கேள்வி: இலங்கையில் எங்கள் சபை ஆராதனையில் சபை குருவானவர் வாசிக்கும் ஜெபம் எனக்கு குழப்பத்தை உண்டு பண்ணுகிறது. அந்த ஆராதனை கிரமத்தில் எழுதியிருப்பதாவது: பரமதந்தை, உம்முடைய முழுசபையோடும் மற்றும் புனிதர்களின் உறவோடும் நாம் இந்த அப்பத்தையும் இரசத்தையும் உமக்கு முன்வைத்து படைப்புகள் அனைத்துடனும் உமது மைந்தனின் மரணத்திலும் வெற்றியிலும் களிகூர்ந்து இனி வரபோகிறவை அனைத்திற்காகவும் எம்மை ஆயத்தப்படுத்தி அவர் எமக்காக நிறைவேற்றிய சகலத்திற்கும் நன்றி செலுத்துகிறோம் ... இவ்வார்த்தைகள் சரிதானா?
மேலும் .....மகா இரக்கமுள்ள தந்தையே உமது அன்பான மைந்தனின் திரு உடலாலும் இரத்தத்தினாலும் நாம் பங்கு கொள்ளும்போது உமது புனித ஆவியானவர் எம்மையும் இந்த முழு உலகத்தையும் புனிதப்படுத்தி..... என்று எழுதப்பட்ட இந்த கருத்து சரிதானா?
பதில்: உங்கள் சபை ஆராதனை கிரமத்தில் குறிக்கப்பட்ட
புனிதர்களின் உறவோடு என்ற வார்த்தை வேதவசன அடிப்படை அல்லாதது ஆகும்.
புனிதர்கள் என்று குறிப்பிடுபவர்கள் St.
Mary, St. Antony போன்ற மரித்த புனிதர்கள் ஆவர். இவர்கள்
புனிதர்களானாலும் செத்துப்போனவர்கள் என்பதை நாம் அறிவோம். ஆகவே செத்துப்போன இவர்களால் நமக்கு எந்த பயனும் இல்லை. இவர்கள் நமக்கு எந்த அற்புதமும் செய்யமுடியாது. பிரசங்கி 9:5. சங் 88:10,யோபு 14 இந்த வசனங்கள் வாசித்து தியானித்துப்பாருங்கள். உங்கள் சபை லிட்டர்ஜி, கத்தோலிக்க சபை லிட்டர்ஜி போல தோன்றுகிறது. அந்த ஆராதனை கிரமத்தில் உபயோகிக்கும் விஷயங்கள் தவறான அர்த்தம் உள்ள வார்த்தைகள் ஆகும்.
அடுத்தது, இயேசுவின் இரத்தம், காயம் ஆகிய யாவும் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டவர்களுக்கு மட்டுமே பொருந்தும். இயேசுவின் இரத்தம்
பைப் தண்ணீர் அல்ல! எல்லாரையும் அது கழுவாது. உலக மனிதர்கள் யாரானாலும் பாவத்தை ஒத்துக்கொண்டு பாவ அறிக்கை செய்து அந்த பாவத்தைவிட்டு விடும்போது
திருமைந்தனின் இரத்தம் அந்த நபரை கழுவி புனிதப்படுத்தும். 1யோ 1:8,1:9, நீதி 28:13. இந்த வசனங்களை வாசியுங்கள் விளங்கும்.
|