பாஸ்டர்.காலேப் ஜாஷ்வாவின் தவறான நியமனம் -அது செல்லாத நியமனம்:

வியாதி படுக்கையில் பாஸ்டர்.சாம்சுந்தரம்

பாஸ்டர்.சாம்சுந்தரம் அவர்கள் வியாதி படுக்கையில் விழுந்தவுடன் அமெரிக்காவில் இருந்த பாஸ்டர்.சுந்தரம் (தலைமை பாஸ்டர்.ஸ்தாபகர்) அவர்களின் பேரனாகிய காலேப் ஜாஷ்வாவை அவசர அவசரமாக வரவழைத்து அவசர கல்யாணம் செய்வதுபோல் ஒரு ஞாயிறு ஆராதனையில் பாஸ்டராக அபிஷேகம் செய்யப்பட்டார். அப்போதே சபையில் உள்ள மூன்று மூத்த பாஸ்டர்மார்களில் யாராவது ஒருவர் தலைமை பொறுப்பெடுக்கவேண்டும் என்று போராட்டங்கள் நடந்தது. அந்த போராட்டம் தோல்வியடைந்தது.

அன்று நான் ஜாமக்காரனில் எழுதியதை வாசகர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன். அநேக போராட்டங்கள் நடுவில் காலேஜ் ஜாஷ்வா அவர்கள் தலைமை பாஸ்டராக நியமனம் நடந்துமுடிந்துவிட்டப்படியால் இனி வாக்குவாதம் பிரச்சனைகள் உண்டாக்காமல் பாஸ்டர்.சுந்தரம் வளர்த்த சபையில் உள்ள பாஸ்டர்கள், கிளை சபை பாஸ்டர்கள் சபை விசுவாசிகள் யாவரும் பாஸ்டர்.காலேப்பை ஊழியத்தில் சமாதானத்துடன் பெலப்படுத்துங்கள். அனுபவம் இல்லாத சிறிய வயதுடைய வாலிபன் ஆகவே சீனியர் பாஸ்டர்கள் அவருக்கு ஆலோசனை அளித்து பழையதை மறந்து நல்லசபை சாட்சியிழந்துவிடாதபடி பாஸ்டர்.காலேப்க்கு மூத்த பாஸ்டர்கள் ஒத்துழைப்பு தந்து சபை வளர உதவுங்கள் என்று எழுதினேன்.


பாஸ்டர்.சாம்சுந்தரம், பாஸ்டர்.காலேப்

ஆனால் அன்றேக்கே காலேபை நியமித்தது செல்லாது நாங்கள் கோர்ட்டுக்கு போகப்போகிறோம் என்றவர்களை தொலைபேசியில் அமைதிப்படுத்தினேன். கோர்ட் போக முயன்றவர்கள் பக்கம் சில நியாயங்கள் இருந்தது. சபையில் எத்தனையோ ஓய்வு பெற்ற மூத்த பாஸ்டர்கள் இருக்கும்போது அருகாமையில் அனுபவமுள்ள பாஸ்டர்.ஹென்றி ஜோசப், பாஸ்டர்.மோகன் ஆகியவர்கள் இருக்கும்போது அவர்கள் காலேப் ஜாஷ்வாவை கைவைத்து தலைமை பாஸ்டராக அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் நடந்ததோ மிகவும் தவறான முன்னுதாரணமாகிபோனது. அதாவது பெந்தேகோஸ்தே சபைக்கு சம்பந்தமில்லாத லூத்தரன், சிஎஸ்ஐ சபையை சார்ந்த ஒரு சுவிசேஷகனான சகோ.ஜான் சாலமோன் ஒருவரை தலைமை பாஸ்டராக நியமிக்க தன் கைகளை வைத்து அபிஷேகிக்க பெந்தேகோஸ்தே சபைகளின் நடைமுறை வழக்கத்தில் இல்லாத ஒன்றாகும். அது பெந்தேகோஸ்தே சபைகளில் ஏற்றுக்கொள்ளாத சம்பவமாக அமைந்துவிட்டது.

சகோ.ஜான் சாலமோன் அவர்கள் என்னை போல் ஒரு சாதாரண சுவிசேஷகன் ஆகும். அதுவும் பெந்தேகோஸ்தே அல்லாத சபையை சார்ந்த ஒருவர் இத்தனை பிரம்மாண்ட முக்கிய சபைகளுக்கு தலைமை பாஸ்டர் பொறுப்புக்கு ஒருவரை கைவைத்து அபிஷேகிக்க பெந்தேகோஸ்தே சபைகளின் அனுபவ சட்டம் இடம் கொடுக்கவில்லை.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM