பல ஆண்டுகள் இஸ்ரவேலர்களுக்கு (யூதர்களுக்கு)
சொந்த நாடு இல்லாமல் அகதிகள் போல் வாழ்ந்தார்கள்.
ஆபிரகாம் காலத்திலேயே இஸ்ரவேல் மக்களைப் போலவே ஆகாரின் மகனின்
இஸ்மவேல் சந்ததியான பாலஸ்தீனர்களும், ஆரம்ப காலத்திலேயே பாலஸ்தீனத்தைவிட்டு வெளியேறி பாலைவன பிரதேசமாகிய
அரபு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்தார்கள்.
இஸ்ரவேலர்களுக்கும் - இஸ்மவேல் சந்ததியினருக்கும் நீண்டகாலமாக போட்டியும், போரும் உண்டானது.
கர்த்தர் இஸ்ரவேலை சிதறடித்தார். ஆனால் அவரே அவர்களைக்
காப்பாற்றினார். எரேமியா தீர்க்கதரிசனத்தில் எரேமியா அன்று கூறியபடி
இஸ்ரவேலை சிதறடித்தவர், அதை காப்பார் என்றும் கூறினான். எரே 31:10. ஆனால் இஸ்ரவேலரோ கர்த்தரின் தீர்க்கதரிசனத்தை மதிக்காமல்,
மோசே இயேசுவைப்பற்றி அன்றே எழுதியதையும், இயேசுதான்-மேசியா என்பதை தீர்க்கதரிசிகள் மூலமாக அறிவித்ததையும் யூதர்கள் ஏற்றுக்கொள்ள மனதில்லாமல்
இயேசுவை சிலுவையில் அறைந்து கொன்றுபோட்டார்கள்.
பலமுறை ஆண்டவர் இஸ்ரவேல் மக்களை மன்னித்தும்,
கர்த்தரின் தீர்க்கதரிசனத்தை மதிக்காமல் மிகவும் வைராக்கியமாக இருந்தார்கள். இயேசுவை வெறுத்தார்கள். இயேசுவை ஏற்றுக்கொண்ட கிறிஸ்தவர்களையும் யூதர்கள் வெறுத்தார்கள். ஆனால் ஆண்டவரின் திட்டத்தையும் ஆண்டவர் அனுப்பின
மேசியாவை (இயேசு கிறிஸ்துவை) புறக்கணித்ததால் யூதர்கள் நாடற்றவர்களாக சிதறிடிக்கப்பட்டார்கள். அப் 18ம் அதிகாரத்தில் பார்க்கிறோம். அதற்கு முன்பும் சிதறடிக்கப்பட்டார்கள். அதன்பின் அனாதைப்போல் இஸ்ரவேல் (யூதர்) மக்கள் பல்வேறு நாடுகளில் வாழ்ந்தனர்.
அவர்களை ஜெர்மனியின் சர்வாதிகாரியான ஹிட்லர் காலத்தில் ஹிட்லர் யூதர்களை பூண்டோடு அழிக்க திட்டமிட்டு லட்சக்கணக்கில் யூதர்களை ஒரேநாளில் கொன்று குவித்தான். விஷ வாயுவைக்கொண்டும் பல லட்சம் யூதர்களை ஹிட்லர் ஒரே நாளில் கொன்று குவித்தான்.
தேவன் யூதர்கள்மேல் மறுபடியும் இறங்கினார். அநேக காலங்களுக்குபின் 1948ம் வருடம் மே மாதம் 14ம் தேதி
இஸ்ரவேல் என்ற தேசம் உருவானது.
அதில் யூதர்கள் குடியேறி அதை தனி நாடாக அமைத்து உலகத்துக்கு அறிவித்து அதில் வாழ சுதந்திரமும் பெற்றார்கள். உலக வரைபடத்திலும் இஸ்ரவேல் தனி நாடாக இடம்பெற்று உலக நாடுகளும் அதை அங்கீகரித்தது.
இஸ்ரவேல் தேசம் நம் மொத்த
தமிழ்நாட்டு அளவுதான் இருக்கும். அந்த அளவு மிகச்சிறிய தேசம்தான் இஸ்ரவேல் தேசம். சுமார் 5 வருடத்துக்கு முன் உள்ள கணக்கெடுப்பின்படி இஸ்ரவேலில் மொத்த மக்கள் தொகையே சுமார் 60 லட்சமாகும்.
இப்போது மீதியுள்ள யூதர்களெல்லாம் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் லட்சக்கணக்கில் இன்னும் வாழ்கிறார்கள்.
அவர்கள் அனைவரும் ஆண்டவர் ஆசீர்வதித்த தேசத்திற்கு,
எருசலேம் ஆலயம் உள்ள இடத்திலும் தன் எஞ்சிய நாட்களை கழிக்க ஆயிரக்கணக்கில் இப்போதும் பல்வேறு நாடுகளிலிருந்து
யூதர்கள் இடம் பெயர்ந்து இஸ்ரவேலை நோக்கி வந்துக்கொண்டிருக்கிறார்கள்.
இஸ்ரவேல் நாடு மிகச்சிறிய நாடுதான் என்றாலும் அந்த தேசத்தை சுற்றிலும் உள்ள நாடுகள் அனைத்தும்
இஸ்ரவேலின் எதிரி நாடுகளாக அமைந்துவிட்டது.
|