்பதில் மிகவும் குழப்பமடைந்திருக்கிறார்கள்.
பலருக்கு ஏன் கர்த்தர் இஸ்ரவேலர்களை அல்லது யூதர்களை மட்டும் நேசிக்கவேண்டும். எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள் என்றுதானே கர்த்தர் கூறினார். அப்படியிருக்க ஏன் இந்த பட்சபாதம் என்று பலர் கேட்கிறார்கள். இவைகளைக்குறித்து நீங்கள் அறியும்முன்
இஸ்ரவேலர் யார்?
பாலஸ்தீனம் என்ற நாடு யாருக்கு உரியது?
யூதர்கள் யார்? என்பதை முதலில் அறியவேண்டும்.
அதன்பின் இஸ்மவேலர்கள் என்பவர்கள் யார்? அவர்களின்
பூர்விகம் என்ன? என்பதையும் அறியவேண்டும். இவைகளை அறிய
ஆதாம்-ஏவாள் என்ற உலகத்தின் முதல் மனிதர்களிடமிருந்து சரித்திர விவரம் அறியவே வேண்டும்.
ஆதாமின் சந்ததியில் காயின்-ஆபேல் சகோதரர்களோடு ஏராளமான பெண் பிள்ளைகளும், ஆண் பிள்ளைகளும் பிறந்து வாழ்ந்துக்கொண்டிருந்தனர். காயின்-ஆபேல் ஆகியவர்கள் பிறப்பதற்கு முன்பும் - பின்பும் இவர்கள் பிறந்து வளர்ந்தார்கள். ஆதி 5:4. அதன்பின் ஜனங்கள் பலுகிபெருகினார்கள். பாவம் பெருகினது. அதன் காரணமாக தேவ கோபத்தால் முதல்
உலக அழிவு தண்ணீரினால் உண்டானது. அதில் கடவுளை நேசித்த
நோவா குடும்பம் மட்டும் காப்பாற்றப்பட்டது. நோவா மூலமாக ஜனங்கள் பலுகிபெருகி அவர்கள் மூலமாக புதிய சந்ததிகள் உண்டானது.
அதன்பின் ஆபிரகாம்-சாராள் மூலம் விசுவாச சந்ததிகள் உருவாகின. இவர்கள் பிள்ளைகள்தான்
ஈசாக்கு-இஸ்மவேல் என்பவர்களாவர். |