|   மற்றொரு பக்கம் 
			பிசாசுக்கு வல்லமை உண்டு என்றும், பிசாசை அழிக்க 
			இயேசு கிறிஸ்துவால் முடியாது என்றும் கூறி அந்த கருத்தை உண்மையாக்கும் வகையில் பல பிசாசு சம்பந்தமான 
			படங்களையும், செத்துப்போன ஆவிகளைப்பற்றிய வேத உபதேசத்துக்கு புறம்பான சினிமா படங்களையும் எடுத்து, பெரும் கூட்ட மக்களை குழப்பத்தில் ஆக்கமுயலுகிறார்கள். இப்படிப்பட்ட 
			சினிமா அல்லது சீரியல் படங்களை எடுக்க யூத பணக்கார வியாபாரிகள் பலர் சினிமா தயாரிப்பாளருக்கு பண உதவிகளை செய்கிறார்கள்.
 யூதர்கள் இன்னும் மனம் திரும்பவில்லை. ஆண்டவரோ மனவேதனையுடன் எருசலேமை பார்த்து கண்ணீர்விட்ட நிலையில் இருக்கிறார்.   இத்தனை காலம் பல 
			பெரிய யுத்தங்களில் தாங்கள் ஜெயித்தது தங்களின் சொந்த சாமர்த்தியம் என்று யூதர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்காக 
			கர்த்தரே யுத்தம் செய்து இஸ்ரவேல் மக்கள் மனம்திரும்ப வேண்டி காத்துக்கொண்டிருக்கிறார் என்பதை 
			யூத மக்கள் இன்னும் உணர்ந்தபாடியில்லை.
 ஆகவே அன்றைய தீர்க்கதரிசனமாக சங் 122:6ல் எருசலேமின் சமாதானத்துக்காக வேண்டிக்கொள்ளுங்கள், உன்னை நேசிப்பவர்கள் சுகித்திருப்பார்களாக என்று கர்த்தர் கூறியுள்ளார். இதுவரை இஸ்ரவேலுக்கு உதவிய அமெரிக்காவிடமிருந்து கிடைத்த உதவியும் நின்றுபோகும் சூழ்நிலை உருவாகியுள்ளன. இஸ்ரவேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து பாதுகாப்பு அல்லது உதவி செய்து தொடர்ந்தால் அமெரிக்கா மீது எல்லா 
			இஸ்லாமியரும், அல்கொய்தாவுக்கு பதிலாக இப்போது தோன்றியுள்ள 
			ISIS என்ற மற்றொரு தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து இஸ்ரவேல் மீது தாக்குதல் நடத்துவார்கள்.  ஆகவே இஸ்ரவேலுக்கு உதவி செய்து தேவையில்லாமல் 
			இஸ்லாமியரின் பகையை ஏன் அதிமாக்குவானேன் என்று 
			அமெரிக்கா செனட்டில் பலர் இஸ்ரவேல் நாட்டுக்கு பாதுகாப்பு மற்றும் ராணுவ உதவி அளிப்பதை நிறுத்திவிடும்படி கூறிவிட்டார்கள்.  |