இழிவானவர்கள் உடலளவிலோ, மனதளவிலோ தொல்லை கொடுக்க யாரும் இடமளிக்கக்கூடாது. யாரும் உங்களைத் தங்கள் விருப்பப்படி பந்தாடக்கூடாது. சுய கௌரவமென்பது ஒவ்வொருவரது உரிமை. எப்போது சுய உரிமைக்காய் வாதாடவேண்டும். எப்போது அமைதி காக்க வேண்டும் என்பதை நெடுநாள் அனுபவங்கள் வீசும் வெளிச்சத்தில் கண்டறியலாம்.


5. நான் தேவனைச் சேவிக்க முடியாது:

ஏன் முடியாது? கணவன், பிள்ளைகள், பெற்றோர், மாமியார், மாமனாரைக் கவனித்து வீட்டைப் பேணுவதும் தேவ சேவை என்பதை முதலாவது புரிந்துக்கொள்ளவேண்டும். கூட்டுவதும், கழுவுவதும் அதற்குக் குறைவல்ல. நற்செயலர்கள், பிள்ளைகளைப்பேணுதல், அந்நியரை உபசரித்தல், ஊழியருக்கு உதவி செய்தல், துன்பப்பட்டோரின் துயர்துடைத்தல், வீட்டை நடத்துதல் யாவும் பெண்கள் ஊழியங்களாகும் (1 தீமோ 5:10-14). எப்பக்கத்திலிருந்தும் (பலமுறை கணவர் உட்பட) சோர்பு, குற்றச்சாட்டு, கிண்டல் போன்றவற்றை ஒரு பெண் தொடர்ந்து சந்திப்பதால் அந்த சூழ்நிலையில் அவள் ஊழியம் செய்வது கடினம். இதற்கெல்லாம் மேல் அவள் எழும்புகிற அளவு அவளுக்கு ஆன்மீக வலிமை இன்றேல் அவள் அதிகம் சாதிக்க முடியாது.

தெபொராளைப் பாருங்கள். "நான் பெண், யுத்தத்திற்கு எப்படிச் செல்வேன்?" என்று தயங்கியிருந்தால் என்னவாகியிருக்கும்? பாராக் செய்தது அதுதான். அவனுக்கு தேவன் மேலோ தன்மேலோ நம்பிக்கை கிடையாது. ஆகவே தேவன் வேறொருவரைத் தேடி பெண்ணாகிய தெபொராளைக் கண்டுபிடித்தார். அவள் தன் குடும்பத்தைப் பராமரித்ததோடு இஸ்ரவேலுக்கு நியாயாதிபதியுமாயுமிருந்தாள்.

தேவன் அவளைப் போருக்கு அழைத்தார். "ஓ.கே" என்றாள். அவளால் முடியுமா? அவளாலல்ல. அவளை அழைத்த தேவனின் பெலத்தினால் முடிந்தது. போரில் நடந்ததென்ன? நடந்த அற்புதங்களைப் பாருங்கள்.......

மக்கள் மனப்பூர்வமாய்த் தங்களை ஒப்புக்கொடுத்து அவளுக்கு உதவினார்கள் (நியா 5:2). பூமி அதிர்ந்தது (வச 4) வானம் சொரிந்தது பர்வதங்கள் கரைந்தன. நட்சத்திரங்கள் தங்களை அயனங்களிலிருந்து சிசராவோடே யுத்தம் பண்ணின. ஆற்றுவெள்ளம் எதிரிகளை அடித்துக்கொண்டுப் போயிற்று. எதிரி குதிரைகளின் குளம்புகள் பிளந்துப்போயின. வேறொரு பெண் யாகேல் சிசெராவைக் கொன்றுப்போட்டாள். தெபொராள் செய்தது ஓ.கே ஒன்றுதான்.

ஒரிசாவில் பட்டினியால் வாடுவோர், வீடற்றோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவிசெய்ய தேவன் என்னை அழைத்தபோது மலையைப் பார்த்து மலைத்து நின்ற எலியைப்போல் தடுமாறினேன். தெபொராளுக்கு நடந்ததே எனக்கும் நடந்தது. எண்ணற்றோர் வந்துதவினர். இன்று நமது மிஷனரிகள் அங்கு அற்புதமாய் சேவை செய்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் பயனடைகின்றனர்.

தேவனுக்கு "ஓ.கே" என்று தலையசைப்பீர்களானால் உங்கள் வாழ்வில் பூங்காற்று வீசும். "ஓ.நோ" ஆண்டவரே, என்று சொல்லிக்கொண்டிருக்கிறீர்களா? பலர் தேவனது அழைப்பை அல்லத்தட்டி நிற்கிறீர்கள். தலை வணங்கி, "இதோ வருகிறேன்" என்று சொல்வீர்களா?.


6. இந்த இடியில் நான் பிழைக்கமாட்டேன்:

நிச்சயமாய் பிழைப்பீர்கள். நோய், பேரிழப்பு, துயரம், ஏமாற்றம், பிரிவு, நஷ்டம், விபத்து, உதிரும் திருமணம் இவை நம்மை இடியாய்த் தாக்கும்போது, வாழ்க்கைப்படகு கவிழ்ந்து துணிவை அவித்துப்போடலாம். நானும் இருந்தென்ன, வாழ்க்கை வாழ்ந்தென்ன என்று நானுமே நினைத்த நாட்களுண்டு. பல செக்குகளை இழுத்து வந்திருக்கிறேன். ஆனால் இன்றோ தலையில் விழுந்த ஒவ்வொரு இடியும் கற்பித்தப் பாடங்களினால் ஆன்மீகத்தில் செல்வச்சீருடன் அகமகிழ்கிறேன்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM