நீண்ட கால ஜாமக்காரன் வாசகர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்

சகோதரி.லிடியா சாமுவேல் அவர்கள் கோயமுத்தூர் சாய்பாபா காலனியில் அசம்பளீஸ் ஆஃப் காட் சபை அருகில் குடியிருந்தார். சகோதரி.லிடியா சாமுவேல் அவர்கள் திருமணம் செய்யாமல் கர்த்தரின் ஊழியத்தை செய்தார். இந்த சகோதரி ஜீவ வார்த்தை என்ற பெயரில் அஞ்சல்வழி கல்விமூலம் நல்ல ஊழியம் செய்தார் சகோதரி.லிடியா சாமுவேல் அவர்கள். கொஞ்சநாள் வியாதிப்பட்டு 2014 ஆகஸ்ட் 13ம் தேதி தனது 90வது வயதில் மரித்துப்போனார்கள்.

இந்த சகோதரி AOG சபையோடு இணைந்து ஆங்கில மிஷனரிகளுக்கு மொழிபெயர்ப்பு ஊழியமும், புறஜாதிகள் மத்தியில் வீடுகள் சந்திப்பு மூலம் கிறிஸ்துவை அறிவிக்கும் ஊழியம், ஆஸ்பத்திரிகளுக்கு ஒவ்வொரு வாரமும் சென்று வியாதியஸ்தர்களை சந்தித்து கிறிஸ்துவை அறிவிக்கும் ஊழியமும் செய்து ஏராளமான ஆத்துமாக்களை கர்த்தரிடம் கொண்டுவந்தவர் ஆவார். நீண்ட காலமாக ஜாமக்காரன் வாசகியான இவர் வாசகர் குடும்பத்தில் ஒருவராக எண்ணப்பட்டவர். என் ஊழியங்களை பல ஆண்டுகள் ஜெபத்திலும், காணிக்கையிலும் தாங்கியவர். அவர் வாழ்க்கைக்காக, ஊழியங்களுக்காக தேவனைத் துதிக்கிறேன். அவரால் வளர்க்கப்பட்ட பிள்ளைகள் இன்று குடும்பமாக நல்ல நிலையில் வாழ்கிறார்கள். சகோதரியின் ஊழியத்துக்காக அவரின் சாட்சியுள்ள வாழ்க்கைக்காக தேவனைத் துதிக்கிறேன். கர்த்தருக்கு மகிமை உண்டவதாக.


நீண்ட கால ஜாமக்காரன் வாசகரின் மரணம்:

சகோ.தர்மலிங்கம் அவர்கள் கடலூர் மாவட்டம் பெரிய நற்குணம் என்ற ஊரில் வாழ்ந்தவர். நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் Mining Operator ஆக வேலை பார்த்தவர் விவசாயம் அவர் தொழில் ஆரம்ப நாட்களில் வேத புத்தகத்திலிருந்து நிறைய கேள்வி கேட்டு எனக்கு கடிதம் எழுதியவர். என்மேல் தனி அன்பு கொண்டவர். மாதாமாதம் தவறாமல் ஜாமக்காரன் ஊழியத்துக்கு காணிக்கை அனுப்பி தாங்கியவர். இப்போது இவர் பெற்ற பெண் பிள்ளைகள் அப்பாவைப்போல் என் ஊழியத்தை தாங்கும் பொறுப்பொடுத்துள்ளார்கள். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள், 3 பெண் பிள்ளைகள் உண்டு. கடந்த அக்டோபர் மாதம் தனது 81வது வயதில் சில மாதங்கள் வியாதிப்பட்டு படுக்கையில் மரணம் அடைந்தார். இவரது மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகளை கர்த்தர் ஆறுதல்படுத்துவாராக.


அரேபியா - குவைத் CSI கூட்டங்கள்.

கடந்தமுறை குவைத் CSI மலையாள சபைகள் இணைந்து கூட்டங்கள் நடத்தியதில் நான் அங்கு சென்று பிரசங்கித்து திரும்பினேன்.

இம்முறை குவைத்தில் வாழும் தமிழ் CSI சபையினர் விசேஷ கூட்ட ஏற்பாடுகள் செய்து என்னை அழைத்துள்ளனர். 2015 ஜனவரி மாதம் 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை கூட்டங்கள் நடைபெறும் என்னை நேரில் சந்திக்க விரும்புபவர்கள், கூட்ட விவரம் அறிய விரும்பபவர்கள் தொடர்புக்கொள்ள Mr.Johnson, CSI Secretary, Ph.96599815983.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM