சகோ.சாம் ஜெபதுரை அவர்களும் இந்த சொல்லோவியம் தமிழ் பைபிளை அறிமுகப்படுத்தினார்கள் என்று அறிந்தேன். நானும் இதை வாங்கி வைத்து உபயோகிக்கிறேன். ஆனால் இந்த வேதத்தில் ஒரு விசேஷம் என்னவென்றால் உபதேச சம்பந்தமான வசனங்களுக்கு அந்த பக்கத்திலேயே அடிப்பக்கதில் அடிகோடிட்டு, சிலர் இந்த குறிப்பிட்ட வசனத்தை இப்படியும் அர்த்தம் கொள்கிறார்கள் என்றும் மற்ற வித்தியாசமான பலவித உபதேசங்கள் கொண்ட மாற்று சபையினரின் அதே வசனத்தைப்பற்றிய அபிப்ராயத்தையும் வாசிப்பவர்கள் அறிந்துக்கொள்ள (Commentary) வியாக்கியானம்போல ஒவ்வொரு பக்கத்திலும் அதன் அடிப்பகுதியில் குறிப்பு எழுதியுள்ளதுதான் இதன் சிறப்பு அம்சமாகும்.
ஆனால் சகோ.மோகன் சி.லாசரஸ் அவர்கள் திடீரென்று இந்த வேதத்தை விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிட்டார். காரணம் இந்த பைபளில் நான்கு இடங்களில் ஜெபத்தில்
பெயர் அழைக்கும் பொய்யான செயலை வசன அடிப்படையில் அந்த பக்கத்தின் அடிபகுதியில் எழுதப்பட்ட குறிப்பான வியாக்கியான பகுதியில்
ஜெபத்தில் பெயர் அழைப்பது வேத புத்தகத்தில் இல்லாத ஒன்றாகும். அது தவறு என்றும் குறிப்பிட்டுள்ளார்கள். ஜெபத்தில் ஆட்களின் பெயர் அழைக்கும் அவரின் அந்த பிழையான உபதேசத்துக்கு அந்த பைபிள் ஆதரவு கொடுக்காததால் அந்த நல்ல பைபிளை தன் கூட்டத்தில் விளம்பரப்படுத்துவதை நிறுத்திவிட்டார்.
ஆனால் தமிழ்நாட்டின் அனைத்து கிறிஸ்தவ புத்தக நிலையங்களிலும் சொல்லோவியம் தமிழ் பைபிளுக்கு ஏராளமான வரவேற்பு உண்டு. ஆனால் பிரிண்டிங் பிரஸ்ஸிலிருந்து புத்தகமாக வெளியே எடுக்க அந்த பைபிளை தயாரித்த
தமிழ் பைபிள் சொசைட்டிக்கு போதிய முன்பணம் இல்லை. இப்போது சுமார் 2500 பைபிள் பிரிண்டிங் பிரஸ்ஸில் தயாராக உண்டு. இதுதான் கடைசி பிரிண்ட் இதற்குமேல் அச்சடிக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
மேலும் மற்ற பைபிளைப்போல் அல்லாமல் இந்த பைபிள் மிக உயர்ந்த பேப்பரில் அச்சிட்டு, உயர்ந்த தரம் உள்ள தோல் அட்டையில் பைண்டிங் செய்ததால் இதன்விலை மிக அதிகம். ஒரு பைபிள்
2500 ரூபாய் ஏற்குறைய 45 அமெரிக்க டாலர் மதிப்புடையது. தேவையானவர்கள் கீழ்காணும் விலாசத்தில் அல்லது இமெயில் வழியாக தொடர்புகொண்டு தபால் செலவை அவர்களிடம் கேட்டறிந்து பெற்றுக்கொள்ளலாம். நானே சிலருக்கு கனடா, ஜெர்மனி, ஆஸ்ட்ரேலியா போன்ற நாடுகளுக்கு அந்த பைபிளை மாதிரிக்காக அனுப்பிவைத்து அறிமுகப்படுத்தினேன். ஜாமக்காரன் வாசகர்கள் இந்த பைபிளை வாங்கி பயன் அடையலாம்.
|