பெனிஹின் முதல் எண்ணிக்கைக்கு அடங்கா பொய் தீர்க்கதரிசிகள் மிக ஏராளம். இவர்கள் அல்லாமல் ஒவ்வொரு பெந்தேகோஸ்தே சபைகளிலும் அந்நியபாஷை பேசும் நேரங்களில் ஏராளமான பொய் தீர்க்கதரிசிகளாக அந்த சபை விசுவாசிகளையும் பாஸ்டர்களையும் பார்க்கலாம். இவர்கள் கூறும் தீர்க்கதரிசனத்தில் உரைக்காத விவரங்களே கிடையாது. புற்றீசல்போல தமிழ்நாட்டிலும் பொய் தீர்க்கதரிசிகள் பெருகிவிட்டனர். இதைத்தான் பழைய ஏற்பாட்டின் காலத்திலேயே நடந்ததாக வாசிக்கிறோம். எரே 14:14.

அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள். நான் அவர்களை அனுப்பியதுமில்லை அவர்களுக்கு கற்பித்ததுமில்லை! அவர்களோடே பேசினதுமில்லை..... அவர்கள் தங்கள் இருதயத்தின் கபடத்தை உங்களுக்கு தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள். எரே 14:14.

தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறவர்களோடே நீ சொல்ல வேண்டியது என்னவென்றால் ....... ஒன்றும் தரிசியாதிருந்தும் தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ!.

நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும் போது.... பொய்க் குறியைச் சொல்லுகிறீர்கள். ஆகையால் நான் உங்களுக்கு விரோதமானவர் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார். எசே 13:2,3,7. மேலே பெயர்கள் குறிப்பிட்ட ஊழியர்கள் இவர்களோ இன்னும் பல பொய் தீர்க்கதரிசிகளுக்கு கர்த்தர் விரோதமானவர் என்று கர்த்தர் குறிப்பிடுகிறார்.

மேலே கூறப்பட்ட பொய் தீர்க்கதரிசனம் கூறும் நபர்கள் பழைய ஏற்பாட்டின் காலத்திலேயே இருந்தார்கள். ஜனங்களிடம் கர்த்தர் தன்னிடம் சொன்னார் என்று சொல்லி ஏமாற்றினார்கள். இன்றும் அதேதான் நடக்கிறது.

தங்களுடைய ஆவியின் ஏவுதலை பின்பற்றுகிறார்கள் என்று மேலே காணப்பட்ட வசனத்தில் குறிப்பிடுவதுதான் மனுஷ ஆவி என்பது ஆகும்.

ஜெபத்தில் பெயர் அழைக்கிறார்களே இவர்களெல்லாருமே மனுஷ ஆவியினால் ஜெபத்தில் ஆட்களின் பெயரையும், வியாதியின் பெயரையும் அழைப்பார்கள். 10 பெயர்கள் கூறினால் 5 பெயர்கள் சரியாக இருக்கும். இவ்விஷயத்தில் பிசாசின் ஆவி இவர்களுக்கு உதவ துணையாக இருக்கும். உடனே இவர்கள் மேடையில் பெயர் கூறியவுடன் அந்த சாட்சிகள் மேடை ஏறி வருவதை நீங்கள் காணலாம். இவர்களை புகைப்படம் எடுத்து தங்கள் பத்திரிக்கைகளில் வெளியிடுவதைக் காணலாம். இப்படிப்பட்ட பிசாசின் ஆவியின் ஏவுதலால் உந்தப்பட்டு சாட்சி கூறுகிறவர்கள் இப்போது ஏராளம் - ஏராளம்.

அதனால்தான் மனதில் தோன்றுகின்றதை கூறும் இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று கர்த்தர் நம்மை எச்சரிக்கிறார்.

இயேசுகிறிஸ்துவும் ஜெபத்தில் பெயர்களை கூறி அழைக்கும் இப்படிப்பட்ட ஊழியக்காரர்களைப்பற்றி முன்பதாகவே எச்சரித்தார். ஆண்டவரே, ஆண்டவரே உம்முடைய (இயேசு) என்னும் நாமத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தோமல்லவா! பிசாசுகளை துரத்தினோம் அல்லவா அற்புதங்களை செய்தோம் அல்லவா! என்பார்கள். எல்லாமே இயேசுவின் நாமத்தில்தான் இவர்கள் ஜெபத்தில் பெயர்களை அழைத்தார்கள். ஆனால் இயேசுவோ இவர்களைப் பார்த்து உங்களை நான் அறியேன் என்று கூறி அக்கிரம செய்கைக்காரர்களே என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்கு சொல்லுவேன் என்று கூறினார். மேலும் அவர்களைப் பார்த்து உங்களை நான் ஒருகாலும் அறியேன் என்பாராம். மத் 7:22,23.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM