வாக்களித்த தெய்வம் வாக்குப்படி சாராள் பிள்ளை பெறாதப்படி சாராளின் கர்ப்பத்தை அடைத்திருந்தார். வருடங்கள் கடந்து ஏறக்குறைய 100 வயது ஆனது. சாராளுக்கும் பெண்களுக்குரிய மாதபோக்கு நின்று ஆண்டுகள் பல ஆகிவிட்டன.
மலடி என்ற பெயரும் அவளுக்கு நிலைத்தது. அப்போதுதான் சாராள் கர்த்தர்மேல் வைத்த விசுவாசத்தின் எல்லையை கடந்து மனுஷ சிந்தனையில் ஆலோசிக்க தொடங்கினாள். அன்றைய காலத்தில் ஆபிரகாம்தான் உலகில் மிகப்பெரிய பணக்காரனாக இருந்தான். தங்களுக்கு குழந்தையே இல்லாமல் போனால் ஆபிரகாமின் ஏராளமான சொத்துக்களுக்கு வாரிசு இல்லாமல் போகுமே என்று சிந்தித்து வாடகை தாயாக தன் வீட்டில் வேலை செய்த அடிமை(வேலைக்காரியான)
ஆகாரிடம் தன் உள்ளத்தின் திட்டத்தை கூறி அவளை சம்மதிக்க வைத்தாள். அடுத்து தன் புருஷனான
ஆபிரகாமிடம் நிலைமையைக்கூறி நம் வயது முதிர்ந்த நிலையில் யார் முதலில் மரிப்போம் என்று அறியாத நிலையில் நம் சொத்துக்களை பராமரிக்க, அனுபவிக்க ஒரு உரிமையுள்ள பிள்ளை அவசியம் நமக்கு வேண்டும் அதேசமயம் அது உங்கள்
இரத்த சம்பந்தமான பிள்ளையாகவும் இருக்க வேண்டும்.
ஆனால் என் மூலமாக பிள்ளை உண்டாகாதபடி நான் வயது முதிர்ந்தவளாகி போனேன். ஆகவே இனி எனக்கு பிள்ளை உருவாகமுடியாது. ஆகவே என் வீட்டு
அடிமை வேலைக்காரியான ஆகார் என்பவளுடன் நீங்கள் சேர்ந்து அதன்மூலம் உங்கள் இரத்த சம்பந்தமான
கரு அவள் கர்ப்பத்தில் சேர்ந்து ஒரு குழந்தை உருவாகட்டும். நாம் அந்த பிள்ளையை வளர்த்துவோம் என்றாள். ஆபிரகாம் பதில் கூறாமல், தடையேதும் சொல்லாமல் சம்மதித்தான்.
பொதுவாக யூத கலாச்சாரத்தில் குழந்தை தேவையானவர்களுக்கு அடிமை பெண்கள் வாடகை தாயாக இருந்து அவர்களுக்கு குழந்தை பெற்று கொடுத்தபின் குழந்தையை அவர்களிடம் கொடுத்துவிட்டு போய்விடவேண்டும்.
யெப்தா குடும்பத்தில் நடந்ததைப்போல அன்றைய காலத்தில் அப்படி ஒரு ஏற்பாடு இருந்தது. ஆனால் சாராள் செய்த தவறு அடிமையான வேலைக்காரியை
மறுமனையாட்டியாக அதாவது சட்டப்படியான இரண்டாம் மனைவி ஸ்தானத்தில் வேலைக்காரியை அமர்த்திவிட்டாள். ஆகவே ஆகார் (வேலைக்காரி) ஆபிரகாமிடம் சேர்ந்ததால்
கர்ப்பவதியானாள். தான் கர்ப்பவதியானோம் என்று அறிந்தவுடன்
ஆகார் உள்ளத்தில் பெருமை வந்தது. வீட்டு எஜமாட்டியைப்போல் அவள் அகம்பாவத்துடன் நடந்துக்கொண்டு முதல் மனைவியான சாராளை எஜமாட்டியாக எண்ணி பணிவு காட்டாமல் சாராளை அலட்சியப்படுத்த தொடங்கியபோது சாராளுக்கு கோபம் வந்தது. ஆகாரை மறுபடியும் முன்புபோல அடிமையாக வேலைக்காரியை நடத்துவதுபோல் ஆகாரை நடத்தினாள். மட்டுமல்லாமல் அவளை கொடுமைப்படுத்தவும், கடினமாக வேலை வாங்கவும் தொடங்கியதால்
ஆகார் சாராளின் கொடுமையை தாங்கமுடியாமல் ஆபிரகாமின் வீட்டைவிட்டே ஓடினாள். அங்கு வழியில் கர்த்தருடைய தூதனானவர் அவளை சந்தித்து நல்ல ஆலோசனைகளைக்கூறி சட்டப்படி திருமணம் செய்த ஆபிரகாமின் மூத்த மனைவியான சாராளிடம் இனி உன் அகம்பாவத்தைக் காட்டாதே. சாராளுக்கு நீ
அடங்கியிரு. நீ அடங்கிபோவதே உனக்கு நல்லது என்ற நல்ல ஆலோசனை கொடுத்து (ஆதி 16:9-12). வயிற்றில் வளரும் குழந்தையைக் குறித்து தீர்க்கதரிசனமும் கூறினார்.
|