இஸ்ரவேல் மக்கள் யூதர்களை
மனந்திரும்பவைக்க கர்த்தர் அவர்கள் யூத இன தீர்க்கதரிசிகளை கொண்டு பேசினார். ஆனால் அவர்களுக்கு செவிகொடுக்கவில்லை.
யூதர் புற ஜாதிகளை அற்பமாய் எண்ணுவார்கள். ஆகவே ஒருநாள் வரும் அந்த புறஜாதிகள் வாய்மூலம் சுவிசேஷம் அறிவிப்பார்கள். அதைத்தான் ஏசாயா தீர்க்கன் ஏசா 28:11ல்
பரியாச உதடுகளினாலும் இவர்கள் பரியாசம் பண்ணி ஒதுக்கினார்களோ அவர்கள் மூலமாய் கர்த்தர் பேசவைப்பாராம். அடுத்த வார்த்தை
அந்நிய பாஷை, எபிரேய பாஷை, அரேமய பாஷை இந்த பாஷைகள் அல்லாத
அந்நிய இனத்தை இவர்களுக்கு இயேசுதான் சமாதான கர்த்தர் அவரிடத்தில் ஆறுதல் உண்டு என்று
அந்நிய பாஷை பேசும் வேற்று மொழிக்காரர்களை கொண்டும் கர்த்தர் யூதர்களோடு பேச வைப்பாராம். ஆனால் இவர்களே
கேட்க மாட்டோம் என்பார்கள் என்று தீர்க்கதரிசனமாக கூறப்பட்டது. இதைத்தான்
பெந்தேகோஸ்தேகாரர்கள் பரிசுத்த ஆவியின் நிறைவுக்கு
அந்நிய பாஷை அடையாளம் என்று இந்த வார்த்தை தவறாக போதிக்கிறார்கள்.
மேலே இஸ்ரவேலே கர்த்தரை நம்பு. சங் 115:9 இஸ்ரவேல்
கர்த்தரை நம்பி கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தால் கர்த்தர் கூறுகிறார்.
இஸ்ரவேலுக்கு விரோதமான குறி சொல்லுதல் இல்லை.......... விரோதமான மந்திரவாதமுமில்லை என்றார். எண் 23:23.
மேலே கூறப்பட்ட வசனத்தை இன்று நம் கிறிஸ்தவர்கள் வாக்குதத்தமாக எடுத்துக்கொண்டு வசனம் இப்படி சொல்லும்போது கிறிஸ்தவர்களும், இஸ்ரவேலர்கள்தான் பின் எப்படி
பில்லி சூனியம் கிறிஸ்தவர்களைத் தாக்குகிறது. பிசாசு சேட்டை கிறிஸ்தவர்களை பாதிக்கிறது என்று கேட்கிறார்கள். இவர்கள் மற்றொரு வசனத்தை மறந்துபோகிறார்கள்.
ரோம 9:6ல் இஸ்ரவேல் வம்சத்தார் எல்லாரும் இஸ்ரவேலரல்லவே என்று எழுதப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் என்னவென்றால் இஸ்ரவேல் தேவன் எதிர்ப்பார்த்தபடி வசனத்துக்கு கீழ்ப்படியாமல் போனால் அவர்கள் பெயருக்குத்தான் இஸ்ரவேலர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அதாவது
பெயர் கிறிஸ்தவர்களைப்போல் இருப்பார்கள். வசனத்தின்படி பாவத்தைக்குறித்து மனம்வருந்தி தங்களை திருத்திக்கொண்டு உண்மை கிறிஸ்தவர்களாக அல்லது உண்மை இஸ்ரவேலராக வாழ்ந்தால் அவர்களை எந்த
மந்திரவாதமும், பிசாசும் ஒன்றும் செய்யமுடியாது.
அதனால்தான் எரே 9:26ல் இஸ்ரவேல் எல்லாரும் இஸ்ரவேலுக்கு கொடுக்கப்பட்ட சட்டத்தின்படி சடங்குக்காகத்தான் தங்கள்
நுனிதோலை அறுத்துக்கொண்டார்களே தவிர, இருதயத்தில்
விருத்த சேதனம்
இல்லாதவர்கள் என்று கர்த்தர் கூறுகிறார். இருயத்திலேயே விருத்த சேதனம்
அதாவது இருதய சுத்தம் இல்லாமல் போனால் இஸ்ரவேலுக்கு கர்த்தரால் அருளப்பட்ட பாதுகாப்பு கிடைக்காது. பிசாசு அவர்களை தாக்கும், பில்லி சூனிய
மந்திரவாதமும் கிறிஸ்தவர்களையும் (இஸ்ரவேலரையும்) பாதிக்கும். |