நாஸ்டர்டாமஸ் தீர்க்கதரிசனம்:

நாஸ்டர்டாமஸ் என்பவர் பிரான்ஸ் நாட்டில் 1503ல் வருடம் பிறந்தவர் படிப்பில் சிறந்தவர் பல்கலை கழகப் படிப்பை முடித்து மெடிக்கல் காலேஜில் படித்து 1525 டாக்டர் பட்டத்துடன் வெளியே வந்தார். மருத்துவ துறையிலும், மிகச்சிறந்த மருத்துவராக விளங்கினார். பல்கலை கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும்போதுதான் ஹிப்னாட்டிசம், ஜோதிடம் சம்பந்தமான புத்தகங்களை படித்து ஆராய்ந்தார். அவரை மிகவும் கவர்ந்த புத்தகம் Faeimo's- De Mysteries Aegyptorium என்பதாகும். இதிலே Face Reading, Hipnotisam, Prophecy Reserch ஆகியவைக்குறித்து ஆராய்ச்சி செய்து அவைகளை பயிற்சிக்க தொடங்கினார். Alchemists என்ற ஜோதிட கலையையும் படித்தறிந்தார். ஆவிகளுடன் பேசுதல் ஆகியவற்றையும் படித்தறிந்தார். அதை நடைமுறையிலும் செயல்படுத்தி பார்த்தறிந்தார். இப்படிப்பட்ட ஆராய்ச்சிக்கு அவருக்கு பிசாசு மிகவும் உதவியாக இருந்தான். ஆகவே வரும் காரியங்களையும் பல வருடங்களுக்குபின் நடக்கப்போகும் காரியங்களையும் நாஸ்டர்டாம்ஸ் கூற ஆரம்பித்தார். அதை கேட்ட மக்கள் பெரிதாக அவைகளை மதிக்கவில்லை. அவைகளை நம்பவும் இல்லை.

ஆனால் 1565ம் ஆண்டில் மூட்டுவியாதி ஏற்பட்டு வீட்டில் முடங்கிகிடந்து ஒருநாள் அவர் குறிப்பிட்ட வருடத்திலேயே மரித்துப்போனார். இவர் தன் வாழ்க்கைச் சரித்திரத்தையும், உலக தீர்க்கதரிசனங்களையும் The Centuries என்ற புத்தகத்தில் எழுதினார். The Centuries என்றால் நூற்றாண்டு என்று அர்த்தம் அல்ல. இவர் எழுதிய புத்தகம் நான்கு வரி பாடல்களாக (Quatraims) தொகுத்து நூறு நூறாக கொண்ட ஒரு தொகுப்பு அல்லது செட் அது பாடல் வடிவத்தில் சில ரகசிய குறியீடுகள் கொண்ட வார்த்தைகளாகவும், விடுகதை போன்ற புதிர்கள் நிறைந்த வார்த்தைகளாகவும் இருக்கிறது. பைத்தியக்காரர்போல் இவர் இப்படி எழுத காரணம், சாதாரணமானவர்கள் அவர் எழுதியதைப் படித்து சுய நலத்துக்காக உபயோகித்து விடக்கூடாது என்பதுதான் காரணம் என்று இவரே தெரிவித்ததாக கூறுகிறார்கள். இவர் Les Prophecies De M.Michel Nosstradamus என்ற நூலையும் எழுதினார். அது The Centuries VIII-X என்ற தொகுப்பாக பிற்காலத்தில் வெளியிடப்பட்டது. இதில் இந்த உலகம் முடியும் மட்டும் என்னவெல்லாம் நடைபெறும் என்ற தீர்க்கதரிசன விஷயங்களை எழுதியிருக்கிறார்.

அதில் முதல் மகா யுத்தம், இரண்டாம் மகா யுத்தம் இவைகளில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் எப்படியிருக்கும் என்பதை தெளிவாக எழுதியிருப்பது உலக மக்களை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. அவர் எழுதியபடியே நடந்தது என்பதுதான் வியப்புக்கு காரணமாகும்.

நாஸ்டர்டம்ஸ் எழுதிய புத்தகத்தில் உலக மக்களை மிகவும் வியப்பில் ஆக்கியது அமெரிக்க அதிபர் கென்னடி சகோதரர்களின் மரணம், அப்துல்லா கொமெனி - மன்னர் ஷா அவர்களின் வெளியேற்றம், ஹிட்லர், முசோலினி ஆகியவர்களைப்பற்றியும் எழுதினார். ஆசியாவில் பூகம்பம், அரேபியாவின் எண்ணெய் கிணறுகள், இந்தியா - பாகிஸ்தான் போர், கப்பல்கள், விமானங்கள் தானே கடலில் வீழ்ந்து மூழ்கும் விவரம் இப்படி பல விவரங்கள் அவர் எழுதியது அப்படியே நிறைவேறின.


Pages « 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 »
Copyright © www.jamakaran.com. All Rights Reserved. Powered by WINOVM