குறிப்பு: இது கிறிஸ்தவர்களுக்காக மட்டும் வெளியிடப்படுகிறது. வாசிக்கிற நீங்கள் மறுபடியும் பிறந்தவர்களானால் இதை கைபிரதியாக அச்சிட்டு கிறிஸ்தவர்களுக்கு மட்டும் விநியோகிக்கிலாம்.

நீங்கள் மீண்டும் பிறக்கவேண்டும்
(YE MUST BE BORN AGAIN)
  Selected

நாம் மீண்டும் பிறவாவிட்டால் மகிமையின் வாசல் நமக்கு அடைக்கப்பட்டிருக்கும் என்று இயேசு சொல்கிறார். எனவேதான் நாங்கள் வினவுகிறோம். நண்பரே, நீர் மீண்டும் பிறந்தீரா? சபை அங்கத்தினரே, நீர் மீண்டும் பிறந்தீரா? இல்லையென்றால் நீர் இழந்துபோகப்பட்டவரே, ஏனெனில் இயேசுவே "..... ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்ஜியத்தைக் காணமாட்டான்" என்றார் யோவ 3:3. உண்மையாகவே யாரும் பாவியாக இறந்துப்போகவோ, அழிந்துப் போகவோ விரும்பமாட்டான். எனவே நம் கர்த்தரும் அதை விரும்பமாட்டார். துன்மார்க்கன் துன்மார்க்கத்தில் சாகிறது எனக்கு எவ்வளவேனும் பிரியமோ? அவன்தன் வழிகளைவிட்டுத்திரும்ப பிழைப்பது அல்லவோ எனக்கு பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். எசே 18:23,33:1. நீர் மறுபடியும் பிறக்கவேண்டும்.

மீண்டும் பிறத்தல் என்றால் என்ன? என்று நீங்கள் கேட்கலாம். முதலாவது இது என்ன அல்ல என்று பார்ப்போம். மீண்டும் பிறத்தல் என்பது ஞானஸ்நானம் அல்ல என்று புரிந்துக்கொள்ள வேண்டும். சிலர் இன்றும் ஞானஸ்நானம் பெற்றுவிட்டால் பரலோகம் போய்விடலாம் என்று தவறாக கருதுகிறார்கள். ஆனால் ஞானஸ்நானம் எடுத்தும் அவர்கள் மறுபடியும் பிறக்கவில்லை. (அப் 8:18-25) என்றால் நிச்சயம் பரலோகம் போகமுடியாது. மறுபடியும் பிறந்த அனுபவம் இல்லாமல் சபையில் அங்கத்தினராய் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யாரானாலும் உண்மை கிறிஸ்தவர்கள் கிடையாது. ஏனெனில் சிலர் ஞானஸ்நானம் என்ற பெயரில் மனந்திரும்பின அனுபவம் இல்லாமல் பக்கவழியாய் சபையில் அங்கத்தினானக இணைந்துவிடுகின்றனர். (கலா 2:4). அப்படிப்பட்டவர்கள் எத்தனை வருட சபை அங்கத்தினனாக இருந்தாலும் கர்த்தருடைய பந்தியில் பங்குக்கொள்ளக்கூடாது. ஏனெனில் சிலர் மனந்திரும்பாமல் அபாத்திரமாய் போஜனபானம்பண்ணி தங்களுக்கு தாங்களே ஆக்கினைத் தீர்ப்பை வருவித்துக்கொண்டார்கள். (1கொரி 11:29,30). மனந்திரும்புதல் என்பது சீர்திருத்தலோ, நல்லவனாக வாழமுயற்சிப்பதோ அல்ல.... "இப்படிப்பட்ட நிலையில் அநேகர் பரலோகத்தில் உட்பிரவேசிக்க வகை தேடினாலும் அவர்களால் கூடாமற்போகும்...." லூக் 13:24. சிலர் மனந்திரும்புதல் அனுபவம் இல்லாமல் மணிக்கணக்காக ஜெபிப்பார்கள். ஜெப கூட்டங்களையும் நடத்துவார்கள். அந்த ஜெபம் கேட்கப்படாது. ஏனெனில் இயேசு சொல்கிறார். "இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து தங்கள் உதடுகளினால் என்னைக்கனம் பண்ணுகிறார்கள். அவர்கள் இருதயமோ எனக்கு தூரமாய் விலகியிருக்கிறது." மத் 15:8.

மேலும் சிலர் சொல்லலாம் "என்னால் முடிந்த யாவற்றையும் செய்ய முயல்வேன்; ஏழைகளுக்கு ஈந்து நோயாளிகளைச் சந்தித்து என்னால் முடிந்த எல்லா நன்மைகளையும் ஒவ்வொரு நாளும் செய்தால் அது மனம் திரும்புதல் ஆகாதா? ஆகாது!. அது சன்மார்க்க ஜீவியம் ஆகும். அவர்களால் நான் உண்மையாகவே மீண்டும் பிறந்தவன்" என்று எந்த அனுபவத்தையும் அவர்கள் வாயினால் குறிப்பிடமுடியாது.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM