கேள்வி: டாக்டர் எங்கள் தூத்துக்குடி
CSI டையோசிஸ்க்கு ஒரு நல்ல பிஷப் கிடைக்கமாட்டாரா?. இப்படியே கோர்ட் வழக்கு என்று இழுத்துக்கொண்டே போனால் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல எத்தனை காலம் வாழ்வது. இப்போதுள்ள டையோசிஸ் ஆட்சியில் ஆளாளுக்கு ஆளுகை செய்கிறார்கள். எங்கள் ஊழிய கஷ்டங்களை இடம் மாற்றல்களைக்குறித்து நிர்வாகிகளிடம் கூறி நல்ல முடிவை நாங்கள் காணமுடியவில்லை. இதற்கு முடிவுதான் என்ன?
பதில்: உங்கள் பழைய பிஷப்
Rt.Rev.J.D.ஜெபச்சந்திரன் அவர்கள் சபை மக்களுக்கு எழுதிய பாவ அறிக்கையை
அடுத்த பக்கத்தில் (பக்கம் 18) உள்ளதை வாசித்துவிட்டு பிறகு தொடர்ந்து என் பதிலை வாசித்துப்பாருங்கள்.
1). பிஷப் அவர்கள் பாவ அறிக்கையை வாசித்தீர்களா? இதில் பிஷப் அவர்கள் வேண்டிக்கொள்வது பகிரங்க பாவ மன்னிப்பு. அவர் பாவமன்னிப்பை
CSI சினாட் ஏற்றுக்கொண்டு சினாட் தன்னை சஸ்பெண்ட் செய்ததை ரத்து செய்யவேண்டும் என்கிறார்.
2). அவர் மன்னிப்பு கடிதத்தை CSI சினாட் ஏற்றுக்கொண்டது. ஆனால்
CSI சினாட் நிர்வாக கமிட்டி அறிவிப்பது என்னவென்றால் பிஷப்பை சஸ்பென்ட் செய்தததை சிஎஸ்ஐ சினாட் ரத்து செய்ய விரும்பவில்லை. ஆனால் சினாட் பிஷப்பிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் பிஷப் அவர்களை
விருப்ப ஓய்வு எடுக்கும்படி ஆலோசனைக் கூறுகிறது. அப்படி
விருப்ப ஓய்வு எழுதி கொடுத்தால் ஓய்வு பெறும் பிஷப்புக்கு என்னென்ன சலுகை உண்டோ அவைகளை பெறலாம் என்றும் பணம், பென்ஷன் ஆகியவற்றோடு குடியிருக்க சொந்த வீடு ஆகியவைகளையும் தருகிறோம் என்கிறார்கள்.
இந்த நல்ல சந்தர்ப்பத்தை அவர் பயன்படுத்திக்கொண்டால் டையோசிஸ் முழுவதும் சேர்ந்து அருமையான ஓய்வு சிறப்பு விழா நடத்தி சகல கவுரவத்தோடும், சமாதானத்துடனும் அவர் புதிய வீட்டில் புது வாழ்க்கையை அமைதியாக தொடங்கலாம். பென்ஷன் அவருக்கு மரணம்வரை சோறு போடும். பிஷப் என்ற கவுரவம் நிலைத்து நிற்கும். மட்டுமல்ல, தூத்துக்குடி டையோசிஸ்க்கு சீக்கிரம்
புது பிஷப் தேர்ந்தெடுக்கப்பட்டு மிகவும் சீராக திருமண்டலம் இயங்க உதவி செய்த நற்பெயரும் அவருக்கு கிடைக்கும்.
ஆனால் பிஷப் அவர்கள் எனக்கு விருப்ப ஓய்வு வேண்டாம் என்றும், என் சஸ்பெண்ட் உத்தரவை
ரத்து செய் அல்லது என்னை டிஸ்மிஸ் செய் என்கிறார். பிஷப்பின் இந்த
பிடிவாதத்தின் பின்னே மிகப்பெரிய சட்ட பிரச்சனை இருக்கிறது. அதாவது கோர்ட் மறுபடியும் பிஷப்பாக அவரை நியமிக்க சினாடுக்கு நீதிமன்றம் கட்டளையிடலாம். காலம் நீண்டுபோகபோக அவர் ஓய்வுகாலமும் முடிவுக்கு வரும். அப்படி ஒய்வுகாலம் முடிவுக்கு வந்தால் சஸ்பெண்ட் ஆனவருக்கு டையோசிஸ்ஸிலிருந்து எந்த
பண உதவியும், பென்ஷனும் கிடைக்காத நிலை பிஷப்புக்கு உண்டாகும். அது பிஷப் அவர்களுக்கு தீமையாகதான் முடியும் என்று எல்லாரும் எச்சரித்துவிட்டனர். ஆனால் பிஷப் அவர்களின் பிடிவாதம் நீங்கிய பாடில்லை.
|