யாக்கோபுக்குதான் கர்த்தர் முதன்முதல்
இஸ்ரவேல் என்று பெயரைக் கொடுத்தார். ஆதி 32:28. அதன் பின்
ஆபிரகாம் சந்ததியில் பிறந்த அனைத்து மக்களுக்கும்
இஸ்ரவேல் என்ற பெயர் கர்த்தரால் வழங்கப்பட்டது.
இஸ்ரவேலரை (யூதர்களை) கர்த்தர் மிகவும் நேசித்தார். காரணம், அன்றைய காலங்களில் பலர் உண்மை தெய்வமான யெகோவாவை விட்டுவிலகி தங்களுக்கு பிரியமான விக்கிரகங்களை உருவாக்கி அவைகளை வணங்கினார்கள்.
ஆண்டவர் இஸ்ரவேலருக்கு கொடுத்த முக்கியமான கட்டளைகளில் ஒன்று
விக்கிரக ஆராதனை கூடாது என்பதாகும்.
மேலும்
இஸ்ரவேலே நீ கர்த்தருக்கு பயந்து, அவர் வழிகளிலெல்லாம் நடந்து அவரிடத்தில் அன்புகூர்ந்து உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் தேவனாகிய கர்த்தரை சேவிக்கவேண்டும். உபா 10:12-17. இப்படி இன்னும் ஏராளமான கட்டளைகளை
இஸ்ரவேலருக்கு கொடுத்து இஸ்ரவேல் மக்களை கர்த்தர் மிகவும் நேசித்தார். அதே சமயம் ஆண்டவர்தன் கட்டளைகளுக்கு கீழ்ப்படியாமல் போனால் எப்படியெல்லாம் கர்த்தரின் கோபம் இஸ்ரவேல் மக்கள்மேல் உக்கிரமாக வரும் என்பதையும் கூறி எச்சரித்தார். இப்படி எச்சரித்தும்
இஸ்ரவேலரோ அடிக்கடி ஆண்டவரின் மனதை வேதனைப்படுத்தும் வண்ணம் முரட்டாட்டம் பிடித்தவர்களாக மாறினார்கள். அப்படி ஆண்டவரைவிட்டு இஸ்ரவேல் (யூதர்கள்) மக்கள் விலகும் போதெல்லாம் ஆண்டவராகவே தான் மிகவும் நேசித்த இஸ்ரவேல் மக்களை எதிரிகளின் கைகளில் ஒப்புக்கொடுத்துவிடுவார். விக்கிரகத்தை ஆராதிக்கும் அதேசமயம்
யெகோவாவை வெறுக்கும் சத்துருக்களான அம்மோன்புத்திரர், பெலிஸ்தியர், பார்வோன் இப்படி பல சத்துருகளிடம் ஆண்டவரே ஒப்புக்கொடுத்துவிடுவார். அதன்பின் இஸ்ரவேலை காப்பாற்றுவதை கர்த்தர் நிறுத்திவிடுவார்.
அப்படித்தான் பார்வோன் கைகளில் கர்த்தரே இஸ்ரவேலரை ஒப்புக்கொடுத்து அடிமைகளாக கஷ்டப்பட வைத்தார். பார்வோனின் இருதயத்தை ஆண்டவரே பலமுறை கடினப்படுத்தி அவர்களை ஆராதிக்க அனுமதிக்கவில்லை.
இஸ்ரவேல் மக்கள் தங்கள் தவறை உணர்ந்து மனந்திரும்பும்போது மோசேயைப்போல் யாரையாவது எழுப்பி
இஸ்ரவேல் மக்களை விடுவிப்பார். இப்படி பலமுறை இஸ்ரவேல் கர்த்தரை துக்கப்படுத்தினார்கள். பலமுறை மனந்திரும்பி கர்த்தரிடம் மன்னிப்பு கேட்கும்போது ஆண்டவரும் மிகவும் பொருமையாக அவர்கள்மேல் இறங்கி
அடிமைத்தனத்திலிருந்து அம்மக்களை ஒவ்வொரு முறையும் இரட்சிப்பார். வேதத்தில் ஒரு இடத்தில் ஆண்டவர் தன் மக்கள்
இஸ்ரவேலரை என்னமாய் நேசித்தார் என்பதை ஆண்டவர் புலம்பிய வார்த்தைகள் மூலமாய் அறியலாம்.
என் இஸ்ரவேலே.... என் சினேகிதனான ஆபிரகாமின் சந்ததியே.... நான் உன்னை வெறுத்து விடவில்லை. ஏசா 41:8,9.
இஸ்ரவேலே நீ என்னால் மறக்கப்படுவதில்லை. ஏசா 44:21.
(இஸ்ரவேலாகிய)
இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன். இவர்கள்
என் துதியை சொல்லிவருவார்கள். ஏசா 43:21.
நானே
தேவன் என்பதற்கு நீங்கள்தான் எனக்கு சாட்சிகள் என்று கர்த்தர் இஸ்ரவேலை நோக்கி சொல்கிறார். ஏசா 43:12.
|