இதை ஏன் இங்கு குறிப்பிட்டேன் என்றால் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சகோதரி.ஸ்டெல்லா தினகரன் அவர்களை பத்திரிக்கை ஆசிரியராக வைத்து இயேசு அழைக்கிறார் என்ற பத்திரிக்கை அரசாங்க பதிவு பெற்றது. சகோ.தினகரன் அவர்கள் அரசாங்க வங்கி அதிகாரியாக இருந்ததால் அவர் பத்திரிக்கை ஆசிரியராக இயங்கக்கூடாது. அதனால் சகோதரி.ஸ்டெல்லா தினகரனை பத்திரிக்கை ஆசிரியராக ஆக்கினார். அன்று பத்திரிக்கை வெளியிடும்போது பணத்தேவை மிக அதிகமாக இருந்தது. சகோ.தினகரனின் ஊழியம் பிரசித்திபடாத காலம் அது. காணிக்கை வரவுகள் இல்லை. அப்போது நான் கூறினேன் சாதாரண விலைக்குறைந்த பேப்பரில் இயேசு அழைக்கிறார் பத்திரிக்கையை வெளியிடுவோம் என்றேன். அப்போது அன்று அவர் கூறியதாவது. பிரதர் ஒரு சினிமா விளம்பர நோட்டீஸ்ஸை விலை உயர்ந்த பேப்பரில் அச்சிட்டு விநியோகித்து அதை பார்த்தவர்கள் அதை பார்த்தப்பின் கீழே வீசிவிடுகிறார்கள். ஆனால் நம் பத்திரிக்கை விலை மதிப்பில்லாத வேத வசனத்தை சுமந்து வரும்போது அதை விலைக்குறைந்த சாதராண பேப்பரில் அச்சிட எனக்கு விருப்பமில்லை. பணம் எப்படியும் கர்த்தர் அனுப்ப ஏற்பாடு செய்வார். ஆரம்பத்திலேயே விலை உயர்ந்த பேப்பரில் இயேசு அழைக்கிறார் பத்திரிக்கையை வெளியிடுவோம் என்றார். அன்று தினகரன் கூறியதின் நோக்கமும் அவரின் விளக்கமும் என்னால் மறக்கமுடியாத வார்த்தையாக அமைந்தது. வேத வசனத்துக்கு அந்த காலத்தில் அவர் கொடுத்த மதிப்பு மிக அதிகம். ஆகவே விலை உயர்ந்த பேப்பரில் பத்திரிக்கை வெளியிடவேண்டும் என்ற அவர் கருத்தும் அவரின் நிலையில் ஏற்கப்படவேண்டியதே!.


ஜெபத்தில் பெயர் அழைக்கும் தொழில் நுணுக்கத்தை சகோ.தினகரன் அவர்கள் அமெரிக்கா டிவி ஊழியர்.பென்ஹின் அவர்களிடமிருந்து கற்றதாகும்.

இந்த மறக்கமுடியாத நல்ல நிகழ்ச்சிகள் சகோதரன் அவர்கள் காருண்யா கல்லூரியை ஆரம்பிக்காத காலத்துக்குமுன் உண்மையான ஊழியக்காரனாக ஊழியம் ஆரம்பித்த சகோ.தினகரனின் அந்த ஆரம்ப கால கட்டத்தில் நடந்த நிகழ்வுகளாகும். இதற்கு பிறகு அவருக்கு பணம் பெருக ஆரம்பித்தப்பின், காணிக்கைகள் பெருக ஆரம்பித்தபின் சகோ.தினகரன் வசன உபதேசத்தை விட்டு விலகி அமெரிக்க ஊழியர்கள் பிரன்ஹாம், கேத்தரின் குல்மார், பெனிஹின் போன்றோரின் பொய் வெளிப்பாடு ஊழியத்தில் கவரப்பட்டு அவர்களின் ஊழியவழியை பின்பற்றி கர்த்தரின் வசனத்தை விட்டு வெகுதூரம் விலகிப்போனார்.

அந்த காலத்தில் ஒன்றாக பல இடங்களில் ஊழியம் செய்த சகோ.தினகரனுடன் சேர்த்து மொத்தம் 5 நபர்களில் நாங்கள் நான்கு பேர்கள் மட்டும் ஒன்றாக ஒரே சமயத்தில் அவரை விட்டுவிலகி சுத்த சுவிசேஷம் அறிவிக்கும் ஊழியத்தில் நாங்கள் நான்கு பேரும் உறுதியாக நின்று, இப்போதும் ஊழியம் செய்துகொண்டு இருக்கிறோம். விலைக்கூடிய பேப்பரில், விலை குறைந்த பேப்பரில் பத்திரிக்கை வெளியிடும் விஷயத்தைக்குறித்து அறிவிக்கும் இவ்வேளையில் வாசகர்களுக்காக மறைக்கப்பட்ட பழைய ஆரம்ப கால நிகழ்வுகளை அறிவிப்பது அவசியமானது.

சாம்பல் புதன்

கேள்வி: 2015 ஏப்ரல் மாதம் சாம்பல் புதன்கிழமை என்ற பெயரில் 40 நாட்கள் தபசுகால (லென்டன் டேய்ஸ்) ஆராதனைகள் நம் சபைகளில் நடத்தப்படுகிறேதே!. 40 நாட்கள் என்ற இந்த ஒடுக்க நாட்களின் ஆரம்பநாளை ஏன் சாம்பல் என்ற வார்த்தையை சபையில் உபயோகிக்கின்றனர்?.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM