நாம் ஒருவரிடத்தில் ஜாமீன் கையெழுத்துப் போட்டு சிக்கிக்கொண்டால் கண்ணுக்கும் நித்திரை வரவிடாமல் கடன் வாங்கியவர்களிடத்தில் போய் நம்மை தாழ்த்தி வருத்திக் கேட்கவேண்டும். அப்போதுதான் நாம் தப்பித்துக்கொள்ளமுடியும்.

நீதி 6:5 வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும் குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல நீ உன்னை தப்புவித்துக்கொள்.

இந்த வசனத்தில் கடன் கொடுத்தவர்கள் வேட்டைக்காரன் என்றும் மற்றவன் வேடன் என்றும் குறிப்பிடுகிறது. கடனுக்கு ஜாமீன் கையெழுத்துப் போட்டவர்கள் வெளிமான் மற்றவன் குருவி என்பதுபோல் வர்ணிக்கப்படுகிறது.

தேவன் இந்த ஆலோசனையை நமக்கு ஏன் கொடுக்கிறார் என்றால், ஜாமீன் கையெழுத்துப் போட்டு சிக்கிக்கொண்டு தேவனிடத்தில் ஜெபித்தாலும் அதற்குத் தேவன் செவி கொடுக்கமாட்டார் என்பதாகும். காரணம், அது நீ யோசிக்காமல் செய்த தவறான செயல் ஆகும். இந்த விஷயத்தில் நீ கர்த்தரின் ஆலோசனை என்ன? இச்செயல் நமக்கு நன்மை பயக்குமா? தீமையை வருத்துமா? என்றும் இதன் பின்விளைவுகள் என்னவாக இருக்கும் என்றும் யோசிக்காமல் நீயே அந்த பிரச்சனையில் விழுந்துபோனாய்!. இப்படிப்பட்ட பிரச்சனைகளில் அகப்பட்டவர்கள் நிறையபேர் உண்டு. அப்படி அனுபவப்பட்டவர்களிடமாவது ஆலோசனை கேட்டிருக்கவேண்டும். அல்லது நல்ல (வக்கீல்) சட்ட ஆலோசகரிடமாவது ஆலோசனை கேட்டிருக்கவேண்டும்.

Dr.புஷ்பராஜாகிய என் சொந்த குடும்பத்தில் ஆறு சகோதரிகளில் ஒரு சகோதரி ஆசிரியையாக அரசாங்க பள்ளியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். உடன் வேலை செய்யும் ஆசிரியை ஒருவர் வங்கி லோன் எடுக்க ஜாமீன் கையெழுத்து போடவேண்டும் என்று என் அக்காவிடம் கேட்டுக்கொண்டார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியைகள் வங்கி லோன் பணம் வாங்க ஒருவருக்கொருவர் ஜாமீன் கையெழுத்து போட்டு உதவுவார்கள். இது வழக்கமாக எல்லா இடத்திலும் நடைபெறுகிறது. ஆகவே என் அக்காவும், உடன் ஆசிரியைக்கு ஜாமீன் கையெழுத்து போட்டார். பணம் வாங்கப்பட்டது. சில மாதங்கள் மட்டுமே வட்டி பணம் அடைக்கப்பட்டது. அதன்பின் வட்டி பணம் அந்த ஆசிரியை வங்கியில் அடைக்காததால் வங்கியின் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. அடுத்து இரண்டாம் எச்சரிப்பும் கொடுக்கப்பட்டது. இப்போது அந்த ஆசிரியை வேறு ஊருக்கு இடம் மாற்றல் வாங்கி சென்றுவிட்டார். வங்கி அதிகாரிகள் வங்கியில் கடன் வாங்கிய ஆசிரியை பணம் கட்டாததால், என் அக்காவிடம் அந்த பணத்தை பெற்று தரும்படி கட்டளையிட்டது. அப்படியும் அந்த பணம் அந்த ஆசிரியை அடைக்காவிட்டால் ஜாமீன் கையெழுத்து போட்ட நீங்கள்தான் அந்த பணம் அடைக்க வேண்டும்? என்றார்கள். இது அநியாயம்! அவர்கள் வாங்கிய கடனை நான் ஏன் அடைக்கவேண்டும் என்றார்கள். ஜாமீன் கையெழுத்து போட்ட பேப்பரில் உள்ள கன்டிஷன்களை வாசித்துப் பாருங்கள். அவர்கள் கடன் அடைக்காவிட்டால் அவருக்கு பதில் நான் அந்த கடனை அடைப்பேன் என்று எழுதப்பட்ட வாசகத்தை வாசித்தபோது அதிர்ந்துபோனார்கள். வக்கீலிடம் ஆலோசனை கேட்டபோது எழுதிய அந்த வாசகத்துக்கு சம்மதித்துதான் நீங்கள் ஜாமீன் கையெழுத்து போட்டிருப்பதால் கோர்ட்டுக்கு போனாலும் செல்லாது என்றார்கள். முடிவில் சில ஆசிரியைகளாக ஒன்றுசேர்ந்து கடன் வாங்கிய ஆசிரியை குடியிருக்கும் ஊருக்கு சென்று பணம் அடைக்கும்படி கேட்டார்கள்.

அந்த ஆசிரியை கண்ணீருடன் என் கணவர் குடிகாரர் என் நகைகளையெல்லாம் விற்றுவிட்டார். நான் மிகவும் நொடிந்து போய்விட்டேன் என் பென்ஷன் பணத்தில் குடும்பம் நடத்தமுடியவில்லை. என் கணவன் பட்ட கடனையும் நான்தான் அடைத்துக்கொண்டிருக்கிறேன்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM