இந்த யூதரும் அப்படியே விக்கிரக வணக்கத்தாரோடு ஒன்றாக கலந்து வாழ்ந்ததால் இன்றுவரை உண்மையான யூதர்கள் சமாரியர்களை வெறுத்து ஒதுக்கினார்கள். எருசலேம் செல்ல சமாரியா பிரதேச வழியாக செல்லவும் மனதில்லாமல் சமாரியாவை சுற்றித்தான் எருசலேம் செல்வார்களாம். சமாரியர்களை யூதர்கள் முழுவதுமாய் வெறுத்தபடியால் இயேசு நல்ல சமாரியன் உதாரணத்தைக்கூறி குற்றுயிராய் கிடந்த யூதனை யூத ஆசாரியனும், யூத லேவியனும் காப்பாற்றவில்லை. ஆனால் யூதர்களால் வெறுக்கப்பட்ட சமாரியன்தான் உதவி செய்தான். ஆகவே சமாரியர்களை யூதர்கள் வெறுக்கக்கூடாது என்று உணர்த்தவே அந்த உதாரணத்தை இயேசு கூறினார். அவர்களுக்கும் மனந்திரும்ப சந்தர்ப்பம் கொடுக்கவும் இயேசுவை அவர்களுக்கு அறிவிக்கவும் வேண்டும் என்று இயேசு மரித்து உயிர்தெழுந்து பரமேரும்போது சீஷர்களிடம் கூறினார். நீங்கள் பரிசுத்தாவியானவரின் நிறைவை பெற்றபின் எருசலேம், யூதேயா, சமாரியா ஆகிய இடங்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படியே இயேசுவின் சீஷன் பிலிப்பு மூலமாக சமாரியாவில் பெரிய எழுப்புதலையும் மனந்திரும்புதலையும் கர்த்தர் உண்டாக்கினார்.


எச்சரிக்கிறேன்!

ஒருநாள் வரும் அன்று உன் பகைவர் உன்னைச் சுற்றிலும் சூழ்ந்துகொண்டு எல்லா பக்கத்திலிருந்தும் நெருக்கி, உன்னையும், உன்னிடமுள்ள உன் மக்களையும் நொறுக்கி தரை மட்டமாக்கி உன்னிடம் கல்லின்மேல் கல் இராதபடி செய்வார்கள். ஏனெனில் கடவுள் உன்னை தேடி வந்த (மேசியாவாக) காலத்தை நீ அறியவில்லை. (கத்தோலிக்க மொழிபெயர்ப்பு). மேலும் இயேசு உயிரோடு பூமியில் ஊழியம் செய்யும்போது கூறியதாவது: எருசலேமே! ...எருசலேமே! ....உன்னிடத்தில் (பிதாவால்) அனுப்பப்பட்டவர்களையெல்லாம் கல்லெரிந்து கொல்கிறவர்களே!. இன்னும் எவ்வளவு காலம் இருதய கடினம் கொண்டவர்களாய் நடப்பீர்கள். கோழி, பருந்து தூரத்தில் வரும்போதே கோழி தன் குஞ்சுகளைத் முரட்டாட்டத்தை நினையாமல் இனம்பாராமல், நிறம், வித்தியாசம் பாராமல் சத்துருவிடமிருந்து உன்னை காப்பாற்ற என் சிறகுகளின் கீழே கூட்டி சேர்த்துக்கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளைகளைக் கூட்டி சேர்த்துக் கொள்ள மனதாயிருந்தேன். உங்களுக்கோ என்னிடம் வர மனதில்லாமல் போயிற்று என்று ஒரு தாய் தான் பெற்ற பிள்ளைகளுக்காக கதருவதைப்போல புலம்புவதையும் இயேசு கண்ணீர் விட்டு அழுதார். லூக்காவும் இந்த நிகழ்ச்சியை கூறுவதைப்போல, மத்தேயும் 23:37ல் இயேசு அழும்போது கூறிய அதே வார்த்தையை எழுத்து மாறாமல் அப்படியே எழுதி வைத்துள்ளார்.

கடைசியாக அவர் அழுதுகொண்டே சொன்ன தீர்க்கதரிசனம் இதோ உன் வீடு (எருசலேம் தேவாலயம், எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு) என்று அறியப்பட்டது. அந்த தேவாலயம் உங்களுக்கு ஜெபிக்க கூட முடியாமல் பாழாக்கி விடப்படும் என்றார். அதன்படியே எருசலேம் தேவாலயம் பலமுறை அழிக்கப்பட்டு இன்று இயேசுகிறிஸ்து கூறியபடியே இயேசுகிறிஸ்துவின் காலத்திலும், பவுல் ஊழியம் செய்த அந்த காலத்திலேயே எருசலேம் யுத்தத்தினால் அழிக்கப்பட்டது. அப்போதும் யூதர்கள் உள்ளத்தில் மாற்றம் ஏதும் உண்டாகவில்லை. ஒரு சிறிய மதில்மட்டும் உடைக்கப்பட்ட நிலையில் எருசலேமில் இன்றும் அப்படியே ஒரு குட்டிச்சுவராக நின்றுக்கொண்டிருக்கிறது. அதைத்தான் வாசகர்கள் படத்தில் காண்கிறீர்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM