இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள பாலஸ்தீன வீடுகளும் அழிக்கப்பட்டது.
தீவிரவாத ஒழிப்பு என்ற பெயரில் நடந்த இந்த யுத்தத்தை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதும் யுத்தம் அவ்வப்போது பாலஸ்தீனர்களுக்கு எதிராக நடந்து கொண்டேயிருக்கிறது.
இப்போது
அல்-அக்ஸா பகுதியில் நாங்களும் தொழுகை நடத்தவேண்டும். சாலமோன் ஆலயத்தின் மையப்பகுதி அங்கு இருக்கிறது என்று யூதர்கள் புதிய பிரச்சனையுள்ள உரிமை போராட்டம் நடத்தினார்கள். 1976ல் உலக நீதிமன்றம்
யூதர்களும் அல்-அக்ஸாவில் தொழுகை நடத்தலாம். சாலமோன் ஆலயம் அங்கு அமைந்திருக்கலாம் என்று தீர்ப்பளித்தது. இஸ்லாமியரால் அதற்குமேல் ஒன்றும் செய்யமுடியவில்லை. இப்போது
யூதர்களும் - இஸ்மவேலாகிய இஸ்லாமியரும் தொழுகை நடத்துகின்றனர். அந்த முஸ்லீம் (பள்ளிவாசலில்) மசூதி அருகில் யூதர்கள்
யூதமத பள்ளிக்கூடம் கட்டியிருந்தார்கள். ஆனால் அதில் முழுவதும் வெடி பொருளால் நிரப்பி வைத்திருந்ததை இஸ்லாமியர் கண்டுபிடித்துவிட்டனர். எந்த நேரத்திலும்
அல்-அக்ஸா வெடித்து சிதறப்போகிறது. அதே இடத்தில்
எருசலேம் ஆலயம் கட்டிவிடுவார்கள் என்றும் பயந்தன. ஆகவே வெடிபொருளை அந்த இடத்திலிருந்து நீக்கவேண்டும் என்று போராடினர்.
வெடிபொருள் வெடித்தால் மசூதி இருந்த இடமே மறைந்துபோகும் அளவு யூதர்கள் வைத்த வெடிகள் பயங்கரமானது மிக பயங்கரமானது என்றனர். உலக நாடுகள் தலையிட்டன. ஒரு வழியாக அங்கிருந்து யூதர்களால் வெடிப்பொருள் நீக்கப்பட்டது. ஆனால் அதன் அருகே புது
சாலமோன் தேவாலயம் கட்டவேண்டும் என்று 1990ம் ஆண்டு யூத மக்கள் எழும்பினர். மறுபடியும் யூதர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் கடும்மோதல் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர் கொல்லப்பட்டனர். இன்றுவரை யுத்தவெறி யூதர்கள்-இஸ்லாமியர் இரண்டு பக்கத்திலும் புகைந்துக்கொண்டேயிருக்கிறது. எந்த நேரத்திலும் இஸ்ரவேல் (யூதன்) கடுமையான தாக்குதலுக்குள்ளாக்கப்படலாம். எதிர்ப்பார்த்தப்படியே யுத்த மேகம் இஸ்ரவேலுக்கு எதிராக இப்போது சூழ்ந்தது. இப்போது
பாலஸ்தீனர்கள், அரேபியர்கள், இஸ்லாமியர்கள் அனைவரும் கூட்டாக
யூதர்கள் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இஸ்ரவேல் தேசத்தை பகைக்க ஆரம்பித்தார்கள்.
இதற்கு முன் மிகப்பெரிய யுத்தம் இஸ்ரவேலுக்கு எதிராக நடந்தது. அந்த யுத்தத்தில்
இஸ்ரவேல் தேசத்தை சுற்றியுள்ள ஜோர்டான், எகிப்து, சிரியா, லெபனான் ஆகிய தேசங்கள் பாலஸ்தீனியர்களோடு போர் ஒப்பந்தம் செய்து அத்தனை நாடுகளும்
இஸ்ரவேல் நாட்டின் மீது போர் தொடுத்தது. சிறிய நாடான
இஸ்ரவேலை அவர்கள் யாராலும் ஜெயிக்கமுடியவில்லை.
மறுபடியும் எகிப்துடன் இணைந்து மொத்தம் 22 அரபுதேசங்களும் இஸ்ரவேலுக்கு எதிராக போர் தொடுத்தது. அதிலும் இஸ்ரவேல் நாட்டை ஜெயிக்கமுடியவில்லை, தோற்றுப்போனார்கள்.
இஸ்ரவேலை நேசிக்கும் நம் தேவன் எதிரிகள் அத்தனைப்பேரையும் தோற்கும்படி செய்தார். அந்த பெரிய யுத்தத்தில் யுத்தம் தொடங்கிய மொத்தம் ஆறு நாட்களிலேயே இஸ்ரவேல் தேசம் போரில் மாபெரும் வெற்றி பெற்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்தது.
அந்த யுத்தத்தில் எகிப்து நாடு அவர்களுடைய
சீனாய் என்ற பெரும் பகுதியை இழந்தது. சீனாய் பகுதியை இணைத்து இஸ்ரவேல் சீனாயை தனதாக்கி எல்லையை பெரிதாக்கிகொண்டது.
சிரியா நாடு ஹோலன்ஹைட் என்ற மிக முக்கிய பகுதியை இழந்தது. அதையும் இஸ்ரவேல் தனதாக்கிக்கொண்டது. |