வாசகர் கடிதம்
அறிவிப்பு! மறுப்பு அறிவிப்பு!!
இந்து விக்கிரக நாணயம்:

இந்து தெய்வங்களின் படம் நாணயங்களில் முதலாவது வெளியிட்டது காங்கிரஸ் கட்சி ஆண்ட 2013ம் வருடத்திலாகும். அப்போதே ஏராளமான எதிர்ப்புகள் உண்டானது. விவரம் நீதிமன்றத்திற்கு புகாராக அறிவிக்கப்பட்டது. உடனே நீதிமன்றம் தலையிட்டு அதை அச்சடிப்பதை நிறுத்தும்படி ரிசர்வ் பேங்க்குக்கு கட்டளையிட்டது. அதன் விவரம் கேட்கப்பட்டது.

நீதிமன்றம் கட்டளையிட்டதற்கு பின் கடைசியாக நாணயம் வெளியிடுவது நிறுத்தப்பட்டது. அன்று வெளியிட்ட விக்கிரக நாணயம்தான் இப்போதும் புழக்கத்தில் இருக்கிறது.

ஆனால் விக்கிரகம் அச்சடிப்பது நிறுத்தப்பட்டுவிட்டது.

ஜாமக்காரன் வாசகர்களுக்கு இவ்விவரம் அறிவிக்கவும்.

- ஜாமக்காரன் வாசகர்.

ஆலோசனை - ஜெபத்துக்கு தொடர்புக்கொள்பவர்கள் கவனிக்கவும்:

ஒவ்வொரு மாதத்திலும் வாரத்தில் செவ்வாய்கிழமை முதல் புதன் மதியம் வரை மட்டுமே நான் வீட்டில் சேலத்தில் இருப்பேன்.

ஆலோசனைக்கும் - ஜெபத்துக்கும் நேரில் சேலம் (தமிழ்நாட்டுக்கு) வர விரும்புகிறவர்கள், முன்பதாகவே நீங்கள் என்னை சந்திக்க விரும்பும் தேதிகளை கடிதத்தில் குறிப்பிட்டு எழுதி கேட்டு எங்களிடமிருந்து பதில் பெற்றப்பின் அல்லது போனில் தொடர்புகொண்டு சந்திக்கும் நாளை உறுதிப்படுத்திக்கொண்டு வரவும்.

தொலைப்பேசியில் ஆலோசனை பெறுகிறவர்கள் வேதவசன சந்தேகம் கேட்கிறவர்கள், ஜெப குறிப்புகளை பகிர்ந்துக்கொள்கிறவர்கள் காலை 8 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தொடர்புக்கொள்ளலாம்.

(தினசரி மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரை போனில் தொடர்புக்கொள்ள முயலவேண்டாம்.) குறிப்பிட்ட அந்த நேரம் நேரில் வருபவர்களுக்காக ஜெபிக்கும் நேரமாகும். மேலும் அது நாங்கள் ஓய்வு எடுக்கும் நேரமுமாகும்.

அந்த 3 மணி நேரம் எங்கள் தொலைபேசியை ஆஃப் செய்து வைத்து விடுவோம் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன்.

வடஇந்திய ஊழியங்களுக்கு நான் சென்றால் செவ்வாய்கிழமையில் வீட்டில் இருக்கமாட்டேன் என்பதையும் அறியவும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM