நம் தேவன் நெருக்கத்தில் பிரச்சனையில் அகப்பட்டவர்களின் அலறல் கண்ணீர்களை கேட்டு பிதாவிடம் நமக்காக கேட்டுக்கொள்வது என்ன தெரியுமா? நான் நேசிக்கும் என் மக்களை உலகம் பகைத்தது, சொந்த குடும்பம் பகைத்தது, சொந்த பிள்ளைகள் புருஷன்-மனைவி அல்லது மனைவி-பெற்றவர்கள் பகைத்தார்கள்தான் அது சகிக்கமுடியாத மனவேதனைத்தான் ஆனாலும் நான் உம்மிடம் இப்படிப்பட்ட என் பிள்ளைகளுக்காக வேண்டிக்கொள்வது என்னவென்றால்
நீர் அவர்களை உலகத்திலிருந்து எடுத்துக்கொள்ளும்படி நான் வேண்டிக் கொள்ளாமல் நீர் அவர்களை இந்த (தீமையை எப்படி கடக்கவேண்டும்) தீமையினின்று காக்கும்படி வேண்டிக்கொள்கிறேன். யோ 17:15.
இயேசுகிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாம் நம் தேவனின் உள்ளத்தில் நம்மைப்பற்றிய எதிர்ப்பார்ப்பை புரிந்துகொள்ளவேண்டும். அப்படி புரிந்துகொண்டால் எல்லா சூழ்நிலையிலும் வரும் ஆண்டிலும் நீங்கள் மனரம்மியமாக வாழ முடியும்.
ஆன்-லைனில் காணிக்கை அனுப்பகிறவர்களும், ஏற்கனவே காணிக்கை அனுப்பியவர்களும் தயவுசெய்து ஒருமுறை உங்கள் விலாசம், தொலைபேசி நெம்பர் ஆகியவைகளை எனக்கு எழுதி அனுப்புங்கள். எந்த பேங்கில் எவ்வளவு அனுப்பினீர்கள் என்றும் எழுதுங்கள். ஏற்கனவே எனக்கு நீங்கள் எழுதியிருந்தாலும் இன்னும் ஒருமுறை உங்கள் விலாசம் எழுதி எந்த பேங்க் என்பதையும் குறிப்பிட்டு உங்கள் தொலைபேசி எண்ணையும் எனக்கு எழுதி அனுப்பி உதவுங்கள். அவைகளை நான் தனியாக பிரித்து எழுதி ஆன்-லைன்க்காக புதுகணக்கு வைக்க வேண்டியது அவசியமாகிறது. காணிக்கை ஆன்-லைனில் அனுப்பியவுடன் போன் செய்து அறிவிக்கவும். அது எங்களுக்கு கணக்கில் வரவு வைக்க உதவியாக இருக்கும். அல்லது இமெயில் மூலம் அறிவித்தாலும் போதும். காணிக்கை அனுப்பிய யாவருக்கும் என் வாழ்த்துதல்கள் கூறிக்கொள்கிறேன்.
ஜாமக்காரன் வாசக குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் நானும், என் குடும்பத்தினரோடு உங்களுக்கு
கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு (2015) வாழ்த்துதலைக் கூறிக்கொள்கிறேன்.
உங்கள் அனைவரையும் ஜாமக்காரன் (2015)
மூலமாகவோ, நேரிலோ அல்லது கர்த்தரின் வருகையிலோ சந்திக்கும்வரை தேவகிருபையும், சமாதானமும் நம் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
|