திருச்சி-தஞ்சை CSI திருமண்டலத்தில் உள்ள
கூத்தம்பூண்டி கன்வென்ஷன்

ஒட்டன்சத்திரம் அருகே கூத்தம்பூண்டி என்ற சிறு கிராமத்தில் நடந்த 3 நாள் கூட்டங்கள் கிராம மக்களுக்கு பெருத்த ஆசீர்வாதத்தை இயேசுகிறிஸ்துவின் வசனம்மூலம் கிடைக்கப்பெற்றது. இரண்டு வருடங்களுக்கு முன்பே இக்கூட்டங்களுக்கு தேதி கொடுத்திருந்தேன். கிராம மக்கள் அனைவரும் பல நாட்களாக மிக சிரமப்பட்டு இக்கூட்ட ஏற்பாடுகளை மிக உற்சாகமாக ஏற்பாடு செய்திருந்தனர். ஒட்டன்சத்திரம் CF (Christian Fellowship) ஆஸ்பத்திரியிலிருந்தும் விசுவாசிகளும், டாக்டர்களும் 3 நாட்களும் பங்கெடுத்தனர். கூத்தம்பூண்டி CSI ஆலயம் Rev.எல்லீஸ் என்ற மிஷனரிமூலமாக 90 வருடங்களுக்குமுன் கட்டப்பட்ட சிறு ஆலயம் ஆகும். சுற்றுவட்டராத்தில் 9 கிராம மக்களும் இக்கூட்டங்களில் பங்குகொண்டு ஆசீர்வாதம் பெற்றனர். பெரிய பட்டிணங்களில் நான் பிரசிங்கித்தபோது கிடைக்காத மனதிருப்தியும், சந்தோஷமும் கூத்தம்பூண்டி கிராம கூட்டங்களில் கிடைத்தது. சகோ.ஐயாதுரை அவர்களுடன் அச்சபையிலுள்ள மற்ற விசுவாசிகள் ஒருங்கிணைந்து இக்கூட்டங்களை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். ஞாயிறு காலை (தாராபுரம்) எல்லீஸ் நகர் CSI ஆலயத்தில் காலை ஆராதனையில் பங்கெடுத்தேன். டிஸ்ட்ரிக்ட் சர்ச் கவுன்சில் சேர்மேன் Rev.நளினி இம்மானுவேல் அவர்கள் எனக்கு சால்வை அணிவித்து என்னை கவுரவிக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். Rt.Rev.ஜெயசீலன் (TELC Rtd Bishop) அவர்களும், அவர் துணைவியாரும் ஆராதனையில் உலக பெண்கள் தின சிறப்பு செய்தி அளித்தனர். கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM