இஸ்ரவேலின்-(யூதர்களின்) தற்போதைய ஆபத்தான நிலை

இப்போது இஸ்ரவேல் நாட்டில் வாழும் யூதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்த நிலையில் இருப்பதால், இஸ்ரவேலை சுற்றி 22 இஸ்லாமிய தேசங்களும் பெருத்த படையுடன் இஸ்ரவேல் என்ற நாடே உலக வரைபடத்தில் இல்லாமல் இருக்கவேண்டும் என்ற சபதத்துடன் (இஸ்ரவேல்) யூதர்களை முழுவதுமாய் அழிக்க மிக தீவிரமாக இருக்கிறார்கள்.

இப்போது சமீபத்தில் ஈரான் நாடு ரஷ்யாவிடமிருந்து யூரேனியத்தை இறக்குமதி செய்துவிட்டது. பெரும் அழிவை உண்டாக்கும் நியூக்கிளியர் அணுகுண்டுகளை (பாம்) தயாரிக்க ஆரம்பித்துவிட்டது. அணுகுண்டு தயாரித்தவுடன் அவர்கள் கூறியதாவது: முதல் நியூகிளியர் என்ற பயங்கர அணுகுண்டை இஸ்ரவேல் மீது போட்டு அழிக்கப்போகிறோம் என்று அந்த நாடு சூளுரைத்துள்ளது. இஸ்ரவேல் தேசத்துக்கு மிகப்பெரிய பேரழிவு காத்திருக்கிறது.

1979ம் ஆண்டு இஸ்ரவேல் நாட்டிற்கு Dr.புஷ்பராஜ் ஆகிய நான் சென்றபோது அங்கு நாட்டு மக்கள் யாரும் சந்தோஷமாக இல்லை. நான் எருசலேம் வீதியில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது அடிக்கடி அபாய சங்கு சத்தம் கேட்கும். உடனே கடைவீதியில் கடைகளை அடைத்து பதுங்கு குழிகளை நோக்கி ஓடுவதை கண்டேன். இஸ்ரவேல் என்ற நாட்டின் வட்டத்தை சுற்றி எதிரிகளால் சூழப்பட்ட நிலையில் எப்போதும் எதிரி நாடுகள் விமான தாக்குதல் நடத்த முயன்று கொண்டேயிருந்தார்கள். அதனால் ஒரே நாளில் பலமுறை அபாய சங்கு முழங்கி கொண்டேயிருந்தது. அப்படியானால் அப்போதே ஒவ்வொரு நிமிடமும் அழிவு தங்களை நோக்கி வந்துகொண்டேயிருக்கிறது என்பதை அறிந்த அந்த யூதர்கள் எப்படி நிம்மதியாக இருக்கமுடியும்.


இந்த நிம்மதியற்ற வாழ்க்கைக்கு பயந்து பயந்து வாழும்
இவர்களின் வாழ்க்கைக்கு காரணம் என்ன?

மத் 27:24,25ல் அன்று பிலாத்து இயேசு கிறிஸ்துவுக்கு தீர்ப்பு கூறும்போது இயேசு குற்றமற்றவர் இவரை கொல்லுவதால் இரத்தபழி என்மேல் வராதிருப்பதாக என்று கூறி தன் கைகளை கழுவி அறிவித்தபோது அன்றைக்கு அங்கிருந்த யூதர்கள் கூறிய வார்த்தைகளை சற்று யோசித்துப்பாருங்கள். இயேசுவை கொல்வதால் உண்டாகும் இரத்தபழி எங்கள் மேலும், எங்கள் பிள்ளைகள் மேலும், எங்கள் சந்ததி மேலும் உண்டானாலும் பரவாயில்லை. ஆனால் இயேசு கிறிஸ்து கொல்லப்படவேண்டும் என்று கூக்குரல் இட்டார்கள். அதன் பலனைத்தான் இந்த நாள் வரைக்கும் (இஸ்ரவேல்) யூதர்கள் சந்ததி சந்ததியாக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு நெருக்கங்களும், யுத்தங்களும் நிம்மதியற்ற வாழ்க்கையையும் இவர்கள் அனுபவித்தபோதும் இயேசுகிறிஸ்துவை இவர்கள் மேசியா என்று அங்கீகரிக்கவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை.

அதற்கு மாறாக, இயேசுகிறிஸ்துவுக்கு விரோதமாக இயேசுகிறிஸ்துவை இழிவுப்படுத்துவதற்காக கோடிகோடியாய் பணம் செலவழித்து கிறிஸ்துவை அவமானப்படுத்தும் சினிமா படம் எடுத்து, உலக மக்களிடம் இயேசு தெய்வம் அல்ல என்று அறிவிக்க முயன்றுகொண்டிருக்கிறார்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN