சகோ.ஜோசுவா டேனியல்
LAYMAN EVANGALICAL FELLOWSHIP (LEF) என்ற நல்ல ஆவிக்குரிய சபையின் தலைமை ஊழியரும், ஸ்தாபகர்களில் ஒருவருமான
சகோ.ஜோ என்று சபையினரால் அன்போடு அழைக்கப்படும்
சகோ.ஜோசுவா டேனியல் அவர்கள் 2014 அக்டோபர் 14ம் தேதி கர்த்தருக்குள் நித்திரை யடைந்தார்.
சகோ.டேனியல்
ஆந்திரமாநிலத்தில் காக்கிநாடா மாவட்டத்தில்
சகோ.டேனியல் அவர்களுக்கு மகனாக பிறந்தவர்தான் சகோ.ஜோ டேனியல் அவர்கள் ஆவார். சகோ.ஜோ அவர்களின் தந்தை சகோ.டேனியல் அவர்கள் 1945ம் வருடங்களில் தமிழ்நாடு எங்கும் உயிர்மீட்சி கூட்டங்கள் நடத்தி தமிழ்நாடு
CSI, லூத்தரன் சபைகளில் மிகப்பெரிய எழுப்புதலுக்கு ஆரம்ப காரணமாக விளங்கியவர். அந்த நாட்களில் தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்தவ சபைகளில் முதல் எழுப்புதல் வர காரணமானவர்
சகோ.தானியேல் என்றால் அது மிகையாகாது. நான் சிறுவனாக இருந்த நாட்களில் என் பெற்றோர்
சேலம் லண்டன் மிஷன் உயர்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்த
சகோ.தானியேல் அவர்களின் கூட்டத்துக்கு குதிரைவண்டியில் சேலம் ஜங்ஷனிலிருந்து - சேலம் செவ்வாய்பேட்டையில் உள்ள
லண்டன் மிஷன் பள்ளி (CSI) மைதானத்துக்கு அழைத்து சென்றது சிறிதாக என் ஞாபகத்தில் வருகிறது. அதன்பின் சகோ.தானியேல் அவர்கள் பலமுறை சேலத்தில் கூட்டம் நடத்தியதை கேள்விப்பட்டிருக்கிறேன்.
சகோ.தானியேல் அவர்கள் மரித்தபின் மகன் ஜோஷ்வா தானியேல்-ஜோ
என்று அழைக்கப்பட்டவர் மேடை ஏறி பிரசங்கிக்க தொடங்கினார்.
தகப்பனும்-மகனும் நடத்திய கூட்டத்தில் ஆயிரக்கணக்கில்
இரட்சிக்கப்பட்டார்கள். மனந்திரும்பினவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க
தொடங்கினார். அதன்பின் Fellowship Centre என்ற பெயரில் சபை தொடங்கியதால்
CSI சபை மக்களில் பலர் அவர்கள் சபையில் சேர்ந்தார்கள். உடனே தமிழ்நாடு அனைத்து
CSI சபைகளிலும் சகோ.தானியேல், சகோ.ஜோ ஆகியவர்களை CSI சபை இனி உற்சாகப்படுத்தகூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்தான் மெயின் லைன் சபை தொடர்பு இல்லாமல் தனியாக ஆவிக்குரிய பொது கூட்டங்களை இவர்கள் பொது மைதானத்தில் நடத்த ஆரம்பித்தார்கள். சகோ.ஜோ அவர்கள் மூலமாக இரட்சிக்கப்பட்டவர்கள் ஏராளம். அவர்களில் பெரும்பாலோர் தங்களுடைய பெரியபெரிய பதவிகளை, வருமானங்களை விட்டு ஆத்துமாக்களை தேடும் முழுநேரப் பணிக்கு முழுநேர ஊழியர்களாக ஒப்புக்கொடுத்தவர்களாவர். அவர்களின் எண்ணிக்கை மிக ஏராளம். பிரபல சென்னை டாக்டர்.ஜெயசிங் போன்றவர்கள்
LEF சபையின் தூண்களாக விளங்கி அவர்கள் மூலமாக லட்சக்கணக்கில் ஆத்துமாக்களால் சபை வளர்ந்து பெருகியது.
Dr.ஜெயசிங் அவர்களுடன் ஒரேஒருமுறை நான் பேசியிருக்கிறேன். சகோ.ஜோ டேனியல் அவர்களோடு பலமுறை தொடர்புக் கொண்டிருக்கிறேன். நான் டாக்டராகி ஊழியக்காரனாகிய உடன் ஈரோடு நகரில் நடந்த
LEF சபை ரிட்ரீட்டில் கலந்துக்கொள்ள சென்றேன். முதன்முதல் LEF ரிட்ரீட்டில் என்னை
சகோ.ஜோ அவர்கள் பேச வைத்தார். அதுதான் LEFல் நான் பிரசங்கம் செய்த முதலும் கடைசியுமான கூட்டமுமாகும். நான்
CSIயில் அங்கத்துவம் தொடர்வதினால் என்னை அவர்கள் கூட்டத்தில் உபயோகிக்க விரும்பவில்லை.
LEF சபை இன்று ஆலமரம்போல் பரந்து விரிந்து இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் பெருகி வளர்ந்துள்ளது. தலைவனை இழந்த
LEF சபை மக்களுக்கும் ஜோ அவர்களின் குடும்பத்துக்கும் கர்த்தர் ஆறுதலை தருவாராக.
சகோ.ஜோ டேனியல் அவர்களின் கடந்தகால அற்புதமான ஊழியங்களுக்காக தேவனை துதிக்கிறேன்.
|