நாம் உண்மையாகவே வேறொருவராக மாறமுடியாது. "எப்படியென்றால் மாம்ச சிந்தை தேவனுக்கு விரோதமான பகை. அது தேவனுடைய நியாய பிரமாணத்துக்கு கீழ்ப்படியாமலும், கீழ்ப்படியக்கூடாமலும் இருக்கிறது" (ரோம 8:7). நமக்கு ஒரு இருதய மாற்றம் வேண்டும். தீர்க்கதரிசியின்மூலம் தேவன் அதைப்பற்றி சொல்கிறார். "உங்களுக்கு நலமான இருதயத்தை கொடுத்து, உங்கள் உள்ளத்தில் புதிதான ஆவியைக் கட்டளையிட்டு கல்லான இருதயத்தை உங்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்" எசே 36:26 என்று கர்த்தர் சொல்லுகிறார். சரி, அப்படியானால் புதுப்பிறப்பு என்பதுதான் என்ன? என்று நாம் வினவலாம்? ஏன் அதை பிறப்பு என்னும் சொல்கொண்டு அழைக்கிறோம்?.

அந்த பிறப்பை எப்படி? எப்போது? அடைகிறோம்! "மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும்.... " என்று இயேசு சொல்கிறார். யோ 3:6. ஒரு குழந்தை பிறக்கிறது என்றால் இதுவரை இல்லாத ஒன்று புதிதாக பிறக்கிறது என்று அறிகிறோம். அதாவது ஒரு புது வாழ்வு ஆரம்பிக்கிறது. ஒரு புது ஆள். ஆனால் மாம்ச பிரகாரமானவன். அது போன்றே நாம் மறுபடியும் பிறக்கும்போது, கிறிஸ்து இயேசுவில் ஆவியில் ஒரு புது வாழ்வு ஆரம்பிக்கின்றது. இந்த அனுபவம் இதற்கு முன்பு இராததும் அனுபவிக்காததுமாகும். இந்த வகையை ஒப்புநோக்கும்போது, இது மனிதனுக்கு மட்டும் இயற்கையான பிறப்பு போன்றிருப்பதால்தான் இது பிறப்பு என்று கூறப்படுகின்றனது. இது கிறிஸ்து இயேசுவில் நித்தியமான ஒரு புது வாழ்வு, ஏனெனில் "உயிரோடிருந்து விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்" யோ 11:26. இங்கு மரிக்காமல் இருப்பது என்பது ஆத்தும மரணத்தைக்குறிக்கிறது. செத்துபோய்விட்டால் எதையும் விசுவாசிக்க முடியாது. மனந்திரும்பவும் முடியாது. "இவைகள் எப்படி ஆகும்?" என்று நிக்கொதேமுவுடன் நாமும் விளித்து வினவுகிறோமல்லவா? யோ 3:9.

மனிதனால் அது கூடாததுதான் ஆனால் தேவனால் எல்லாம் கூடும் என்று இயேசு தெளிவுப்படுத்தியதை நாம் ஒப்புக்கொள்ளத்தான்வேண்டும். உண்மை சந்தோஷத்தை இழந்த நிலையில் பாரத்தோடு இழிய பாவியாக, மாம்ச இச்சைகள் நிறைந்து இருதய சமாதானமில்லாமல், இருக்கிறேன் என்று நம் பாவத்தை ஒத்துக்கொண்டு இப்படிப்பட்ட நமது துயரத்தில் "இரட்சிக்கப்டுவதற்கு நான் என்ன செய்யவேண்டும்" என்று அந்த சிறைச்சாலைக்காரன் கேட்டதுபோல் நாமும் கர்த்தரிடம் கேட்டால்; அப்போது பேதுரு கூறியதுபோல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி என்ற பதிலை பெற்றுக்கொள்வோம். இந்த குறிப்பிட்ட மனிதன் தனது வாழ்க்கையின் கடைசி எல்லையில் இருந்தான் என்பதையும் நான் எதையும் செய்யத் தயார் என்று அவன் கூறுவதுபோல் தோன்றுகிறது. இதுதான் கர்த்தரிடம் முழுமையாக சரண் அடைவது என்பதாகும். இருதயத்தை காண்கின்ற தேவன் கூறுகிறார். அதாவது, நீங்கள் என்னை நோக்கி ஆண்டவரே! ஆண்டவரே! என்று அழைத்தாலும் கர்த்தர் சொல்வதைச் செய்ய கீழ்ப்படிந்தவராக இருக்கவேண்டும். முழுவதும் அவர் வார்த்தைக்கு கீழ்ப்படிந்து அவருக்காக வாழ்வீர்களா! இல்லையா! என்பதையும் அவர் அறிகிறார். அப்படி நாம் வாழ எதிர்ப்பார்க்கிறார். அப்போதுதான் தேவன் பரிசுத்த ஆவியின் (சங் 51:10) வல்லமையோடு உம்மிடம் வந்து உம்மிலே சரியான ஆவியின் நிலையை உம் உள்ளத்தில் கொண்டுவருவார். இவ்வாறாக நீர் கிறிஸ்து இயேசுவில் அவரை (இயேசுகிறிஸ்துவை) விசுவாசிப்பதின்மூலம் மறுபடியும் ஒரு புது சிருஷ்டியாக பிறக்கிறீர். (2 கொரி 5:7).

"இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்கள்" என்று வேதம் வசனம் கூறுகிறது (எபி 3:7). அதாவது எந்த வயதிலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் கடவுளின் அழைப்பு வருவதை நாம் கேட்போம் என்பதே அதன் பொருள். அந்த கர்த்தரின் வார்த்தைக்கு கீழ்ப்படிந்தால்போதும் தேவனுடைய பிள்ளைகளும், தேவனுடைய சுதந்தரருமாக, கிறிஸ்துவுடனே உடன் சுதந்திரமாக நாம் வாழ்ந்து ஆவியின் மூலம் மறுபடியும் பிறந்தவர்களாக மாறுவோம். (ரோம 8:14-17).


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM