இது எப்படி சாத்தியமாகும்?. நாஸ்டர்டம்ஸ் கடவுள் பக்தி இல்லாதவன். எந்த கடவுளையும் வணங்காதவன். ஆனால் இப்படிப்பட்ட தீர்க்கதரிசனம் எப்படி இவன் மூலம் உரைக்கப்பட்டது. இவன் எழுதியது அத்தனையும் நிறைவேறியது. இன்றளவும் உலக மதவாதிகளும், உலக ஞானிகளும் இவரைப்பற்றியும் இவர் கூறிய தீர்க்கதரிசனங்களும் எப்படி நடக்கிறது என்பதை குறித்தும் விளங்காமல் தவிக்கின்றனர்!.

இப்போது இந்த நாஸ்டர்டம்ஸ் பற்றி நான் ஜாமக்காரனில் எழுத காரணம் என்ன? என்று உங்களில் பலர் யோசிக்கலாம்.

இவன் கிறிஸ்தவன் அல்ல, பக்திமானும் அல்ல, இந்த அற்புதங்கள் எதுவும் பரிசுத்த ஆவியினால் நடப்பதல்ல என்பது தெளிவு. அப்படியானால் வேறு எந்த ஆவி இப்படிப்பட்ட அற்புத வெளிப்பாடுகளை தீர்க்கதரிசனங்களை கூறுகிறது? அது அசுத்த ஆவியேயன்றி வேறென்ன?.


மூன்றுவிதமான ஆவிகள்:

1). பரிசுத்த ஆவியானவரின் கிரியை
2). பிசாசின் ஆவியின் கிரியை
3). மனித ஆவியின் கிரியை
ஆகிய மூன்று ஆவிகளில் ஏதாவது ஒரு ஆவியின் கிரியைகள் இப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்களை வெளிப்படுத்த முடியும்?.


பரிசுத்தாவியானவரின் தீர்க்கதரிசனம்:

நம் கிறிஸ்தவ வேதத்தில் வாசிக்கும் தீர்க்கதரிசனங்கள் தானியேல் முதல் யோவான் வரை கூறப்பட்ட தீர்க்கதரிசனங்களை நாம் அறிவோம். இவைகள் யாவும் பரிசுத்த ஆவியானவரால் அறிவிக்கப்பட்ட தீர்க்கதரிசனமாகும்.

வேதத்தில் ஆவியானவரால் கூறப்பட்ட தீர்க்கதரிசனம் எல்லாம் மனிதர்களை, ராஜாக்களை எச்சரிப்பதற்காகவும், குற்றங்களை சுட்டிக்காட்டவும் உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனங்களாகும். ஒன்றாவது ஆறுதல் கூற உரைக்கப்பட்ட தீர்க்கதரிசனமல்ல என்பதை கவனிக்கவும்.

இன்றைய கள்ள ஊழியர்கள், பாஸ்டர்கள் யாவரும் குறிப்பாக நாலுமாவடி, ஆலன்பால், தினகர குடும்பங்கள், சகோ.தினகரன் பயிற்சிவித்து கெடுத்த தீர்க்கதரிசன ஊழியர்களில் யாராவது கூட்டங்களில் குற்றம் செய்தவரின் பெயரை குறிப்பிட்டு சொல்லி தீர்க்கதரிசனமாக உரைத்தவர்கள் இவர்களில் யாராவது ஒருவரை காட்டமுடியுமா?. எயிட்ஸ் வியாதி சுகமானது என்று பெயரை குறிப்பிட்டு கூட்டத்தில் பகிரங்கமாக கூறிய அந்த தீர்க்கதரிசனமும் பொய்யானது. அவனுக்கு எயிட்ஸ் சுகமாகவில்லை. சர்க்கரை வியாதி சுகமாகவில்லை. ஆனால் இவர்களுக்கு ஏன் மக்களின் குற்றங்களை சுட்டிக்காட்டும் தைரியம் இல்லாதுபோயிற்று?. இவர்களை நாம் ஏன் கள்ளதீர்க்கதரிசிகள் என்று ஏன் பகிரங்கமாக கூறக்கூடாது?

தீர்க்கதரிசனம் என்றால் கர்த்தரின் வார்த்தை. தீர்க்கதரிசி என்றால் கர்த்தரின் வார்த்தையை உரைக்கிறவன் என்று அர்த்தம். இதை விசுவாசிகள் குறிப்பிட்ட ஊழியர்களுக்கு மூளையில் உரைப்பதுபோல் கூறுங்கள். திருந்துவார்களா என்று பார்க்கலாம்.


மனுஷ ஆவியின் தீர்க்கதரிசனம்:

இன்றைய ஊழியர்கள் சகோ.DGS.தினகரன், பால்தினகரன், மோகன் சி.லாசரஸ், ஏஞ்சல் டிவி சாது செல்வராஜ், வின்சென்ட் செல்வகுமார், எசேக்கியல் பிரான்சிஸ், ஜான் சாலமோன், ஜவஹர் சாமுவேல், கார் தொழிலதிபர் ஸ்டீபன், தமிழ்நாட்டில் இன்னும் நூற்றுக்கணக்கான மனிதஆவி தீர்க்கதரிசிகள் பெருகிவிட்டார்கள். சிங்கப்பூரில் டிவியில் தமிழ் கிறிஸ்தவ செய்தி அளிக்கும் ஊழியர்கள், மலேசியா ஊழியர்கள். மேலும் அமெரிக்காவில் உள்ளவர்களைப்பற்றி கூறவே வேண்டாம்!.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM