இன்றைக்கு அநேகர் தங்களுடைய சிநேகிதர்களோ அல்லது தங்களுடைய சொந்த பந்தங்களோ அல்லது அந்நியர்களோ (வங்கியில் அல்லது தனியார் நிறுவனங்களில்) கடன் வாங்கும்போது ஜாமீன் கையெழுத்துப் போடுகிறார்கள்.
கடன் வாங்கியவர்கள் இவர்களை ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டாலோ அல்லது கடனைக் கட்டாமல் மரித்துவிட்டாலோ
ஜாமீன் கையெழுத்துப் போட்டவர்கள் பெரும் கடன் தொல்லையில் சிக்கிக்கொள்ளுகிறார்கள். அநேகர் இதனால் தற்கொலைக்கூட செய்து கொள்ளுகிறார்கள்.
ஜாமீன் கையெழுத்துப் போட்ட கிறிஸ்தவர்கள் தேவனை நோக்கி கெஞ்சி அழுகிறார்கள்.
ஆனால், தேவன் இதைக்குறித்து என்ன கட்டளையிட்டு இருக்கிறார் என்பதையும், நமக்கு என்ன ஆலோசனை கொடுக்கிறார் என்பதையும் பார்ப்போம்.
1). தேவனுடைய ஆலோசனை என்னவென்றால் அந்நியனுக்காக
பிணைக்கப்பட்டால் (ஜாமீன் கையெழுத்துப்போட்டால்) உங்களுக்கு
வெகுபாடு வரும் என்று சொல்லுகிறார். நீதி 11:15ல் அந்நியனுக்காகப் பிணைக்கப்படுகிறவன் வெகுபாடுபடுவான், பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாயிருப்பான்.
2). யார் ஜாமீன் கையெழுத்துப் போடுவார்கள்?
ஜாமீன் கையெழுத்துப் போடுகிறவர்கள் தேவனுடைய பார்வையில் மதிகெட்டவர்கள் என்று சாலமோன் கூறுகிறார். (நீதி 17:18).
புத்தியீனன் தன் சிநேகிதனுக்கு முன்பாகக் கையடித்துக் கொடுத்துப் பிணைப்படுகிறான்.
3). ஜாமீன் கையெழுத்துப்போட்டு அதில் சிக்கிகொண்டவர்கள் கடைசியில் தான் படுத்து இருக்கக்கூடிய படுக்கையைக்கூட கடன் கொடுத்தவர்கள் தூக்கிக்கொண்டு போய்விடுவார்கள் என்று தேவன் எச்சரிக்கிறார். (நீதி 22:26). கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே (நீதி 22:27). செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால் நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ள வேண்டியதாகுமே!.
ஒருவேளை ஜாமீன் கையெழுத்துப் போட்டு சிக்கிக்கொண்டால் நாம் என்ன செய்வது? அதற்கு தேவனுடைய ஆலோசனை என்ன? |