| . கட்டியக்காரன் (தானி 3:4) |
- அரசு கட்டளையை ஊரில் பறைசாட்டுவோன் |
| . கலாதி (எஸ்றா 4:15) |
- கலகம், சண்டை, புரட்சி |
| . கலிக்கம் (வெளி 3:18) |
- கண்ணிலிடும் மருந்து |
| . கிரியிருப்பவர்கள் (2 இராஜா 14:14) |
- பிணைக் கைதிகள் |
| . கறளை (எரே 48:6) |
- பிரயோஜனமில்லாத |
| . காங்கை (ஏசா 25:5) |
- வெப்பம் |
| . காய்மகாரம் (1சாமு 18:9) |
- பொறாமை |
| . கிரியாப்பிரமாணம் (ரோம 3:27) |
- செயல்களில் முக்தியடைய முயற்சித்தல். |
| . கிரித்தியங்கள் (நியா 2:19) |
- தீய பழக்கங்கள், காலங்காலமாக விடாமல் வைத்திருக்கும் தீய கிரியைகள் |
| . குருக்கு (ஆதி 3:18) |
- நெருங்சில் செடி (அதிக முட்களை கொண்ட ஓர் தாவரம்) |
| . குங்கிலியம் (யாத் 30:34) |
- ஒருவகை நறுமணப் பொருள். (வெள்ளை குங்கிலியம், கருங்குங்கிலியம் என இரண்டு வகை இருப்பதாக தெரிகிறது) |
| . குலாரி வண்டில் (ஏசா 66:20) |
- மிருகங்கள் இழுத்துச்செல்லும் வண்டி. பல்லாக்கு |
| . கொறுக்கை (ஏசா 19:6) |
- கோரைப்புல் / நாணல் |
| . கொடி மாசி (யோபு 38:37) |
- நிலையற்று அலையும் மேகங்கள் |
| . கும்பு (எசே 7:14) |
- ஜனக்கூட்டம் |
| . கொம்மை (நெகே 3:1,11) |
- இவ்வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு.
இவ்விடத்தில் பெரிய மதில்களின் மேல் ஏற்படுத்தப்படும் காவல் மாடங்கள் என பொருள்படும். |
| . கோரி (யோபு 21:32) |
- கல்லறை, சமாதி |
| . சாமாசி பண்ணும் தூதன் (யோபு 33:23) |
- மத்தியஸ்தர், சமரசம் செய்பவர் |
| . சம்பாரம் (எசே 24:10) |
- உணவில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள். |
| . சலக்கரணை (2 இராஜா 4:13) |
- கரிசணையோடு |
| . சளுக்கு (எரே 5:28) |
- நயமாக பேசுதல் |
| . சன்னது (எஸ்றா 7:11) |
- ஆவணம், கடிதம், அரசாணை |
| . சர்ப்பனை (அப் 25:3) |
- வஞ்சனை, பதுங்கி இருந்து தாக்குவதற்கு சூழ்ச்சி |
| . சன்னதக்காரன் (உபா 18:11) |
- பில்லி சூனிய, ஏவல் வேலை செய்கிறவன் |
| . சுயம்பாகி (ஆதி 40:1) |
- சமையற்காரன் |
| . சீதளம் (ஆதி 8:22) |
- பல அர்த்தங்கள்உண்டு. குளிர்ச்சி என்ற அர்த்தம் |
| . சிரேஷ்டம் (நாகூம் 3:8) |
- தலை சிறந்தது. |
| . சொகுசா (எசே 1:4,8:2) |
- துத்தநாகமும், செம்பும் கலந்த ஓர் உலோகம். |
| . சுணை (எரே 51:27) |
- கூர்மையான முட்கள் போன்ற கொடுக்கு. |
| . தகசுத்தோல் (யாத் 25:5,26:14) |
- கடற்பசுவின் தோல், (நீர் நாய், நீர் பசு) |
| . தஸ்திர அறை (எஸ் 6:1) |
- பத்திரங்கள், அரசு ஆவணங்கள் வைக்கும் அறை |
| . தர்ப்பணம் (யாத் 38:8) |
- கண்ணாடி (வெண்கல கண்ணாடி) |
| . தாக்கீது (தானி 6:7,8,12) |
- ஆணை |