ஆனால் அந்த மறுபிறப்பின் அனுபவத்துக்கு எவ்வளவு நாளாகும். புதுப் பிறப்பிற்குபிறகு நான் வளர வேண்டாமா?. நாம் இயேசுவினிடம் கிருபைக்காகவும், மன்னிப்புக்காகவும் வரும்போது அந்த கணத்திலேயே நீங்கள் கேட்டவைகளை யாவும் மறுபடியும் பிறந்த அனுபவமும் உடனே கிடைத்து விடுகிறது.

கடைசியாக நான் மறுபடியும் பிறந்ததை எங்ஙனம் அறிவேன்?. என்ற கேள்விக்கு "நீங்கள் விசுவாசமுள்ளவர்களோவென்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள். உங்களை நீங்களே பரீட்சித்துப்பாருங்கள் என்று வேதம் கூறுகிறது. இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறரென்று உங்களை நீங்களே அறியீர்களா? நீங்கள் பரீட்சைக்கு நில்லாதவர்களாயிருந்தால் அறியீர்கள்" என்று பவுல் 2 கொரிந்தியர் 13:5ல் போதிக்கிறார்.

எனவே மறுபடியும் பிறவாத அனுபவமுள்ளவர்களை பிசாசு பரீட்சிக்கும்போது அவர்கள் பாவத்தில் செத்து இழந்துப்போனவர்களாக, நியாயந்தீர்க்கப்பட்டவர்களாக, தீய மனச்சான்று உடையவர்களாக, மாம்ச நோக்குடையவர்களாக, நம்பிக்கை இழந்தவர்களாக, கீழ்ப்படியாதவர்களாக இந்த உலகில் தேவனில்லாதவர்களாக பழைய பாவத்தை திரும்பத்திரும்ப செய்பவர்களாக, சாத்தானின் பிள்ளைகளாகவே இருப்பார்கள் என்று திருமறை போதிக்கின்றது.

மாறாக, மறுபடியும் பிறந்த கிறிஸ்தவன் தேவனின் பிள்ளையாக மாறுகிறான். அவன் கிறிஸ்துவில் உயிருள்ளவன், இரட்சிக்கப்பட்டவன், தண்டனைக்கு தப்பினவனாக, நல்ல மனச்சான்றுமுள்ளவன், பரிசுத்த ஆவியினால் நிறைந்தவனாக, ஆவிக்குரிய நோக்கமுள்ளவனாக, விசுவாசமும் நித்திய வாழ்வைப்பற்றிய நம்பிக்கையுள்ளவனாக அறியப்படுகிறான். அப்படிப்பட்ட அவர்களுடைய பாவங்கள் அழிக்கப்பட்டு, அவர்கள் இயேசுவின் இரத்தத்தினால் சுத்திரிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். அவர்கள் மனிதபுத்திக்கெட்டாத சமாதானமும், அன்பும் நிறைந்தவர்கள் ஆவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மனதில் குற்ற உணர்வு இருக்காது. அவர்கள் கர்த்தருடைய சித்தத்தை ஆசித்து, விரும்பி அதைச் செய்ய சக்தியும் உள்ளவார்களாக இருப்பார்கள். அவர்கள் மரணத்துக்கு பின்பும் ஒரு நம்பிக்கையை உடையவர்களாக இருப்பார்கள். "நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து, உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்" யோவான் 14:3 என்ற வாக்குத்தத்தைப் இவர்கள் அப்படியே நம்புவார்கள். ஆகையினால் இத்தகைய மாற்றத்தை நாம் நம் வாழ்க்கையில் பெறும்போது நாம் மறுபடியும் பிறந்துள்ளளோம் என்பதை அறியாமல் இருக்கமுடியுமா? நிச்சயம் நீங்கள் அதை அறியாமல் உங்களில் உணராமல் இருக்கமுடியாது. ஏனெனில் "நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே நம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கிறார்" ரோம 8:19. இந்த உன்னத அனுபவத்தையும் ஆத்துமாவில் இவ்வாழ்க்கையையும், நீங்கள் அனுபவத்திராவிட்டால் ஏனோதானோவென்று இருக்கவேண்டாம். ஏனெனில் அப்படி இந்த உன்னத அனுபவத்தை அனுபவிக்க நீங்கள் ஆசைபடவிட்டாலும் நீங்கள் தேவனையும் உங்கள் ஆத்துமாவையும் அலட்சியப்படுத்துகிறீர்கள் என்று கருதப்படுவீர்கள். நீர் மீண்டும் பிறக்கவேண்டும்!. சீக்கிரம்!.

நீங்கள் மறுபடியும் பிறவாவிட்டால் மரித்தபின் பரலோகம் போகமுடியாது. யோ 3:3.

சபையில் ஒருவர் அங்கத்தினானாகவேண்டுமானாலும் மறுபடியும் பிறந்த அனுபவம் இருந்தால்தான் உண்மையான அங்கத்தினன் என்று அழைக்கப்படுவீர்கள். அந்த மறுபடியும் பிறந்த அனுபவம் உள்ளவர்களுக்கு சாவுபயம் இருக்காது. தோல்வியில், நிராசையில் வியாதியில் சோர்ந்துபோகமாட்டார்கள்.

அன்பானவர்களே, இந்த மறுபடியும் பிறந்த அனுபவத்தை உயிரோடு இருக்கும்போதே இதை வாசிக்கிற நீங்கள் பெற்றுக்கொள்ளுங்கள். மரித்தபின் யாரும் இந்த நல்ல அனுபவத்தை பெறவேமுடியாது. மனிதனுக்காக கர்த்தர் ஒரே ஒரு வாழ்க்கையைத்தான் அனுமதித்துள்ளார். அந்த ஒரு வாழ்க்கையில் மறுபடியும் பிறந்த அனுபவத்தை பெற்றுக்கொள்வது மிக முக்கியம். கர்த்தர்தாமே இந்த அனுபவத்தை பெற உங்களுக்கு உதவுவாராக.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM