. தாவிளை (யாத் 16:3) |
- பரவாயில்லை / ஒன்றைவிட மற்றொன்று மேலானது என்ற அர்த்தத்தில் சொல்லப்படும் வார்த்தை. (தேவலை - நடைமுறை வழக்கு) |
. தாற்றுக்கோல் (பிர 12:11) |
- ஒரு பக்க முனையில் கூர்மையான ஆணி கொண்ட பிரம்பு
/ தார்க்கோல், தார்க்குச்சி |
. தாற்பரியம் (பிர 8:1) |
- உட்பொருள், உள்நோக்கம், உள் அர்த்தம். |
. துண்டரிக்காரர் (தானி 11:14) |
- கொடியவர்கள், கலகம் செய்பவர்கள். |
. துர்ச்சனர் (எரே 11:15) |
- இழிவானவைகளை செய்பவர்கள் |
. தூலம் (ஏசா 28:27) |
- நெற்போரடிக்கும் கோல் |
. தெற்றுவாய் (ஏசா 32:4) |
- திக்குவாய் |
. நிபச்சொல் (ஏசா 58:9) |
- கோள் சொல்லுதல், பொல்லாதவைகளை பேசுதல் |
. வல்லயம் (2 சாமு 18:14) |
- ஒரு வகை ஈட்டி |
. வலசை வாங்குதல் (ஏசா 10:31) |
- ஒரு இடத்தின் ஜனங்கள் கூட்டமாக வேறிடத்திற்கு தப்பித்து ஓடிப்போதல் |
. முகனை (நாகூம் 3:10) |
- தொடக்கம் அல்லது முன்புறம் |
. லோபி (ஏசா 32:5) |
- கருமி |
. வாச்சி (1இராஜா 6:7,சங் 74:6) |
- மரஞ்செதுக்கும் ஆயுதம் (உளி) |
. வியாஜ்யம் (யாத் 23:6, நீதி 25:9) |
- வழக்கு |
. வியார்த்தி (தானி 5:12) |
- விளக்கமளிக்கும் திறமை |
. துரிஞ்சில் (ஏசா 2:21) |
- வெளவால் |
. பரிச்சேதம் (எரே 6:15) |
- சிறுபகுதி (கொஞ்சம்கூட வெட்கப்படவில்லை என்ற அர்த்தத்தில் இங்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது) |
. அளகபாரம் (உன் 6:5) |
- கூந்தல் தொகுதி |
. ஆயம் (எஸ்றா 4:20) |
- சுங்கம், ஆண்டு வருவாயில் ஒரு பகுதி |