மதுரை - ராமநாதபுரம் CSI திருமண்டலம்
பிஷப் Rt.Rev.Dr.M.JOSEPH,MA.,BGL.,BD.,MTh.,Ph.D.,

Rt.Rev.Dr.M.JOSEPH
MA., BGL., BD., MTh., Ph.D.,

மதுரைக்கு புதிய பிஷப்பாக பொறுப்பேற்றபின் பிஷப் அவர்களை நான் சந்திப்பது இதுதான் முதல்முறையாகும்.

மதுரை திருமண்டலம் சார்பாக உங்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்கிறேன் என்று கூறி பிஷப் அவர்கள் என்னை வரவேற்றது மிகவும் சந்தோஷமான காரியம். பிஷப் அம்மாவும் என்னை வரவேற்று உபசரித்தார். கர்த்தர்தாமே பிஷப் அவர்களை ஆசீர்வதிப்பாராக.

மதுரை கூட்டங்கள் (காளவாசல்) All Saints Church மதுரை கத்தீடரல், கீழ்வாசல், மெத்தடிஸ்ட் ஆகிய சபை மக்களும், ஆயர்களும் இக்கூட்டங்களில் பங்குகொண்டனர். கூட்டம் ஆசீர்வாதமாக அமைந்தது. சத்தியவசனம் (Back to the Bible) Associate Director Mr.ANIL அவர்கள் சத்தியவசன இந்திய ஊழியங்களைக்குறித்து விளக்கம் கொடுத்து சபை மக்களை வரவேற்று பேசினார். மூன்று நாட்கள் கூட்டமும் மிகவும் ஆசீர்வாதமாக அமைந்தது. Rev.V.Johnson அவர்கள் கூட்ட ஏற்பாடுகளை ஜெப ஆயத்தத்துடன் நடத்தி சத்தியவசன ஊழியத்துக்கு மிகவும் நல்ல ஒத்துழைப்பை நல்கினார்.

குறிப்பு: சத்தியவசனம் Back to the Bible வானொலி (ரேடியோ) நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய நாட்களில் மத்திய அலை வரிசையில் MW 1125Khz ல் காலை 6 மணி முதல் FEBA வானொலி மூலமாக ஒலிப்பரப்பாகிறது. டிவி நிகழ்ச்சிகள் தமிழன் டிவியில் ஒவ்வொரு ஞாயிறுகிழமை நண்பகல் 12 மணியிலிருந்து மற்றும் 12.30மணி வரை திங்கள்கிழமை காலை 6.30 மணி முதல் 7 அதே மணிக்கும் தமிழன் டிவியில் ஒளிப்பரப்பாகிறது.

Dr.தியோடர் வில்லியம்ஸ், Dr.சாம்கமலேசன், Dr.புஷ்பராஜ், சகோ.சுசிபிரபாகரதாஸ், சகோ.பாகவதர் வேதநாயகம் சாஸ்திரியார் ஆகியவர்களின் பிரசங்கம் சிடி, டிவிடியும், சத்தியவசன பாடல்கள் சிடியிலும் மற்ற ஆவிக்குரிய புத்தகங்கள், இவற்றோடு Dr.தியோடர் வில்லியம்ஸ் அவர்களின் வேதபாட புத்தகங்கள் கீழே உள்ள விலாசங்களில் எழுதி கேட்டுபெற்றுக்கொள்ளலாம்.

அவர்களுடைய முகவரி: சத்தியவசனம்
9,வெங்கட்ராமன் ரோடு
கமலா 2வது மெயின் ரோடு
சின்ன சொக்கிகுளம், மதுரை - 625 002. இந்தியா
தொலைபேசி: 0452-2532316
இ-மெயில்: [email protected]
வெப்சைட்: www.sathiyavasanam.in

Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM