நானும், பாஸ்டர்.சுந்தரம் அவர்களும்

கடிதம் எழுதிய மூன்றாவது நாள் ஜாமக்காரனில் அக்கடித விவரத்தை வெளியிட்டுவிட வேண்டாம் என்ற கடிதம் எனக்கு வந்தது. ஆனால் அக்கடிதத்தின் கையெழுத்து பாஸ்டர்.சுந்தரம் அவர்களுடையதல்ல என்பது எனக்கு தெரியும்.

என் வாசகரும், ASA சபை அங்கத்தினருமான சகோ.ராஜபூஷனம் என்பவருக்கு இவ்விவரங்கள் அனைத்தும் தெரியும்.

சகோ.தினகரன் அவர்களை காருண்யா கல்லூரியை ஆரம்பிக்க கர்த்தர் அழைக்கவில்லை. கவலைப்படுபவர்களுக்கு, வேதனையுற்றவர்களுக்கு, நம்பிக்கையற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் மிக உன்னத பிரசங்க தாலந்தை கர்த்தர் சகோ.தினகரனுக்கு அருளியிருந்தார். ஆனால் கர்த்தரின் அந்த நல்ல திட்டத்தை அவரே தகர்த்து விட்டார்.

இரு எஜமான்களுக்கு வேலை செய்ய சகோ.தினகரன் தீர்மானித்ததால் முக்கிய எஜமானனான இயேசுகிறிஸ்து அவரை விட்டு விலகினார். அதனால் பல பொய் தரிசனங்களை கூறவேண்டிய நிலை அவருக்கு ஏற்பட்டது.

அப்போஸ்தலன் என்பவர் உலக வேலைகளில் சிக்கிக்கொள்ளமாட்டான். உலக பிரகாரமான வேலையை அப்போஸ்தலன் செய்யக்கூடாது. ஆகவே சகோ.தினகரன் அவர்களை அப்போஸ்தலன் என்று அழைப்பது நூற்றுக்குநூறு தவறு ஆகும். அப்படியே வேறு எந்த ஊழியக்காரன் தன்னை அப்போஸ்தலன் என்று அழைத்தாலும் அதுவும் வேத வசனத்துக்கு முரணானதாகும். ஜாக்கிரதை!.


ஆலோசனை - ஜெபத்துக்கு தொடர்புக்கொள்பவர்கள் கவனிக்கவும்:

ஒவ்வொரு மாதத்திலும் வாரத்தில் செவ்வாய்கிழமை முதல் புதன் மதியம் வரை மட்டுமே நான் வீட்டில் சேலத்தில் இருப்பேன்.

ஆலோசனைக்கும்-ஜெபத்துக்கும் நேரில் சேலம் (தமிழ்நாட்டுக்கு) வர விரும்புகிறவர்கள், முன்பதாகவே நீங்கள் என்னை சந்திக்க விரும்பும் தேதிகளை கடிதத்தில் குறிப்பிட்டு எழுதி கேட்டு எங்களிடமிருந்து பதில் பெற்றப்பின் அல்லது போனில் தொடர்புகொண்டு சந்திக்கும் நாளை உறுதிப்படுத்திக்கொண்டு வரவும்.

தொலைப்பேசியில் ஆலோசனை பெறுகிறவர்கள் வேதவசன சந்தேகம் கேட்கிறவர்கள், ஜெப குறிப்புகளை பகிர்ந்துக்கொள்கிறவர்கள் காலை 8 மணியிலிருந்து இரவு 11 மணிவரை தொடர்புக் கொள்ளலாம்.

(தினசரி மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரை போனில் தொடர்புக்கொள்ள முயலவேண்டாம்.) குறிப்பிட்ட அந்த நேரம் நேரில் வருபவர்களுக்காக ஜெபிக்கும் நேரமாகும். மேலும் அது நாங்கள் ஓய்வு எடுக்கும் நேரமுமாகும்.

அந்த 3 மணி நேரம் எங்கள் தொலைபேசியை ஆஃப் செய்து வைத்து விடுவோம் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறேன்.

வடஇந்திய ஊழியங்களுக்கு நான் சென்றால் செவ்வாய்கிழமையில் வீட்டில் இருக்கமாட்டேன் என்பதையும் அறியவும்.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM
Friend Link: Timberland 6 Inch Boots Herren Nike Air Max 2016 Nike ELASTICO Finale III Street TF Adidas Messi 16.3 IC MBT Lami Damen TIMBERLAND CHUKKA BOOTS Adidas Superstar 2 Shoes Friend Link: NIKE ROSHE TWO FLYKNIT SHOES AIR JORDAN 23 Adidas Originals NMD Adidas Yeezy Boost 550 Adidas Tubular Schuhe Adidas Springblade Schuhe ADIDAS D ROSE 7 MEN Friend Link: Adidas Originals Pride Pack Adidas Originals Stan Smith W Adidas Originals ZX 500 Adidas Climacool Boat Lace NIKE AIR FORCE 1 07 HIGH MBT BARIDI WOMEN AIR JORDAN 2 MEN