கிறிஸ்தவ நாடாகிய அமெரிக்காவில் நான் கிறிஸ்தவனே அல்ல என்று என் முன்னேற்றத்தை தடுக்க சிலர் வதந்திகளை பரவவிட்டார்கள். வேறு சிலர் ஒபாமா ஒரு முஸ்லீம் என்றும் பொய் பிரசரங்களை செய்தார்கள். அந்த வதந்திகளை நம்பின பலர் நான் போகும் இடமெல்லாம் இவைகளைக்குறித்து கேள்வி எழுப்பி என் பிறப்பைக்குறிப்பிட்டு அவமானப்படுத்த முயன்றார்கள். உலகில் நாம் தேடும் அமைதி என்பது மனிதனின் இதயத்திலிருந்துதான் ஆரம்பமாகிறது என்பதை நாம் எல்லாரும் உணர வேண்டும்.

கடைசியாக ஒபாமாவின் உச்சக்கட்ட செய்தியாக அவர்கள் கூறி முடித்தது என்னவென்றால், ஒவ்வொரு மனிதனும் தன் மத நம்பிக்கையை எந்தவிதமான அச்சமும், பாகுபாடும் இல்லாமல் தொடர இந்த நாட்டில் உரிமையுள்ளது. அதே நேரத்தில் மத அடிப்படையில் இந்தியா பிளவுபடாதவரை இந்தியா வெற்றி பெறுவது நிச்சயம் என்றார் (அதன் அர்த்தம் மத அடிப்படையியல் இந்திய பிளவுபட்டதேயானால் எந்த முன்னேற்றமும் அடையமுடியாது என்பதே) மேலும் அவர் குறிப்பிட்டதாவது இந்திய அரசியல் சட்டத்தின் 23வது பிரிவானது இந்தியாவில் வாழும் அனைவரும் தங்களின் மத நம்பிக்கைகளை தடையின்றி தொடர அந்த சட்டம் மக்களுக்கு சுதந்திரம் அளிக்கிறது. அந்த நம்பிக்கைகளை விருத்தி செய்யவும் சுதந்திரம் அளிக்கிறது. இந்தியா-அமெரிக்கா மட்டுமல்லாமல் அனைத்து உலக நாடுகளும், மத சுதந்திரத்தை பேணிக் காக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. அது ஒவ்வொரு நபரின் கடமையாகும் என்று தன் நீண்ட உரையை கூறி முடித்தார்.

இந்தியாவில் குடியரசு தினத்தில் ஒரு வெளிநாட்டு ஜனாதிபதி இத்தனை நீண்ட நேரம் பிரசங்கம் நிகழ்த்தியது கிடையாது. இந்தியாவின் தற்போதைய மதவெறி உள்ள தலைவர்களையும் அவர்களின் செயல்களையும் மனதில் கொண்டு அதன் அடிப்படையில்தான் மேலே கூறிய முக்கிய ஆலோசனைகளை செய்தியாகவும் இந்திய நாட்டு தலைவர்களுக்கு ஒரு எச்சரிப்பாகவும் மிக தைரியமாக ஒபாமா கூறி அமர்ந்தார். அவர் நிகழ்த்திய பிரசங்கத்தில் நம் நாட்டு சட்டங்களைப்பற்றியும் அவைகளை மிகத்தெளிவாக படித்தறிந்து இந்திய அரசியல் சட்டத்தின் 23வது பிரிவை தெளிவாக அவர் மேற்கோள்காட்டி பேசியது இந்திய தலைவர்களுக்கு குறிப்பாக BJP, RSS போன்ற தலைவர்களுக்கு ஒபாமாவின் அந்த பேச்சு பெரும் அதிர்ச்சி வைத்தியமாக அமைந்தது என்றால் மிகையாகாது.


மற்றொரு இடத்தில் ஒபாமா பேசியது:

ஒபாமா மற்றொரு நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் அவர் குறிப்பிட்டதாவது: நானும், என் மனைவி மிச்செலும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். இந்தியா மிக அற்புதமான, அதேசமயம் பலமுக தன்மைகொண்ட அழகான நாடாகும். இந்தியாவின் ஒவ்வொரு கலாச்சாரத்தையும், நானும் என் மனைவி மிச்செலும் கண்டு வியந்துபோனோம்.

ஆனால் மனம் வருந்தக்கூடிய விஷயமாவது என்னவென்றால்: இந்தியாவில் சில காலங்களாக பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களின் மதகோட்பாடுகளை அவர்களின் கலாச்சார நிகழ்ச்சிகளை மாற்ற முயற்சி செய்யும் விதமாக இந்து மதத்தில் உள்ள சிலர் மற்ற மதத்தினரை குறிவைத்து தொடர்ந்து தாக்குகிறார்கள். இப்படிப்பட்ட சம்பவங்கள் இந்தியாவில் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியாவில் நிலவும் இப்படிப்பட்ட மத சகிப்புத்தன்மை இல்லாத நிலையை இந்திய நாட்டின் விடுதலைக்காகவும், சுதந்திரத்துக்காகவும் பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்கள் உயிரோடிருந்து இவைகளைப் பார்க்க நேர்ந்தால் அவர் மிகவும் அதிர்ந்துபோயிருப்பார் என்றார். இவரின் இந்த பேச்சு BJP, RSS மற்றுமுள்ள மத தீவிரவாத தலைவர்களுக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


பிரதமர்.மோடி அவர்களின் திடீர் மனமாற்றம்:

திரு.மோடி அவர்கள் சிறு பையனாக டீ கடையில் கூலி வேலை செய்துகொண்டிருக்கும் போதே இந்துமத வைராக்கியம் மனதில் ஆழமாக பதித்துக்கொண்டவர். அந்த சிறுவயதிலேயே RSS என்ற இந்துமத தீவிரவாத இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு இந்துத்துவம் என்ற இந்துமத தீவிரவாத மதவெறியை மனதின் ஆழத்தில் பதித்துக்கொண்டவர்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM