ஜெபிப்பதற்காக எனக்கு வந்த ஜெப கடிதங்களில் பெரும்பாலானவர்கள் மேலே குறிப்பிட்ட பிரச்சனைகளை குறிப்பிட்டுள்ளார்கள். அப்படிப்பட்ட பிரச்சனைகளில் அகப்பட்டவர்களாவர்.
 கூடியவரை கடன் வாங்காதிருங்கள்..
 கடன் கொடுக்காதிருங்கள்.
இப்போதைய காலத்தில் கடன் வாங்காமல் மொத்த தொகையும், கொடுத்து ஒரு நிலத்தையோ, வீட்டையோ, வாகனத்தையோ வாங்கமுடியாது. ஆகவே கடன் வாங்கித்தான் ஒரு திருமணத்தை நடத்த முடியும், வீடு கட்ட முடியும் என்றால் உங்கள் வருமானத்தின் கணக்கை பாருங்கள். வாங்கிய கடனுக்கான பணத்தை மாதாமாதம் கட்டி அதுபோக மீதி பணத்தில் குடும்பம் நடத்த இயலும் என்று அறிந்தால் மட்டும் கடன் வாங்கலாம். இல்லை என்றால் வருமானத்துக்கு ஏற்றப்படி வாழ பழகிக்கொள்ளவேண்டும். வெறும் வெட்டி ஜம்பத்துக்கு, ஆடம்பரமான வாழ்க்கைக்கு, ஆடம்பர வீட்டுக்கு, ஆடம்பர வாகனத்துக்காக கடன் வாங்கி காலமெல்லாம் வெறும் வட்டி மட்டுமே கட்டி மனவேதனையுடன் கடன்காரர்களாக வாழ்பவர்கள் எத்தனைபேர் உண்டு தெரியுமா? ஆகவே எச்சரிக்கையுடன் வாழ்வோம்.
இயேசுகிறிஸ்து கூறினார்:
உங்களில் ஒருவன் கோபுரத்தை கட்ட மனதாயிருந்து அஸ்திபாரம் போட்டபிறகு (அந்த கட்டிடத்தை)கட்டி முடிக்க
திரானியில்லாமல் போனால் பார்க்கிறவர்களெல்லாரும் இந்த மனுஷன் கட்ட தொடங்கி முடிக்க
திரானியில்லாமல் போனான் என்று சொல்லி பரியாசம் பண்ணாதப்படிக்கு அந்த (கட்டிடத்தை)
கட்டி தீர்க்கிறதற்குத் தன்னால் முடியுமோவென்று அறிவதற்கு
முதலில் உட்கார்ந்து வேண்டிய செலவைக் கணிக்கமாட்டானா?, கட்டிமுடிக்க முடியாமல்போனால் இவன் கட்ட தொடங்கினான். முடிக்கவில்லை என்று ஏளனம் செய்வார்களே? லூக் 15:28,29. (கத்தோலிக்க மொழிபெயர்ப்பு).
ஆகவே கடன் கொடுப்பது மட்டுமல்ல, கடன் வாங்குவதற்காகவும் உட்கார்ந்து கணக்கு போடுங்கள்.
ஜாமீன் கையெழுத்து போட்டு யாரோ வாங்கின கடனுக்கு நீங்கள் கடனை அடைக்கும் நிலை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
இதற்கு கர்த்தரிடம் ஞானம் கேட்டு வாங்குங்கள். இதில் ஞானமாக செயல்படாமல் போனால் சொந்த பந்தங்கள், சகோதர, சகோதரிகள் உறவு யாவும் சிதைந்து போகும். பாதிக்கப்படும். ஜெபிப்போம்.
|