கடிதம் 2: காரக்கோணம்
CSI மெடிக்கல் காலேஜ் பெரிய கடனில் மூழ்கிக் கொண்டிருக்கும்போது மெடிக்கல் காலேஜுக்கு
கருப்பு அல்லது வெள்ளைப் பணம் எங்கிருந்து வரும்.
குறைகளைக்கூறி மெடிக்கல் காலேஜை விட்டு வெளியேறிய அந்த டாக்டர்கள் ஒருவேளை ஏதாவது குற்றத்தில் அகப்பட்டு அவர்களின் வேலையில் பிரச்சனைகள் உண்டாகியிருக்கும். அதனால்தான் அவர்கள் சம்பளம் வாங்காமல் வெளியேறினார்கள் என்று நாங்கள் கருதுகிறோம்.
கடிதம் 3: சில மாதங்களாக காரக்கோணம்
CSI மெடிக்கல் காலேஜ் பண ஊழலை குறித்தும் அங்கு நடக்கிற சில பெரிய தவறுகளைக்குறித்தும் நான் அனுப்பிய விவரங்கள் எதுவும் செப்டம்பர் மாத மலையாள ஜாமக்காரனில் வெளியிடவில்லையே ஏன்?
கடிதம் 4: காரக்கோணம்
CSI மெடிக்கல் காலேஜைக்குறித்து நீங்கள் எழுதியது நூற்றுக்குநூறு உண்மை. இந்த கடிதத்துடன் மேலும் சில விஷயங்களையும் அதன் ஆதாரங்களையும் இத்துடன் அனுப்புகிறேன். நிச்சயமாக இவைகள் உங்களுக்கு பயன்படும். மெடிக்கல் காலேஜ் மெரீட் சீட் (Govt கோட்டா) கிடைக்காமல் ஏமாற்றப்பட்டவருடைய போட்டோவுடன் கூடிய ஆதாரங்களை இத்தோடு அனுப்புகிறேன். மக்களுக்கு உண்மை தெரியவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவர்கள் அல்ல. மெடிக்கல் காலேஜ்ஜில் நாங்கள் சிலராக கூடி ஜெபிப்பவர்கள் ஆவோம். எங்கள் காரக்கோணம்
CSI மெடிக்கல் காலேஜ் மிகவும் நல்ல காலேஜ் ஆகும். ஒரு சிலரினால் இந்த நல்ல காலேஜ் களங்கப்படக்கூடாது.
CSI மெடிக்கல் காலேஜைப்பற்றி நீங்கள் எந்த விவரம் கேட்டாலும் எங்களுக்கு தெரிந்ததை உங்களுக்கு உடனே ஆதாரத்துடன் அனுப்பி வைப்போம். கர்த்தர் உங்கள் (ஜாமக்காரன்) காவல்காரன் பணியை ஆசீர்வதிப்பாராக.
|