நீங்கள் எனக்காக கையெழுத்துபோட்டு பணம் பெற உதவியதற்கு நன்றி. ஆனால் என்னால் இப்போது ஒன்றும் செய்யமுடியாது. இதோ நான்
படுக்கும் கட்டில், வானொலி பெட்டி, பித்தளை பாத்திரம் எதை வேண்டுமானாலும் எடுத்து செல்லுங்கள் என்று கண்ணீர்விட்டார். வேறு வழியில்லை. அந்த ஆசிரியையின் உண்மை நிலையை நேரில் சென்று அறிந்த என் அக்கா வேறு வழியில்லாமல் 13 வருடங்கள் அந்த ஆசிரியை பட்ட கடனை அன் அக்காவே தன் சம்பளத்திலிருந்து எடுத்து அவள் கடனை அடைத்துமுடித்தார்.
சில சமயம் சிலருக்கு உதவி செய்வதாக நினைத்து இப்படிப்பட்ட பிரச்சனையில் அகப்பட்டு கண்ணீர் வடிக்கிறவர்கள் ஏராளம்.
 சில குடும்பங்களில் சொந்த அக்காள் அல்லது தங்கை, தம்பி அல்லது நாத்தனார் வீடு கட்டுகிறார்கள். வீடு கட்டி முடிக்க பணம் இல்லை என்றும் பண உதவிவேண்டும் என்றும் கேட்கிறார்கள். பலர் தங்கள் நகைகளை அடமானமாக வைத்து
வீடுகட்டி முடிக்க இவர்களுக்கு உதவுகிறார்கள். ஆனால் பணம் திருப்பி கொடுக்காமல் காலம் தாழ்த்தப்படும்போது வட்டி கூடி போகிறது. இப்போதுதான் குடும்பத்துக்குள் குறிப்பாக சொந்தங்களுக்குள் விவகாரம், மனஸ்தாபம் உண்டாகிறது. கொடுத்த பணம் கேட்டால் பணம் வாங்கியவர்களுக்கு கோபம் வருகிறது, வெறுப்பு வருகிறது. நெருங்கின இரத்த உறவுகள் பிரிகின்றன. சிலர் சொந்த சகோதரிக்கு அல்லது
சகோதரனுக்கு விரோதமாக தாங்கள் கொடுத்த பணத்தை அல்லது நகைகளை அவர்களிடமிருந்து திரும்பபெற நீதிமன்றம் போகிறார்கள். இதன்மூலம் சந்தோஷமாக வாழ்ந்த கணவன்-மனைவிகளுக்கு இடையே பெரும் விரிசல், பிரிவினைகள் உண்டாக உறவுகள் உடைகிறது. இதன் காரணமாக பரம்பரை சொத்துக்கள் ஏலம் விடப்படுகின்றன. சொந்த கூடப்பிறப்புகள்கூட இதன் காரணமாக மரணம்வரை பகைஞர்களாகி போகின்றனர்.
ஆவிக்குரிய குடும்பங்கள்கூட இதன் காரணம் தேவனிடமிருந்து பிரிந்துபோகும் நிலை உருவாகிறது.
 கொடுப்பேன் என்று சொல்லியும் கொடாமலிருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சரி. நீதி 25:14.
கூடியவரை கூடபிறந்தவர்களிடம், உறவினர்களிடம் கடன் வாங்கவும், கடன் கொடுக்கவும் கூடாது. அது
உங்கள் அன்பையும், உறவையும் முறித்துபோடும். அதுமட்டுமல்ல, உங்கள் முழு குடும்ப அன்பையும், பாசத்தையும் பெரிய அளவு பாதிக்கும்.
 உன் ஆபத்துக்காலத்தில் உன் சகோதரனுடைய வீட்டுக்குப்போகாதே!. நீதி 27:10.
 ஆனால், அதே சமயம் சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்,
இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான். நீதி 17:17.
இடுக்கண் என்பதற்கு தேவையுள்ள சமயத்தில் என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பணதேவைகளில் கூடப்பிறந்த சகோதர, சகோதரிகள் உதவலாம். வட்டியில்லா முறையில் இப்படிப்பட்டவர்களிம் வாங்கும் பணம் (கடன்) மிகவும் உதவியாக இருக்கும். ஒருவேளை குறிப்பிட்ட நாளில் வாங்கிய பணம் அல்லது நகை கொடுக்க இயலாத நிலையில் பணம் அல்லது நகை வாங்கினவர்கள் உண்மையாகவே எதிர்பாராத பண நஷ்டத்தில் அவர்கள் அகப்பட்டு இருக்கிறார்கள் என்பது உண்மையானால் உண்மையான சகோதர பாசம் அந்த சூழ்நிலையின் நஷ்டத்தில் துன்பத்தில் அவர்களும் அவர்களோடு பங்குக்கொள்வார்கள்.
அன்பு சகலத்தையும் தாங்கும் சகிக்கும்.
ஆனால் திருமணமானபின் இப்படிப்பட்ட
பணம், நகைபரிவர்த்தனம் ஒருவருக்கொருவர் உதவுதல் என்பது மிகவும் ஆபத்தானது. எல்லா மனைவிமார்களும், எல்லா கணவன்மார்களும் ஒரே மாதிரி சுபாவம் உள்ளவர்களாக இருக்கமாட்டார்கள். |