அப்படியானால் கிறிஸ்துவுக்கு சம்பந்தம் இல்லாமலே இவர்கள் யாவரும் கூட்டங்களிலும், TVயிலும் பல பெயர்களை ஜெபநேரத்தில் அழைக்கிறார்களே!, பல வியாதியின் பெயரை கூறினார்களே! எந்த ஆவியில் இதை செய்தார்கள்?. யோசித்து பாருங்கள்!. இயேசுகிறிஸ்துவே நான் அவர்களுக்கு உதவவில்லை என்கிறார். பின் யார்? இவர்களுக்கு உதவியிருப்பார்? பிசாசுதானே!. ஆம் பிசாசை தவிர வேறு யார் இவர்களுக்கு உதவ முடியும்?.

கை நீட்டினால் விழுகிறார்கள், விரல் நீட்டினால் விழுகிறார்கள், ஊதினால் விழுகிறார்கள்? இப்படிப்பட்ட மேஜிக் வேலைகளை கர்த்தர் ஒருநாளும் செய்யமாட்டார்!.

இந்த ஊழியர்கள் ஜெபத்தில் கூறுவது எல்லாம் தோராய தீர்க்கதரிசனங்கள். தோராய பெயர்கள் ஆகும். மனுஷ ஆவியுடன் - பிசாசின் ஆவியும் இணைந்து இப்படி செயல்படும்.

இந்த நாஸ்டர்டம்ஸ் கிறிஸ்தவன் அல்ல. ஆனால் அவன் கூறியது மிக தெளிவாக நடந்ததே!. பரிசுத்த ஆவியை பெற்றேன் என்று கூறும் இந்த பொய் தீர்க்கதரிசிகளால் ஏன் தெளிவாக தீர்க்கதரிசனம் உரைக்க முடியவில்லை - இவர்கள்தான் போலி ஊழியர்கள்.


இந்திய தலைவர்களைப்பற்றிய நாஸ்டர்டம்ஸ் கூறிய தீர்க்கதரிசனம்:

நாஸ்டர்டம்ஸ் எழுதிய புத்தகத்தில் 6வது அத்தியாயத்தில் 74ம் பாடலில் முன்னாள் பிரதமர் திருமதி.இந்திராகாந்தியின் கொலைப்பற்றி கூறியிருக்கிறார்.

மூன்று புறம் கடல் சூழ்ந்த நாட்டில் பெரும் அதிகாரம் கொண்ட பெண்மணி எதிர்கட்சிகள் ஒற்றுமையின்றி இருப்பதால் தேர்தலில் இழந்த அதிகாரத்தை இந்த பெண்மணி மீண்டும் பெறுவார் என்று எழுதியுள்ளார். அது அப்படியே நடந்ததே!.

மேலும் தன் சொந்த மெய் காப்பாளர்களாலேயே அவர் 67ம் வயதில் கொல்லப்படுவார். இந்த சம்பவம் நூற்றாண்டு முடிய 16 ஆண்டுகள் இருக்கும்போது நடக்கும் என்று எழுதினார். அது அப்படியே நடந்தது.

இந்தியாவில் எமர்ஜன்ஸியினால் தேர்தலில் தோற்றுப்போன இந்திராகாந்தி எதிர்கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் தமக்குள் சண்டைபோட்டுக்கொண்டதால் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதையும் சீக்கியர்களின் பொற்கோவில் ராணுவத்தால் தாக்கப்பட்டபின் 1984ல் இந்திரா காந்தியின் சொந்த சீக்கிய மெய்காப்பாளர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதையும் நாம் அறிவோம்.


ராஜீவ் காந்தி கொலை:

தீடீரென்று வருவார்கள் பயங்கரத்தை நிகழ்த்திவிட்டு மறைந்துபோவார்கள். அந்த கருப்பு நிறப்பெண்ணை நீண்டகாலம் காணமுடியாது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் தூக்கிலிடப்படுவார்கள். (C5-65).

இந்த செய்யுள் முன்னாள் பிரதமர்.திரு.ராஜீவ்காந்தியின் மரணத்தோடு வெகுவாய் பொருந்துகிறது. பயங்கரவாதிகள் திடீரென்று தோன்றினார்கள். அவர்கள் வீசிய வெடிகுண்டுக்கு பிரதமர்.ராஜீவ்காந்தி பலியானார். அந்த வெடி சப்தத்தில் சதிக்கூட்டமும், அதன் தலைவரும் தப்பிவிடுகிறார்கள்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM