இதே இஸ்ரவேலர்கள் (யூதர்கள்) இப்போது பிதாவாகிய யெகோவாவை நோக்கி கண்ணீர்விட்டு கூறுவதாவது: தங்களை விடுவிக்க மேசியாவை அனுப்புகிறேன் என்று கூறிய பிதா ஏன் இன்னும் மேசியாவை அனுப்பவில்லை. பிதாவே! எங்களை விடுவிக்க மேசியாவை சீக்கிரம் அனுப்பும் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் தங்கள் தலையை அந்த பழைய எருசலேம் ஆலய குட்டிச்சுவரில் முட்டிமுட்டி அழுகிறார்கள். அந்த சுவர்தான் இது.

பிதா கூறியபடி மேசியா வந்து மரித்து - உயிர்த்து இப்போது இரண்டாம் முறை உலகத்துக்கு வந்து தனக்கானவர்களையும் மணவாட்டி சபையையும் பரலோகத்துக்கு அழைத்துப்போக எந்த நேரத்திலும் இரண்டாம் முறை வர இருக்கிறார். ஆனால் இந்த யூதர்களோ இன்னும் தங்கள் பெலத்தையும் தங்கள் சாமார்த்தியத்தையும் நம்பி இருமாப்பாய் வாழ்கிறார்கள். தங்களை சுற்றியுள்ள மிகப்பெரிய ஆபத்தையும் தாங்கள் சீக்கிரமே அழிக்கப்படப் போவதையும் குறித்து அறியாமல் இருக்கிறார்கள்.

அதனால்தான் கர்த்தர் நம்மையெல்லாம் நோக்கி எருசலேமுக்காக ஜெபியுங்கள் என்று கேட்டுக்கொள்கிறார். அவர்கள் மனந்திரும்ப வேண்டும் மேசியாவாகிய இயேசுகிறிஸ்துவை தாங்கள்தான் கொன்றோம் என்று ஒப்புக்கொண்டு மனஸ்தாப படவேண்டும் என்று விரும்புகிறார். அவர்கள் தாங்களாக கூடி உட்கார்ந்து எதிரிகளை எப்படி ஜெயிப்பது என்று பேசி பிரயோஜனமில்லை.

அமெரிக்கா உதவி நின்றுபோனது. ஐரோப்பியா உதவி நின்றுபோனது என்றாலும் இடையே நடந்த பெரிய யுத்தத்தில் யூதர்கள் அன்று ஜோர்டானிலிருந்து நூற்றுக்கணக்கில் வீசப்பட்ட அணுகுண்டு தாங்கிய ராக்கெட்டுகளை வானத்திலேயே சுட்டு வீழ்த்தி ஒன்றுகூட இஸ்ரவேலில் விழாமல் தடுத்தத்தை நினைத்து பெருமை கொள்கிறார்கள். அந்த அவர்கள் சாமர்த்தியத்தை நினைத்து நினைத்து பெருமை கொள்கிறார்களே தவிர, அந்த வெற்றிக்கு பின்னால் மேசியாவாகிய இயேசு உண்டு என்று யூதர்கள் சற்றும் உணரவில்லை. இன்னும் யூதர்கள் மனந்திரும்பவும், கர்த்தரை தேடவும் மனதில்லாமல் இருக்கிறார்கள்.

அன்று சங்கீதக்காரன் கூறினான். இஸ்ரவேலே கர்த்தரை நம்பு என்று கூறினான்.

ஆகவே இஸ்ரவேல் நாடு எல்லாராலும் கைவிடப்பட்ட நிலையிலும், பலம் இழந்த நிலையிலும் இப்போது இருப்பதால், வேதத்தை அறிந்த நாம் நம் தேவனின் வேண்டுகோளின்படி இஸ்ரவேலின் இரட்சிப்புக்காக, சமாதானத்துக்காக ஜெபிப்போம்.

(இஸ்ரவேலும், இஸ்மவேலும் ஒரே தகப்பனாகிய ஆபிரகாமின் பிள்ளைகள் ஆவர்).

இயேசு உலகத்தில் வந்தது கிறிஸ்தவர்களுக்காக அல்ல அல்லது யூதர்களுக்காக மட்டும் அல்ல, உலகத்தில் உள்ள எல்லா ஜனத்துக்கும் (Nations) சந்தோஷத்தை உண்டாக்கும் செய்தி என்றுதான் அன்று இயேசுவின் பிறப்பைப்பற்றி தூதர்கள் கூறும்போது அறிவித்தனர். இப்போதுள்ள நாம் யாவரும் ஆதாமிலிருந்து வந்தவர்கள்தான் என்று அறிந்தால் நாம் யார்? யூதர்கள் யார்? என்பது நன்றாக விளங்கும்.

மேலும் இந்தியா, இலங்கையில் உள்ள முதலியார், நாடார், தலித், வன்னியர், செட்டியார் மற்றும் உயர்ந்த ஜாதி போன்ற ஜாதிகளின் பெயரில் உள்ள பிசாசுகளை நாம் துரத்திவிட்டால் நாம் யாவரும் ஆதாம்-ஏவாள் வழிவந்த சந்ததி என்பதை நினைத்து பெருமைக்கொள்பவர்களே உண்மை கிறிஸ்தவர்கள் ஆவார்கள் என்பதையும் உங்களுக்கு ஞாபகப்படுத்தி இந்த கட்டுரையை முடிக்கிறேன்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM